Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10276
Title: 'மலையகம் 200' கிறிஸ்தவ சமூகப் போதனைகளின் பின்னணியில் ஒரு பார்வை
Authors: Jowan, M.
Mery Wini freeda, S.
Keywords: உரிமை;சமூகப் போதனை;திரு அவை;மலையக மக்கள்;மனித மாண்பு
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: இலங்கையில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் 1823ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். 2023ஆம் ஆண்டுடன் இவர்கள் இலங்கைக்கு அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய இவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் கௌரவிக்கப்பட வேண்டும். ஆயினும் மலையகத்தைச் சார்ந்த இம் மக்கள் இலங்கையில் வாழ்ந்த இந்த இரு நூற்றாண்டு கால நினைவையும் ஒரு துக்ககரமான வாழ்வியலாகவே நோக்குகின்றனர். இதற்கான காரணம் என்ன? என்பதே ஆய்வுத்தேடலிற்கு வழியமைத்தது. ஓடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட உணர்வுடன் வாழும் மலையக மக்களின் வாழ்க்கைப் பின்னணியைக் கிறிஸ்தவ கண்ணோட்டத்தில் எடுத்துரைப்பது ஆய்வின் மைய நோக்கமாகும். இதற்கென கிறிஸ்தவ சமய போதனைகளை மையப்படுத்தி அதன் எடுத்துரைப்புகளுக்கமைய மலையக மக்களின் வாழ்வு, மனித உரிமை, மனித மாண்பு எவ்வாறு நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை முன்வைக்கும் விதத்தில் ஆய்வு அமையப்பெற்றுள்ளது. திருவிவிலியம், திரு அவையின் சமயப்போதனைகளில் வெளிப்படும் மனித உரிமை, சமூக நீதி தொடர்பான விடயங்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு தொகுத்தறிவு முறையியலைக் கையாண்டு விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கு அவற்றோடு தொடர்புடைய நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் தரவுகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட மேற்பார்வையாளர்கள், பாடசாரல மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், மலையகம் 200 ஆவது வருடத்தை மையப்படுத்தி செயற்படும் தலைவர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள் போன்றவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மூலம் ஆய்வுக்குத் தேவையான சமகாலப் பின்னணிக்குரிய தரவுகள் பெறப்பட்டுள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10276
Appears in Collections:URSA 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.