Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10218
Title: லூக்கா நற்செய்தி தரும் இயேசுவின் போதனைகளின் விவசாயப் பின்னணி: துணுக்காயப்; பிரதேச விவசாய பின்புலத்தை மையப்படுத்திய ஒரு பார்வை
Authors: Sinthuja, V.
Mery Wini freeda, S.
Keywords: இயற்கை;துணுக்காய்;நற்செய்தி;போதனைகள்;விவசாயம்
Issue Date: 2024
Publisher: University of Jaffna
Abstract: நாட்டினுடைய அபிவிருத்திக்கான முதுகெலும்பாக விவசாயம் காணப்படுகிறது. மனிதன் வெள்ளம், புயல், வறட்சி, இடப்பெயர்வு என்பன உண்டாகும் போதே உணவின் பெறுமதியை அறிகின்றான். எனவே நாடுகளின் அபிவிருத்தியில் விவசாயத்துறைக்குப் பங்குண்டு. குறிப்பாக இலங்கையின் அபிவிருத்தியிலும் விவசாயத்துறையானது பாரிய அங்கம் வகிக்கின்றது. இலங்கை பாரம்பரியமாக உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் விளங்குவதைப் போன்று இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனாவிலும் விவசாயம் முக்கிய அங்கம் பெற்றிருந்தது. குறிப்பாக ஏழைகள் மத்தியிலிருந்த உணவின் தேவை இயேசுவின் போதனைகளே ஆய்விற்கு மையமாகும். திருவிவிலியத்தில் 'கடும் உழைப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை' (சீ.ஞா.7:15) எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு வலுச் சேர்ப்பதாக இயேசுவினுடைய விவசாயம் சார்ந்த போதனைகள் அமைந்துள்ளன. லூக்கா நற்செய்தியிலுள்ள விவசாயத்தை மையப்படுத்திய விடயங்கள் துணுக்காய் பிரதேச விவசாயப் பின்னணியோடு ஒப்பிட்டு நோக்கப்படாமை ஆய்வுத் தேடலிற்கு களம் அமைத்தது. இப் பின்னணியில் துணுக்காய் பிரதேச விவசாயமானது சமகாலச்சூழலில் இறைத் திட்டத்திற்கு ஏற்றதா? அல்லது முரணானதா? என்பது ஆராயப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேச விவசாயத்தை இயேசுவின் விவசாயம் சார்ந்த போதனைகளுடன் ஒப்பிட்டு துணுக்காய் பிரதேசத்தில் விவசாயத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் பரிந்துரைகளை முன்வைப்பதே ஆய்வின் நோக்கமாகும். லூக்கா நற்செய்தியின் விளக்கவுரைகள், சஞ்சிகைகள், நூல்கள் ஊடாக இயேசுவின் போதனைகளில் வெளிப்படும் விவசாயம் சார்ந்த விடயங்கள் உய்த்துணர் முறை மூலம் ஆராயப்பட்டுள்ளன. இதனடிப்படையில் துணுக்காய் பிரதேச விவசாயிகள் மற்றும் விவசாயத் திணைக்கள பொறுப்பதிகாரிகளிடம் நேர்காணல், வினாக்கொத்து, கள ஆய்வு என்பவற்றின் வழியாக துணுக்காய் பிரதேச விவசாயம் சார்ந்த விடயங்களையும் ஒப்பீட்டு முறையில் கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தொகுத்துணர் முறை கையாளப்பட்டுள்ளது. லூக்கா நற்செய்தியின் சமவெளிப் போதனைகள் (லூக்.6:20-26), விதைப்பவன் (லூக்.8:4-8), அறிவற்ற செல்வன் (லூக்.13:13-21), கொடிய குத்தகைக்காரர் (லூக்.20:9-16) போன்ற உவமைகளில் காணப்படும் விவசாயம் சார்ந்த குறிப்புக்களானது பாலஸ்தீன விவசாய முறைகளையும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துரைக்கின்றன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/10218
Appears in Collections:URSA 2024



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.