Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9011
Title: சித்த மருத்துவத்தில் முஸ்லீம்களின் பங்களிப்பு - ஓர் ஆய்வு
Authors: Anpuchelvy, S.
Sritharan, G.
Issue Date: 2009
Publisher: South Eastern University of Sri Lanka
Abstract: சித்த மருத்துவம் தமிழர்களிடையே வளர்ந்து வரும் மருத்துவமாகும். இம்மருத்துவ முறை சித்தர்களால் பரப்பப்பட்டதாகும். சித்தர்கள் மலைகளின் குகைகளில் தங்கி நின்று துறவறம் தாங்கி யோகப் பயிற்சி செய்து தம்மாணவர்களுக்கு யோகம் பயிற்றுவித்துக்கொண்டு உலோகம், பாடாணம், உப்புக்கள், ஆகியவற்றை பச்சிலை, செய்நீர்,திராவகம், துருதி ஆகியவற்றின் உதவிகொண்டு கட்டு, களங்கு. சுண்ணம், செந்தூரம், பற்பம் எனும் உயர்ந்த மருந்துகளைச் செய்து தீராப் பிணிகளைத் தீர்த்துக் கொண்டு வருபவர்கள். அத்துடன் காயகற்பமுண்டு நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு நீங்கியவராய் வலுத்த உடலையும். நிலைத்த உள்ளத்தையும் கொண்டு இரசவாதக்கலை வல்லவர்களானவர்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9011
Appears in Collections:Siddha Medicine



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.