Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8524
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorYogarasa, S.-
dc.date.accessioned2022-11-16T04:51:45Z-
dc.date.available2022-11-16T04:51:45Z-
dc.date.issued1976-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8524-
dc.description.abstract"இவ்வாறு வடநாட்டு மொழிகளிலிருந்து பெயர் த்த நாவல்கள் தமிழ் நாட்டில் மலிந்தபொழுது முதலில் யாவரும் அவற்றை வரவேற்றுப் படித்து மகிழ்ந்தார்கள். ஒரு பத்திரிகையில் ரவீந்திரர் நாவலும், வேறொரு பத் திரிகையில் பங்கிம் சந்திரர் நாவலும், மற்றொன்றில் சரச்சந்திரர் நாவ லும் போட்டி போட்டுக் கொண்டு தொடர் கதையாக வந்தன. அவற்றை ஆர்வத்துடன் வாசித்து இன்புற்றார்கள் '' 1 மேலே விவரிக்கப்பட்டுள்ளது தமிழ் நாவல் வரலாற்றின் ஒரு காலப்பிரிவு . இந்நூற்றாண்டின் இரண்டாம், மூன்றாம் தஸாப்தங்களில் இந்திய மொழிகளிலி ருந்து - குறிப்பாக வங்காள மொழியிலிருந்து - அதிகளவு நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இதனால் தமிழ் நாவல்களின் போக்குகளும், உள்ளடக்க மும் மட்டுமன்றி நாவலாசிரருயம். வாச கருங்கூடப் பெரிதும் பாதிக்கப்பட்டுள் ளனர். இதுபற்றி இன்னமும் விரிவாக ஆராயப்படவில்லை. 2 அதுமட்டுமன்று; இன்றும் நம்மவர்களிற் பலர் வங்காள இலக்கியத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சகலதும் இருப்பதாகக் கருதுகின்றனர். 3 எனவே, இது பற்றிய தனி ஆய்வு அவசியமாகின் றது. 4 இந்திய மொழி சளுள் ஏன் வங்காள மொழியிலிருந்து அதிக நாவல்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும்? இதற்குச் சில முக்கிய காரணங்களுள்ளன. இந்தியாவில் பிரித்தானிய ஆட்சி முதன் முதலாக வங்காளத்திலே நிலையூன்றியமை யால் அதன் பெறுபேறுகளும் அங்கேயே முதலில் வெளிப்பட்டன. அதனால் வங் காள இலக்கியமும் நவீன தன்மைகளைப் பெறுவதில் ஏனைய மொழிகளை விட முந் திக் கொண்டது: வங்காளத்திற்குத் தடிமன் ஏற்படும்போது ஏனைய மாகாணங் களும் தும்முவது வழக்கமாயிற்று. அத்துடன், அடிப்படையில் வங்காளத்தின் பண்பாடும், நாகரிகமும் தமிழ்ப் பண்பாட்டிலிருந்தும், நாகரிகத்திலிருந்தும் பெருமளவு வேறுபடவில்லை. கூட்டுக் குடும்பம், குடும்பத்திலே தகப்பன் தலைவன். திருமணம், சாவு முதலியவற்றில் பின்பற்றப்படும் வைதிகச் சடங்குகள், உணவு முறைகளில் அரிசிச் சாதம், மீன் குழம்பு ஆகியவற்றில் இரு இனங்களும் ஒன்றுபட்டே தோன்றுகின்றன.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleவங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:1976 SEPTEMBER ISSUE 3 Vol I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.