Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5160
Title: மட்டக்களப்பு மாவட்ட மீனவர்களின் சந்தைப்படுத்தல் பிரச்சனைகள் பற்றிய ஆய்வு
Authors: Uthayakumar, S.
Kalaipriya, J.
Keywords: சந்தைப்படுத்தல்;விலைப்போட்டி;நிரம்பல்;கேள்வி;வறுமை
Issue Date: 2016
Publisher: University of Jaffna
Abstract: மட்டக்களப்பு மாவட்டமானது 14 பிரதேச செயலக பிரிவுகளையும் 345 கிராம சேவகர் பிரிவுகனையும் கொண்டுள்ளது. மொத்த மீனவ சனத்தொகை 25726 ஆகும். இங்கு மொத்தமாக 20,726 மீனவ குடும்பங்கள் காணப்படுகின்றனர்(District Fishers office- Batticalao 2014.). இவ்வாய்விற்கான தரவுகளும் தகவல்களும் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத்தரவு மூலகங்களிலிருந்து பெறப்பட்டுள்ளன.தரவுகள் பண்புசார் மற்றும் அளவுசார் முறைகளினூடாகப் பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் புள்ளிவிபரவியல் முறையினைக் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் தொகுத்தறி முறையினைப் பிரதானமாகவும் உய்த்தறி முறையினைத் துணையாகவும் கொண்டு பெறப்பட்டுள்ளன.மட்டக்களப்பு மாவட்ட மக்கள் விவசாயத்திற்கு அடுத்த படியாக மீன்பிடித்துறையினையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இம்மீன்பிடித் துறையானது இப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்து. அந்த வகையில் இம் மீனவர்களின் மீன்பிடி உற்பத்தியானது இம்மாவட்ட மக்களின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றுகின்றது. ஆனாலும் பெரும்பாலான மீனவர்கள் சந்தைப்படுத்தலில் ஏற்படுகின்ற பிரச்சினை காரணமாக பாரிய இழுப்புகளை எதிர்கொள்கின்றனர். இவ்வாய்வின் பிரதான நோக்கமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படுகின்ற மீன்பிடி உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்தலில் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவதாகும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5160
ISSN: 2478-1061
Appears in Collections:Economics



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.