Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5144
Title: உள்நாட்டுப்போர் விட்டுச்சென்ற சிறுவர் வறுமையும் அதன் சமூகபொருளாதார விளைவுகளும்: ஓர் ஆய்வு-(தென்மராட்சிப் பிரதேசத்தைச் சிறப்பாகக் கொண்டது)
Authors: Uthayakumar, S.S.
Sivatharshan, P.
Keywords: சமூக ஆதரவு;சிறுவர் வறுமை;போசாக்கான உணவு;வாழ்வாதாரம்
Issue Date: 2013
Publisher: University of Jaffna
Abstract: மன்னராட்சி நிலவி செல்வம் கொழித்து விளங்கிய இலங்கைப் பொருளாதாரமானது, கிபி 1505 இலிருந்து 444 வருடங்கள் அன்னியரின் ஆதிக்கத்தின் கீழ் ஆளப்பட்டு வந்த நிலையில் 1948 பெப்ரவரி 4 ஆம் நாள் சுதந்திரம் கிடைத்த நிலையில் சுதேச ஆட்சியாளர்களின் கைகளுக்கு இலங்கையை ஆளும் அதிகாரம் கிடைத்தது. இருப்பினும் இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த இனப்பிரச்சனையும் குறிப்பாக கடந்த மூன்று தசாப்தகால சிவில் யுத்தம் மற்றும் ஆயுதப் போராட்டம் என்பனவற்றின் தாக்கமானது, வடக்கு கிழக்கு மாகாணங்களின் உட்கட்டுமாணங்களைச் சிதைவடையச் செய்ததுடன் பொருளாதார வளங்களை அழித்தும் மக்களின் வாழ்வாதாரங்களைச் சீரழித்தும் சிறுவர் வறுமை என்ற நிலைமையைத் தூண்டியுள்ளன. இலங்கையில் வாழ்கின்ற இனங்குழுமங்களில் மூன்று இனங்குழுமங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. எனவே இவ்வறுமைக்கான காரணங்கள் மற்றும் அதன் விளைவுகன் அற்றிலிருந்து மீளவதற்கு அல்லது வறுமையைத் தணிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5144
ISBN: 978-955-627-042-6
Appears in Collections:Economics



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.