Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5113
Title: | கிராமியப் பொருளாதார அபிவிருத்தியில் சிறிய கைத்தொழில் துறையின் வகிபாகம் (கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) |
Authors: | Suthesini, M. Sutharsini, M. |
Keywords: | கிராமிய அபிவிருத்தி;பொருளாதார அபிவிருத்தி;சிறிய கைத்தொழில் துறை;மக்களின் வருமானம்;உற்பத்திச் செலவு. |
Issue Date: | 2015 |
Publisher: | University of Jaffna |
Abstract: | கிராமியப் பொருளாதார அபிவிருத்தியில் சிறிய கைத்தொழில் துறையின் வகிபாகம் என்னும் இந்த ஆய்வானது கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய கைத்தொழில்களில் ஈடுபடுகின்ற கிராமிய மக்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிய கைத்தொழில்களில் ஈடுபடுகின்ற மக்களின் எண்ணிக்கை தற்போது ஓரளவு அதிகரித்துள்ளது. அதாவது சிறிய கைத்தொழில்கள் என்பதற்குள் பல வகையான கைத்தொழில்கள் உள்ளடக்கப்படுகின்ற போதிலும் கூட அதிகளவாக உற்பத்தி செய்யப்படுகின்ற எண்ணெய் உற்பத்தி, மிக்ஷர் உற்பத்தி, இனிப்பு உற்பத்தி என்பனவே இவ் ஆய்விற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் கரைச்சி பிரதேசத்தில் உள்ள 42 கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட விவேகானந்த நகர், ஆனந்த புரம், உதயநகர் போன்ற கிராமங்களே ஆய்விற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் கருதுகோள்களாக சிறிய கைத் தொழில்களின் விருத்தியினால் மக்களின் வருமானம் அதிகரித்துள்ளது மற்றும் சிறிய கைத் தொழில்களின் விருத்தியினால் மக்களின் வருமானத்தை விட உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் கிராமிய அபிவிருத்தியில் சிறிய கைத் தொழில்களின் பங்கினை இனங்காணுதல் என்ற பிரதான நோக்கத்தினையும் சிறிய கைத் தொழில்களின் உற்பத்திச் செலவினை இனங்காணுதல், சிறிய கைத் தொழில்களின் மூலம் பெற்றுக் கொள்கின்ற வருமானத்தை இனங்காணுதல், சிறிய கைத் தொழில்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை அடையாளம் காணுதல், சிறிய கைத் தொழில்கள் எதிர் நொக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுத்திட்டத்தை முன்வைத்தல் போன்ற துணை நோக்கங்களையும் கொண்டுள்ளது. இந்த ஆய்விற்கென முதலாம் நிலைத்தரவுகள் மற்றும் இரண்டாம் நிலைத்தரவுகள் என்பனவற்றின் மூலம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் முதலாம் நிலைத்தரவுகளே பிரதான தரவு பெறும் மூலமாக காணப்படுவதுடன் வினாக்கொத்தின் மூலமே அதிகளவான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. வினாக்கொத்தானது மாதிரித் தெரிவின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆய்வுப் பிரதேசத்தில் 20%ஆனவர்களே மாதிரிக்கென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் விவேகானந்த நகர் கிராமத்தில் 50 குடும்பங்களும் ஆனந்தபுரம் கிராமத்தில் 54 குடும்பங்களும் உதயநகர் கிராமத்தில் 48 குடும்பங்களும் என மொத்தமாக 152 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் சிறிய கைத்தொழில் ஈடுபடுகின்றனர். இவர்களில் மாதிரித் தெரிவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 32 குடும்பங்களுக்கே வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டுள்ளன. அந்தவகையில் பெறப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்வதற்கென SPSS மற்றும் Excel போன்ற கணித மென்பொறிகள் பயன்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் பகுப்பாய்வு செய்து பெறப்பட்ட முடிவுகளாக சிறிய கைத்தொழிலில் ஈடுபடுவதன் மூலம் மக்கள் அதிகளவான வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர் அதாவது உற்பத்திச் செலவானது வருமானத்தை விட குறைவாகவே காணப்படுகின்றது. அதனால் மக்கள் இலாபத்தையே உமைத்துக் கொள்கின்றனர் என்பதை காண முடிகிறது. |
URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5113 |
ISBN: | 978-955-1443-79-5 |
Appears in Collections: | Economics |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.