Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5111
Title: கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் - ஓர் ஆய்வு
Authors: Uthayakumar, S.S.
Gnanasingam, K.
Keywords: மாணவர் இடைவிலகல்;சகபாடிகள்;இடப்பெயர்வு;குடும்ப வறுமை;கலைத்திட்டம்;பெற்றோரின் பிரிவு
Issue Date: 2013
Publisher: University of Jaffna
Abstract: வட இலங்கையில் உள்ள மாவட்டங்களில் ஒன்றான கிளிநொச்சி மாவட்டமானது பல சமூக இயல்புகளைக் கொண்ட மக்கள் வாழும் பிரதேசமாகும். இதில் ஆய்வுப் பிரதேசமான உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அதாவது கண்டாவளைக் கோட்டக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகப்பரப்புக்குள்ளான பிரதேசமானது நல்ல வளமான இதமான செழிப்புடைய பிரதேசமாகும். இவ்வாறான பன்மைச் சமூகங்களில் கல்வியைத் தொடரும் பாங்கானது பல்வேறு நிலைமைகளில் வேறுபட்டதாக அமைந்து காணப்படுகிறது. இலங்கையில் கல்வி வரலாற்றில் தனியான ஓர் கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசமாக விளங்கிய கிளிநொச்சி மாவட்டம் அண்மையில் ஏற்பட்ட போர்ச்சூழலினால் சின்னாபின்னமாக்கப்பட்டு தற்போது ஓர் சுமூகமான முறையில் தம் பணியை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் இன்றைய அரசியல் முரண்பாடுகளினாலும் மோதல்களினாலும் பாதிக்கப்படும் மக்கள் வாழ்க்கை நிலைமை வீழ்ச்சி நிலைக்குள்ளாக்கப்படக்கூடிய ஓர் அச்சுறுத்தலாய் உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. இவ்வகையில் இலங்கையின் வடபுலத்தே, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் தொடர்பாக எத்தகைய காரணிகள் செவ்வாக்குச் செலுத்துகின்றன என்பதே ஆய்வுப் பிரச்சினையாக அமைந்துள்ளது. இவ்வகையில் கிளிநொச்சி மாவட்ட கண்டாவளைக் கோட்ட பிரதேச செயலாளருக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ள மாணவர் இடைவிலகலில் செல்வாக்குச் செலுத்தும் சமூக, பொருளாதார காரணிகள் என்ற இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தரவு சேகரிப்பு, முறைகளான வினாக்கொத்து, நேர்காணல், உரையாடல், அவதானித்தல் மற்றும் உற்று நோக்கல் செயற்பாடுகள் ஊடாக ஆய்வுப் பிரதேச மாணவர் இடைவிலகல் தொடர்பாக செல்வாக்குச் செலுத்தும் சமூக, பொருளாதார காரணிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஓர் விவரண ஆய்வாக (Descriptive Research) முன்னெடுக்கப்பட்டது. இவ்வகையில் ஆய்வுப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி மாணவர்கள் இடைவிலகலைத் தூண்டிய காரணங்கள் என்ற வகையில் குடும்ப சூழ்நிலை, இடப்பெயர்வு, சகபாடிகளின் சேர்க்கை, கற்க விரும்பாமை, தனிப்பட்ட நிலை, மற்றும் பெற்றோரது ஊக்கமின்மை என்பன முறையே 33.3%, 22.2%, 5.6%, 16.7%,11.1%, 11.1% என்ற வகையில் செல்வாக்கு செலுத்தியுள்ளன. மேலும் இப்பிரதேசத்தின் மாணவர் இடைவிலகலில் பெற்றோரது இறப்பு அல்லது பிரிவு என்பன 55.66% செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இவ்வகையில் மேற்படி இடைவிலகலில் செல்வாக்குச் செலுத்தியுள்ள விடயங்களில் கூடிய கவனமெடுத்து தூரநோக்கு சிந்தனையுடன் கட்டாயக்கல்வி மட்டுமன்றி மாணவர்கள் தொடர்ந்து கற்பதற்கான தூண்டுதலை மேற்கொள்ள வேண்டும். இதற்கு கல்வித்துறை மற்றும் பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மிகக்கூடிய அர்ப்பணிப்புடனும் தூரநோக்கு சிந்தனையுடனும் செயற்பட வேண்டும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5111
ISSN: 2279-1280
Appears in Collections:Economics

Files in This Item:
File Description SizeFormat 
06.pdf6.4 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.