Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12792| Title: | மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் குடியியற் பாடத்தின் பங்களிப்பு |
| Authors: | Pusppam, R. Sivananthan, P. |
| Keywords: | சமூக சகவாழ்வு;குடியியற் பாடம்;கற்பித்தல் அணுகுமுறை;மாணவர்கள் |
| Issue Date: | 2026 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | தென்மராட்சிக் கிழக்குப் பிரதேச வகை II பாடசாலைகளின் தரம் 10 மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் குடியியற் பாடத்தின் பங்களிப்பினை பாட உள்ளடக்கம், கற்பித்தல் அணுகுமுறை, இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் ஊடாக கண்டறிவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. பல்லினப் பண்பாட்டுச் சூழலில் மாணவர்களிடையே அண்மைக்காலமாக ஒத்துழைப்பின்மை, வன்முறை, குழு மனப்பான்மை மற்றும் தவறான நடத்தைகள் அதிகரித்துச் செல்வது இங்கு ஆய்வுப் பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. விவரண அளவை நிலை ஆய்வு வடிவத்தையும், தொகைசார் மற்றும் பண்புசார் முறைகளை ஒருங்கிணைத்த கலப்பு ஆய்வு அணுகுமுறையையும் கொண்டு இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. தென்மராட்சிக் கிழக்குப் பிரதேசத்தின் தரம் 10 இல் கல்வி கற்கும் 80 மாணவர்கள் முழுவகை மாதிரியாகவும், தரவு முக்கோணப்படுத்தலுக்காக நோக்க மாதிரியெடுப்பு முறையில் 20 குடியியல் பாட ஆசிரியர்களும், ஒன்பது அதிபர்களும் மாதிரிகளாக உள்வாங்கப்பட்டனர். வினாக்கொத்து மற்றும் நேர்காணல் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் சராசரி, நியம விலகல் மற்றும் கருப்பொருட் பகுப்பாய்வு முறைகள் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வு முடிவுகளின்படி, குடியியற் பாடத்திலுள்ள சட்ட, பண்பாட்டு ரீதியான கடமைகளும் (அடிப்படைக் கடமைகள், உரிமைகளை மதித்தல்), சமூக நிறுவன மற்றும் ஜனநாயக விழுமியங்களும் மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் மிகவும் உயர்வான பங்களிப்பினை (M = 4.21 - 5.00) வழங்கியுள்ளன. மேலும், வகுப்பறைக் கவிநிலையும் பாடத்தின் போதான மதிப்பீடுகளும் உயர் பங்களிப்பை நல்கிய போதிலும், விவாதங்கள் மற்றும் குழு வேலைகள் போன்ற மாணவர் மையக் கற்பித்தல் அணுகுமுறைகள் மிதமான பங்களிப்பையே (M = 2.61 - 3.40) வழங்கியுள்ளன என்பது கண்டறியப்பட்டது. அதேவேளை, மாணவர் நாடாளுமன்றம், சமூக விஞ்ஞானப் போட்டிகள் மற்றும் கல்விச் சுற்றுலா போன்ற இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் கோட்பாட்டு ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், மாணவர்களின் குறைந்த ஈடுபாடு மற்றும் நடைமுறைச் சவால்கள் காரணமாக ஆய்வுப் பிரதேசப் பாடசாலைகளில் போதிய பங்களிப்பை வழங்கவில்லை என அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் நேர்காணல் தரவுகள் புலப்படுத்துகின்றன. எனவே, இலங்கையின் தற்போதைய பரீட்சை மையக் கல்வி முறையினால் குடியியற் பாடம் ஏட்டுக்கல்வியாக மட்டுமே சுருங்கிவிடுவதைத் தடுத்து, விழுமியப் பதிவேட்டு முறை மற்றும் செயல்முறைச் செயல்பாடுகள் மூலம் அதனை ஒரு சமூக நிறுவனக் கற்றலாக மாற்றுவதற்குக் கலைத்திட்ட மறுசீரமைப்பை மேற்கொள்வது இன்றியமையாதது என இவ்வாய்வு இறுதி முடிவு செய்கின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12792 |
| Appears in Collections: | IRCE 2026 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| மாணவர்களிடையே சமூக சகவாழ்வை வளர்ப்பதில் குடியியற் பாடத்தின் பங்களிப்பு.pdf | 527.62 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.