Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12382| Title: | பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் கட்டிளமைப்பருவப் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள் ஓர் ஆய்வு (கண்டி பல்கும்புர 475 கிராமசேவகர் பிரிவை அடிப்படையாகக் கொண்டது) |
| Authors: | Padmasani, K. Sawundariya, S. |
| Keywords: | ஆர்வமின்மை;பெற்றோரிடம் இருந்து விலகிய பிள்ளைகள்;கட்டிளமைப் பருவம்;கல்வி ரீதியான சவால்கள் |
| Issue Date: | 2025 |
| Publisher: | Faculty of Arts University of Jaffna, Sri Lanka |
| Abstract: | மனித வாழ்கைப்பருவத்தின் முக்கியமான பருவகாலமாக கட்டிளமைப்பருவம் காணப்படுகிறது. இப்பருவமானது 11 முதல் 20 வயதுவரையான காலப்பகுதியாகும். இப்பருவத்தில் கட்டிளமைப்பருவபிள்ளைகளிடம் உடல், உள, சமூக மற்றும் அறிவுசார் வளர்ச்சி மற்றும் விருத்திகள் ஏற்படுகின்றன. இப்பருவத்தில் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்க்காகவும் உடல், உளமாற்றங்களால் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களுக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காகவும் பெற்றோர் பிள்ளைகளுடன் இருத்தல் அவசியமானது. பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் பிள்ளைகள் உடல், உள, கல்வி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சவால்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கட்டிளமைப்பருவத்தினர் எதிர்கொள்ளும் கல்வி ரீதியான சவால்கள் அவர்களின் எதிர் காலத்தையும் பாதிக்கின்றது. அந்தவகையில் கண்டி 475 கிராம சேவகர் பிரிவைச்சேர்ந்த பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் கட்டிளமைப்பருவபிள்ளைகள் 50 பேர் எளிய எழுமாற்று மாதிரியின் அடிப்படையில் ஆய்வுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் 46மூ பெண்பிள்ளைகள் (n ஸ்ரீ23) மற்றும் 54மூஆண்பிள்ளைகளைக் (nஸ்ரீ27) கொண்டு இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ள பிள்ளைகயின் பெற்றோர்களில் ஒருவர் வீட்டுபணிக்காக வெளிநாட்டிற்க்கு சென்றுள்ளார். உள்நாட்டில் வசிக்கும் பெற்றோர்கள் வெளிமாவட்டங்களில் தங்கி பணிபுரிபவர்களாகவும் , விவகரத்து பெற்றவர்களாகவும் வேறுதிருமணம் செய்து கொண்டவர்களாகவும் பிள்ளைகளின் தந்தைமார் குடிபழக்கத்திற்க்கு உள்ளானவர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் 62மூ மானபிள்ளைகள்தங்களின் மூத்தப்பெற்றோரின் பராமரிப்பிலும் 12மூ பிள்ளைகள் தாய் அல்லது தந்தையின் சகோதரர்களின் பராமரிப்பிலும் வளர்கின்றனர். இவ் 50 மாதிரிகளிடமிருந்தும் முதலாம் நிலை தரவு சேகரிப்பானது வினாக்கொத்து நேரடிக அவதானம், நேர்காணல் மற்றும் கலந்துரையாடல், மூலமாகவும் இரண்டாம் நிலை தரவுகள் ஆய்வு கட்டுரைகள் புத்தகங்கள் இணையதளங்கள் ஊடாகவும் சேகரிக்கப்பட்டு அளவு சார் பண்பு சார் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அளவு சார் விபரண ஆய்வாக மேற்க்;கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பெற்றோரிடம் இருந்து விலகியிருக்கும் கட்டிளமைப் பருவத்தினரில் 58மூ பிள்ளைகள் கல்வி மீதான ஆர்வமற்றவர்களாவும் 42மூ பிள்ளைகள் கல்வி கற்பதற்க்கு ஆர்வம் கொண்டவர்களாவும் காணப்படுகின்றனர்; அத்துடன் அவர்களின் கல்வியில் குடும்பபிண்ணனி மற்றும் சுழல் என்பன செல்வாக்குச் செலுத்துகின்றன. பெற்றோரிடம் இருந்து விலகியிருக்கும் பிள்ளைகளுக்கு உயர்கல்வி மற்றும் அதன் ஊடாக கிடைக்கக்கூடிய தொழில்வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வுகளை வழங்குவதுடன் அவர்கள் தங்கி கல்வி கற்பதற்கான விடுதி வசதிகளைப் பாடசாலையுடன் இணைந்த வகையில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் போன்ற பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் இவ்வாய்வானது அமைந்துள்ளது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12382 |
| Appears in Collections: | URSA 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| பெற்றோரிடமிருந்து விலகியிருக்கும் கட்டிளமைப்பருவப் பிள்ளைகள் எதிர்நோக்கும் சவால்கள்.pdf | 183.45 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.