Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12282
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorPriyanka, R.-
dc.contributor.authorArunthavaraja, K.-
dc.date.accessioned2026-02-27T09:20:01Z-
dc.date.available2026-02-27T09:20:01Z-
dc.date.issued2025-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12282-
dc.description.abstractஇந்து சமுத்திரத்தின் மத்தியில் உள்ள தீவாக இலங்கை காணப்படுகின்றது. கி.பி பதினாறாம் நூற்றாண்டானது இலங்கையில் திருப்புமுனைக் காலமாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையின் வட பகுதியில் வட இலங்கையானது அமைந்துள்ளது. கி.பி13ஆம் நூற்றாண்டில் ஆரியசக்கிரவர்த்தி தலைமையில் நல்லூரைத் தலைநகராகக் கொண்டு மலர்ந்திருந்த யாழ்ப்பாண அரசானது மத்தியகால இலங்கை வரலாற்றில் ஒரு சுதந்திர தமிழ் அரசாக விளங்கியிருந்தது. இலங்கையின் வடக்கே அமைந்துள்ள இப்பகுதியானது மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட நில அமைப்பு, இந்தியாவுக்கு அண்மையில் காணப்படுகின்றமை, நடுத்தர வெப்பநிலை, முத்து மற்றும் யானை வர்த்தகம் போன்றவற்றினால் சிறப்புப் பெறுகின்றது. வட இலங்கையானது யாழ்ப்பாணப்பட்டணம், அதனைச் சுற்றியுள்ள தீவுகள் (காரைதீவு, மண்டைதீவு, எழுவைதீவு, அனலைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு), வன்னியின் சில பகுதிகள், மன்னார், ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது. வட இலங்கையில் ஏற்பட்ட அரசியல், நிர்வாக, பொருளாதார, சமய, சமூக, பண்பாட்டு மாற்றங்களுக்குப் போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தரது அரசியல் நடவடிக்கைகளே காரணமாகும். போர்த்துக்கேய மற்றும் ஒல்லாந்தரது ஆட்சியில் காணப்பட்ட அரசியல் நிலை தொடர்பாக விரிவான முறையில் இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது இவ்வாய்வின் பிரச்சினையாக உள்ளது. 16ஆம் நூற்றாண்டு தொடக்கம் 18 ஆம் நூற்றான்டு கால வரையிலான வட இலங்கையின் அரசியல் நிலை, போர்த்துக்கேய, ஒல்லாந்தரது நிர்வாக நடவடிக்கைகளை ஒப்பீட்டும், வேறுபடுத்தியும் இனங்காணல் இவ்வாய்வின் பிரதான நோக்கங்களாகும். இவ்வாய்வானது வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையிலமைந்த ஒப்பீட்டு மற்றும் விபரண ஆய்வாக அமைந்துள்ளது. இவ்வாய்வினை மேற்கொள்வதற்காக டச்சு அறிக்கைகள், நேர்காணல், அவதானிப்புக்கள், நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இவ்வாய்வானது கருதுகோளுடன் பொருந்திய வகையில் போர்த்துக்கேயருடைய அரசியல் நடவடிக்கைகளைவிட ஒல்லாந்தரது அரசியல் நடவடிக்கைகள் சிறந்ததாகக் காணப்படுகின்றதுen_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectபோர்த்துக்கேயர்en_US
dc.subjectஒல்லாந்தர்en_US
dc.subjectகொமாண்டரிகள்en_US
dc.subjectதேசவழமைச்சட்டம்en_US
dc.subjectமிஷனரிமார்கள்en_US
dc.titleகி.பி 16-கி.பி 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலான வட இலங்கையின் அரசியல் நிலை: ஓர் ஆய்வுen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.