Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12248
Title: தலைமன்னார் பிரதேச மக்கள் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
Authors: Sneka, P.
Menaka, C.
Keywords: சிறுதானியங்கள்;தலைமன்னார்;விழிப்புணர்வு;போசணை
Issue Date: 2025
Publisher: Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract: ஒரு மனிதனுடைய ஆரோக்கியமானது அவர்களது உணவு பழக்க வழக்கங்களிலேயே தங்கியுள்ளது. அந்தவகையிலே ஆரோக்கியமான உணவுகளில் சிறு தானிய உணவுகள் முக்கியமானவை. உணவில் சிறுதானியப் பயன்பாடு தற்காலத்தில் குறைவடைந்து வருகின்றது. அன்றாட உணவில் சிறுதானியங்களைப் பயன்படுத்துவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கண்டறிவதற்காக (தலைமன்னார் பியர் கிழக்கு (MN/51) கிராமத்தை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆய்வு பிரதேசமான, தலைமன்னார் பியர் கிழக்கு (MN/1) கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட 70 குடும்பங்களில் 50 குடும்பங்கள் எளிய எழுமாற்று முறையில் தேர்வு செய்யப்பட்டு வினாக்கொத்து, நேர்காணல், நேரடி அவதானம், கலந்துரையாடல் போன்ற முதலாம் நிலை தரவு சேகரிப்பு முறைகள் மூலம் தரவு சேகரிக்கப்பட்டு பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வானது அளவுசார்விபரண ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப்பிரதேச மக்களால் குரக்கனை இனங்காண முடிந்தாலும், 70% (n=35)ஆனவர்களுக்கு ஏனைய சிறுதானியங்களான வரகு, தினை, சாமை மற்றும் கம்பு என்பவற்றை இனங்காண முடியவில்லை. பிரதேச மக்களுடன் மேற்கொள்ளப்பட்ட குழுக்கலந்துரையாடலில் மக்கள் மத்தியில் சிறுதானிய உணவுதயாரிப்பு மற்றும் அவற்றின் போசணை முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு என்பன போதியளவு காணப்படவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. ஆய்வுப்பிரதேச விவசாயிகள், விவசாய உத்தியோகத்தர் ஆகியோருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் சிறுதானிய உற்பத்தி குறைவாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பிரதேசத்தில் அரிசியுடன் ஒப்பிடுகையில் சிறுதானியங்களுக்கான கேள்வி குறைவாக காணப்படுவதால் சிறுதானியங்களை சந்தைப்படுத்துவதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். உள்ளுர்கடைகளிலும் சிறுதானியங்களின் கிடைப்பனவு குறைவானகவுள்ளது. தரவுப்பகுப்பாய்வின் அடிப்படையில், ஆய்வுப் பிரதேச மக்களால் சிறு தானியங்களை இனம் காண முடியவில்லை, ஆய்வுப் பிரதேசத்தில் சிறுதானிய உற்பத்தி மற்றும் கிடைப்பனவு குறைவாக காணப்படுகின்றது, ஆய்வுப் பிரதேசத்தில் சிறுதானியங்கள் தொடர்பான புதிய விழிப்புணர்வு காணப்படவில்லை போன்ற முடிவுகள் பெறப்பட்டன. சிறுதானிய உணவுதயாரிப்புத் தொடர்பான கண்காட்சிகளை நடாத்துதல், சிறுதானிய உற்பத்தி குறைவாக இருப்பதற்கான காரணங்களான விழிப்புணர்வின்மை, சந்தைப்படுத்தல் பிரச்சினை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் முக்கிய செயல்திட்டங்களை உருவாக்குவதானால் அவற்றுக்கான சிறந்த தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12248
Appears in Collections:URSA 2025

Files in This Item:
File Description SizeFormat 
ursa 2025-2.pdf181 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.