Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11004
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorTharsika, M.-
dc.contributor.authorKalamani, T.-
dc.contributor.authorPiratheeban, K.-
dc.date.accessioned2025-01-27T05:24:41Z-
dc.date.available2025-01-27T05:24:41Z-
dc.date.issued2024-
dc.identifier.citationதர்சிகா, ம.இ கலாமணி, த., பிரதீபன், கு (2024). பிரயோககணிதப் பகுதியைக் கற்பதன் மீதான தரம் 12 மாணவர்களின் ஆர்வம். Proceedings of First International Research Conference in Education IRCE – 2024, 201-208.en_US
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/11004-
dc.description.abstractபௌதிக விஞ்ஞானத்துறையில் இணைந்தகணிதம் பிரதான பாடமொன்றாகக் காணப்படுவதுடன் அதிகளவு மாணவர்களின் தெரிவுப் பாடமாகவுமுள்ளது. அந்தவகையில் தரம் 12 மாணவர்கள் பிரயோககணிதப் பகுதியைக் கற்பதில் காட்டும் ஆர்வம் தொடர்பில் ஆராய்தலை நோக்கமாகக் கொண்டு அளவறிமுறையில் அமைந்த குறுக்குவெட்டு அளவைநிலை ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக வவுனியா தெற்குவலயத்தின் நகரக்கோட்ட தமிழ்மொழி மூல 1AB பாடசாலைகள் 6 இலிருந்தும் தரம் 12இல் பௌதிக விஞ்ஞானத்துறையில் கல்விகற்கும்135 மாணவர்கள்; இவ்ஆய்வுக்காகத் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து தரவு சேகரிப்பதற்காக இரண்டு பகுதிகளில் 28 % மூடியவகை வினாக்களையும் கொண்ட ஆய்வாளரினால் தயாரிக்கப்பட்ட வினாக்கொத்துப் பயன்படுத்தப்பட்டது. வினாக்கொத்தின் நம்பகமானது cronbach’s alpha குணகத்தைப் பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டது. தரவு சேகரிக்கப்பட்ட போது மீளப்பெறப்பட்ட 109 வினாக்கொத்தின் தரவுகள் விபரணப்புள்ளிவிபரவியல் நுட்பங்களான இடைப்பெறுமானம் மற்றும் நியமவிலகல் என்பவற்றைப் பயன்படுத்தியும் அனுமானப்புள்ளிவிபரவியல் நுட்பங்களான t test, ONE WAY ANOVA, Multiple Linear Regression Analysis என்பவற்றைப் பயன்படுத்தியும் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வின் கண்டறிதல்கள் முன்வைக்கப்பட்டன. தரம் 12மாணவர்கள் பிரயோககணிதப் பகுதியைக் கற்பதில் உயர்ந்த ஆர்வத்தைக் கொண்டுள்ளமை வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரயோககணிதப் பகுதியைக் கற்பதன் மீதான உயர்தர மாணவர்களின் ஆர்வத்தில் பால்நிலை செல்வாக்குச் செலுத்துகின்ற அதேவேளை அவர்களின் குடும்ப வருமானம் செல்வாக்குச் செலுத்தவில்லைஎன்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தரம் 12மாணவர்கள் பிரயோககணிதப் பகுதியைக் கற்பதிலுள்ள ஆர்வத்தில் ஆசிரியர் சார் காரணிகள், கிரகித்து வாசிக்கும் திறன் மற்றும் தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் என்பன 44.1% பொருண்மையான நேரான தாக்கத்தை ஏற்படுத்துகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் உயர்தர மாணவர்களின் பிரயோககணிதப் பகுதியைக் கற்பதன் மீதான ஆர்வத்தில் ஆசிரியர் சார் காரணிகள் மற்றும் தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன்ஆகியவை நேரான பொருண்மையான தாக்கத்ததைச் செலுத்தும் அதேவேளை கிரகித்து வாசிக்கும் திறன் நேரான தாக்கத்ததைச் செலுத்துகின்றதெனினும் அத்தாக்கம் பொருண்மையானதாக இல்லை.எனவே ஆசிரியர் சார் காரணிகள், மற்றும் தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை பாடசாலைச் சூழமைவில் மேம்படுத்துவதன் மூலம்க.பொ.த உயர்தர மாணவர்களின் பிரயோககணிதப் பகுதியைக் கற்பதன் மீதான ஆர்வத்தை மேம்படுத்தமுடியும்என இந்த ஆய்வு பரிந்துரை செய்கின்றது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectஇணைந்த கணிதம்en_US
dc.subjectபிரயோககணிதம்en_US
dc.subjectதர்க்க ரீதியான சிந்தனைen_US
dc.subjectஆசிரியர் சார் காரணிகள்en_US
dc.titleபிரயோககணிதப் பகுதியைக் கற்பதன் மீதான தரம் 12 மாணவர்களின் ஆர்வம்en_US
dc.typeConference paperen_US
Appears in Collections:Education



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.