DSpace Collection:
இலங்கையின் தகவல் தொடர்பாடலில் தமிழ்
      <description>Title: இலங்கையின் தகவல் தொடர்பாடலில் தமிழ்
Authors: Sivachandran, R.
மேற்படி ஆய்வுக்குரிய தரவுகள் வெளி யிடப்பட்ட நூல்கள், கட்டுரைகள், அறிக்கை களில் இருந்தும் கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தியும் பெறப்பட்டன. கள ஆய்வினால் பெறப்பட்ட தகவல்கள், தரவுகள் என்பன எழுமாற்று வகைமாதிரியில் அமைந்த பேட்டிகள் மூலம் பெறப்பட்டவை யாகும்.</description>
இடைநிலைப் பாடசாலை மாணவரது கல்வியில் தாக்கம் கொள்ளும் பாடசாலை வளங்கள் பற்றிய ஒரு நோக்கு யாழ். மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
      <description>Title: இடைநிலைப் பாடசாலை மாணவரது கல்வியில் தாக்கம் கொள்ளும் பாடசாலை வளங்கள் பற்றிய ஒரு நோக்கு யாழ். மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
Authors: Seela, A.
போன்ற பல்வேறு காரணிகளினாலும் தாக்கம் பெறுகின்றது. இலங்கைப் பாடசாலை களைக் கருத்தில் கொள்ளும் போது அவை ஐந்து வகைகளாக தேசிய பாடசாலை, 1 AB, 1C, 2, 3 பிரிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். ஒரே வகையான பாடசாலைகள் தானும் அவை கொண்டுள்ள வளங்கள் தொடர்பாக ஏதோ ஒரு வகையில் வேறுபட்ட வையாகக் காணப்படுகின்றன. இதனால் எந்தப் பாடசாலைகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் பொதுத் தேர்வுப் பெறுபேறுகள் ஒரே சீராக அமைவதில்லை. எனவே, பாடசாலை வளங்கள் மாணவரது கல்வியில் எவ்வாறு பங்காற்றுகின்றன என்றும், இவ்வளங்களை மாணவரது அடைவு நோக்கி எவ்வாறு மேம்படுத்தலாம் என்றும் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றது.</description>
செய்மதித் தொலை உணர்வுத் தொழில்நுட்பம் எண்ணக்கருக்களும் பிரயோகங்களும்
      <description>Title: செய்மதித் தொலை உணர்வுத் தொழில்நுட்பம் எண்ணக்கருக்களும் பிரயோகங்களும்
Authors: Suthakar, K.
Abstract: அதிகரித்து வரும் சனத்தொகையும் அதனால் குறைவடையும் மூலவளமும் இயற்கை மூலவளங்களின் முகாமைத்துவத் திற்கான சிறந்த வழிவகைகளை மேற்கொள் வதற்கான தேவையை திட்டமிடலாளர்களுக் கும். விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் தலைவர் களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் செய்மதித் தொழில் நுட்பம் ஓர் தீர்வாக அமைகின்றது. அதாவது இயற்கை மூலவளம் சம்பந்தமான தொலை உணர்வுத் தகவல்கள் இயற்கை மூலவள முகாமைத்துவத்திற்கான பொருத்தமான முன்னுரிமைகளையும், ஆக்க பூர்வமான திட்டங்களை உருவாக்குவதற்கும் பயன்படுகின்றன. இக்கட்டுரையானது செய்மதித் தொழில்நுட்பம் சம்பந்தமான சில அடிப்படையான எண்ணக்கருக்களை காட்டுவதுடன் புவிமூலவள செய்மதிகள் (Eartn Resource Satellites) அனுப்பும் தரவுகள் எவ்வளவு தூரம் பிரயோகிக்கப்படுகின்றன</description>
இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி மாற்றம் : சில பிரச்சினைகள்
      <description>Title: இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி மாற்றம் : சில பிரச்சினைகள்
Authors: Nuhuman, M.A.
Abstract: பா டசாலை நிலையில் இலங்கை முஸ்லிம்களின் கல்விமொழி தொடர்பான சில பிரச்சினைகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வாய்வு, கிடைக்கக்கூடிய தகவல்களையும் சில தனிப்பட்ட அவதானிப் புகளையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தொடக்கநிலை முயற்சியாகும். முழுமையான புள்ளிவிபரங்களையும் கள ஆய்வையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு விரிவான ஆய்வு முயற்சி பின்னர் மேற்கொள்ளப்படும். அவ் வகையில் இக்கட்டுரையில் கூறப்படும் கருத்துகள் இறுதியான கருத்துக்களல்ல என்பது மனங்கொள்ளத்தக்கது. முஸ்லிம் களும் கல்வி மொழியும் ஒரு வரலாற்றுப் பின்னணி, சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர் பற்றிய பகுப்பாய்வு. கல்விமொழி மாற்றத்தைத் தீர்மானிக்கும் காரணிகள், கல்விமொழி மாற்றத்தினால் ஏற்படும் கல்விப் பிரச்சினை, கல்வி மொழி மாற்றத்தினால் ஏற்படக்கூடிய எதிர்கால சமூக விளைவுகள் ஆகிய ஐந்து உப தலைப்பு களில் இப்பிரச்சினை இங்கு ஆராயப்படுகிறது.</description>