DSpace Community:
ஆடி அமாவாசை விரதத்தில் காற்றோட்டி மூலிகைப்பயன்பாட்டின் பாரம்பரிய மற்றும் மருத்துவ  முக்கியத்துவம்
      <description>Title: ஆடி அமாவாசை விரதத்தில் காற்றோட்டி மூலிகைப்பயன்பாட்டின் பாரம்பரிய மற்றும் மருத்துவ  முக்கியத்துவம்
Authors: Subaskar, M.; Arivazhagan, N.; Rishikanthi, P.; Sathiyaseelan, V.
Abstract: இந்து சமய வாழ்வியலில் திதிகள் மற்றும் விரத நாட்கள் வெறும் சடங்கு மரபுகளாக மட்டுமன்றி, மனித உடலியல், பருவநிலை மாற்றங்கள் மற்றும் ஆரோக்கிய மேலாண்மையுடன் இணைந்த அறிவியல் அடிப்படையைக் கொண்டதாகக் கருதப்படுகின்றன. அந்த வகையில் தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கமான ஆடி அமாவாசை, ஆன்மிக முக்கியத்துவத்துடன் மட்டுமன்றி பருவகால உடல் சமநிலையைப் பேணும் ஒரு பாரம்பரிய நடைமுறையாகவும் விளங்குகிறது. இந்நாளில் முன்னோர்களுக்கு பிதிர்க்கடன் நிறைவு செய்தபின் உட்கொள்ளப்படும் உணவுகளில் காற்றோட்டி (ஊயிpயசளை ணநலடயniஉய) இளங்காய் முக்கிய இடத்தைப் பெறுகிறது. முதுவேனில் காலத்தின் உச்சத்தில் காணப்படும் அதிக வெப்பம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் மனித உடலில் வாதக் குறைபாடுகள், செரிமானக் கோளாறுகள் மற்றும் உடல் சோர்வு போன்ற நிலைகளை அதிகரிக்கக்கூடும். சித்த மருத்துவக் கோட்பாடுகளின்படி இக்காலத்தில் வாதம் தன்னிலை வளர்ச்சியடைந்து வாதத்தின் குணங்களான உடல் நோதல் குத்தல், குடைதல் பிளத்தல், நரம்பு குன்றல், வறட்சி, நீர்வேட்கை வேதனை போன்றன ஏற்படும். இத்தகைய சூழலில் வாதத்தை சமநிலைப்படுத்தும் உணவுகள் அவசியமாகின்றன. காற்றோட்டி (காற்று ூ ஓட்டி) இளங்காய் அதன் கசப்புச் சுவை மற்றும் செயற்பாட்டு உயிர்வேதியியல் சேர்மங்களின் மூலம் வாதநாசினி தன்மைகளை வெளிப்படுத்துகிறது. வேதியியல் பகுப்பாய்வுகளின்படி இத்தாவரத்தில் சப்போனின், கிளைகோகேப்பரின், பீட்டா- கரோட்டின், சிரிஞ்சிக் அமிலம், வானிலிக் அமிலம், ஃபெரூலிக் அமிலம் மற்றும் பல உயிர்ச் செயற்பாட்டுச் சேர்மங்கள் காணப்படுகின்றன. மேலும் இது புரதம், கார்போஹைட்ரேட், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்து மூலமாகும். மருந்தியல் ரீதியாக இது செரிமான ஊக்கி (ளுவழஅயஉhiஉ), நரம்பு அமைதி அளிப்பி (ளுநனயவiஎந) மற்றும் பித்தப்பைச் சுரப்பைத் தூண்டும் (ஊhழடயபழபரந) தன்மைகளைக் கொண்டதாக அறியப்படுகிறது. மேலும், இத்தகைய பாரம்பரிய உணவுப் பயன்பாடுகள் தலைமுறைதோறும் வாய்மொழி மற்றும் நடைமுறை அறிவாகக் கடத்தப்பட்டு வந்துள்ளன. குறிப்பாக ஆடி அமாவாசை போன்ற விரத நாட்களில் பயன்படுத்தப்படும் பருவகால உணவுகள், அந்தந்தக் காலநிலைக்கு ஏற்ப உடலின் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்தும்வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காற்றோட்டி இளங்காயின் பயன்பாடு, உள்ளூர் தாவர அறிவும் சமூகப் பண்பாடும் இணைந்து உருவாக்கிய ஒரு நிலையான ஆரோக்கிய நடைமுறையாகும். இவ்வாய்வு. இத்தகைய பாரம்பரிய அறிவியல் அமைப்புகளை தாவரவியல் மற்றும் ஊட்டச்சத்து அறிவியலுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்த ஆய்வு இலக்கிய அடிப்படையிலான பகுப்பாய்வு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முடிவாக, ஆடி அமாவாசை விரதத்தில் காற்றோட்டி இளங்காயின் பயன்பாடு வெறும் சடங்கு சார்ந்த நடைமுறை அல்லாது, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் சமநிலைக் குலைவுகளைச் சரிசெய்யும் அறிவியல் மற்றும் இனத் தாவரவியல் அடிப்படையைக் கொண்ட ஒரு பாரம்பரிய உணவியல் மருத்துவ நடைமுறை என்பதை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் இலங்கை இந்து மரபில் காணப்படும் உணவுப் பழக்கவழக்கங்கள் பண்பாட்டு அறிவும் சுகாதார அறிவியலும் இணைந்த ஒரு முழுமையான பாரம்பரிய மருத்துவ அமைப்பாக விளங்குகின்றன என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.</description>
முன்பனி காலத்தின் விரதங்களின் சித்தமருத்துவ முக்கியத்துவம்
      <description>Title: முன்பனி காலத்தின் விரதங்களின் சித்தமருத்துவ முக்கியத்துவம்
Authors: Charuja, N.; Karunya, S.; Sivagajendran, S.; Sathiyaseelan, V.
உற்பத்தி, விரும்பியவற்றைப் பெறலாம் எனும் ஆன்மிக் நோக்கங்களைத் தாண்டி மருத்துவ ரீதியாகவும் பல முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. இக்காலத்தில் பகலின் தன்மை குறைவாகவும், நீண்ட இராப்பொழுதையும் குளிர்மையின் தாக்கம், சந்திரனின் ஆதிக்கம் போன்றவற்றினால் உடலில் கூதிர் காலத்தில் விருத்தியடைந்திருந்த பித்தம் தன்னிலை அடையும். அதேவேளை கபம் தனது விருத்தியை ஆரம்பிக்கும். இதனால் உடலில் கப நோய்களும், பித்த நோய்களும் அதிகமாக வரும். அதேவேளை முன்பனியினாலும், குளிர்ச்சியினாலும் பசித்தீ அதிகரிக்கிறது. உடலில் குளிர்மை மாறி உஷ்ணத்தன்மையும் கூடும். அதனால் உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் மாறுதல்கள் ஏற்படும். இவற்றைத் தவிர்க்கவே நமது முன்னோர்கள் இக்காலத்தில் விரதங்களைக் கைக்கொள்ளத் தூண்டி அதிகாலையில் எழுந்து, ஆலய வழிபாடுகளை மேற்கொள்ள வழிசமைத்தனர். ஆலயங்களில் காலையில் வழங்கப்படும் வில்வம். துளசி தீர்த்தத்தைப் பருகுவதன் மூலம் அதிகரித்த பசித்தீயைக் குறைக்கவும், உடலைக் குளிர்மையடையச் செய்யவும் முடிகிறது. அதுமட்டுமல்லாது விடியற் காலையில் பசித்தீ அதிகமாக இருப்பதனால் உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகி உடற்றீயை மிகுதிப்படுத்துவதுடன், தேகவன்மையும் அதிகப்படும். சரியான உணவுகளைச் சரியான வேளையில் உட்கொள்ளாது விடின் உடல் தாதுக்கள் நலிவடைந்து உடல் இளைக்கும். இதனைத் தவிர்ப்பதற்காக ஆலயங்களில் காலையில் பிரசாதமாக இனிப்பு,புளிப்பு, உப்பு சுவையுள்ள உணவுகளான சர்க்கரைப் பொங்கல், புளிச்சாதம், தயிர்ச்சாதம், மோதகம், உழுத்தங்களி, பஞ்சாமிர்தம் என்பன வழங்கப்படுகின்றன. இக்காலத்தில்பெய்யும்மழைநீர்சுத்தமானதாகவும், அதிக பிராணசக்தியுடையதாகவும், சாத்வீக குணமுள்ளதாகவும் இருக்கும். இதனைச் சேகரித்துப் பருகுவதால் உடலில் குளிர்ச்சியும், நல்ல அறிவுத் தெளிவும், சுக்கில சுரோணித விருத்தியும் உண்டாகும். மேலும் பனிநீரையும் சேகரித்து வடிகட்டி சூரியோதயத்துக்கு முன் பருகி வருவதன் மூலம் சொறி, சிரங்கு, குட்டம், உடல் எரிச்சல், இளைப்பு, வாதநோய்கள் தீரும். விரதங்கள் வெறுமனே ஆன்மிக நோக்கத்திற்கு மட்டுமல்லாது உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்றது என்பது புலனாகிறது.</description>
மருத்துநீரின் சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவம்
      <description>Title: மருத்துநீரின் சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவம்
Authors: Karunya, S.; Charuja, N.; Sivagajendran, S.; Sathiyaseelan, V.
Abstract: தமிழ் மக்கள் இயற்கையைக் கடவுளாகப் போற்றி மதித்ததன் காரணமாக பருவ நிலை மாற்றத்திற்கேற்ப கொண்டாடப்படும் பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு விளங்குகிறது. மக்களின் தன்மைகள் நிலத்தை அனுசரித்து மாறுபடுதலன்றி பொழுதிற்கு ஏற்றவாறும் மாறுபாடு அடைகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு 12 திங்கள் அதாவது ஓர் ஆண்டு ஆகின்றது. இதனைப் பெரும் பொழுது என்பர். இது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என 6 பகுதிகளைக் கொண்டுள்ளது. இளவேனில் காலத்தின் (சித்திரை, வைகாசி) தொடக்க நாளாகிய சித்திரை மாதம் முதலாம் திகதி அதாவது சூரியபகவான் மேடராசிக்குள் பிரவேசிக்கும் காலம் சித்திரை வருடப்பிறப்பாகும். இந்நன்னாளில் வருடம் பிறக்கும் விஷ_ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்ப பூர்வமாகத் தலையிலே மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து புத்தாடையணிந்து இறைவழிபாடாற்றி, பெரியோர்களிடம் ஆசி பெற்று, கைவிசேடம் பரிமாறி, அறுசுவை உணவு உண்டு பாரம்பரிய விளையாட்டுக்ளில் ஈடுபட்டு பண்டிகையைச்சிறப்பாகத் தமிழ்மக்கள்கொண்டாடுவார்கள். இவ்வாய்வின் நோக்கம் மருத்துநீரினை இப்பண்டிகைக் காலத்தில் பயன்படுத்துவதில் உள்ள சித்தமருத்துவ மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தை ஆராய்வதாகும். இவ்வாய்வு இலக்கிய விளக்கவியல் ஆய்வு முறையியலில் மேற்கொள்ளப்பட்டதுடன் தரவுகள் சித்தமருத்து நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து தொகுக்கப்பட்டன. மருத்துநீர் என்பது எமது முன்னோர்களால் புத்தாண்டு பிறக்கும் புண்ணிய காலத்தில் உடல் வெப்பம் குறைந்து நோய்கள் தீரவும், தோஷ நிவர்த்திக்காகவும் பல மூலிகைகளை ஒன்று சேர்த்துக் காய்ச்சி தலையிலும் உடலிலும் நீராடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட நீராகும். மருத்துநீரில் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஸ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம். அறுகு, பீர்க்கு, மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பலி முதலிய 13 மூலிகைகளும், பால், கோமயம், கோசலம், கோரோசணை ஆகிய 4 உபரசங்களுமாக 17 மூலப்பொருட்களைக் கொண்டுள்ளது. இதில் 3 வகையான பூக்கள், 3 வகையான இலைகள், 3 வகையான முழுத்தாவரங்கள், 2 வகையான மட்டநிலத்தண்டுகள், 2 வகையான உலர் பழங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதில் 50மூ ஆனவை சீத வீரியத்தையும், 50மூ ஆனவை வெப்ப வீரியத்தையும் கொண்டுடிருப்பதால் உடலில் ஏற்படும் தட்ப வெப்ப மாற்றத்தை சமநிலைப்படுத்துகின்றன. இம்மூலப்பொருட்களின் மருத்துவச் செய்கைகளில் கோழையகற்றி (7), வியர்வைபெருக்கி (5), குளிர்ச்சியுண்டாக்கி (4), துவர்ப்பி (4), அகட்டுவாய்வகற்றி (4), வெப்பகற்றி (4) என்பன காணப்படுகின்றன. வெப்ப மிகுதியினால் அம்மை நோய்கள் உருவாவதுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனால் தொற்று நோய்களும் இக்காலத்தில் ஏற்படும். உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு வியர்வைபெருக்கி, குளிர்ச்சியுண்டாக்கி, வெப்பகற்றி, வரட்சியகற்றி போன்ற செய்கைகளும், உடல் உரமாக்கி, உடற்றேற்றி, துவர்ப்பி போன்ற செய்கைகள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதற்கும் பயன்படுகின்றன. இளவேனில் காலத்தில் சூரியன் பூமிக்கு அண்மையில் வருவதால் சூழலின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் பின்பனி காலத்தில் மக்களில் தன்னிலை விருத்தியடைந்திருந்த கபம் வேற்றுநிலை விருத்தியடையும். இக்கப மிகுதியினால் பசித்தீ கெட்டு கபப் பிணிகள் உருவாகும். பிளேவினொய்ட், பீனோலிக், ரனின், அல்கலொய்ட், சப்போனின், குக்குமின், ஜின்ஜரோல், பிப்பெரின், அந்தோசயனின், அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகியன மருத்துநீரில் உள்ள முக்கிய வேதியல் சத்துக்களாகும். இம்மூலப்பொருட்களின் வேதியல் சத்துக்கள் கபப்பிணிகள், பித்த நோய்கள் மற்றும் தோல் நோய்களைக் குணப்படுத்துவதுடன் உடலை வலுப்படுத்தவும், மனதைப் புத்துயிர்ப்படையவும் செய்கின்றன. இந்து சமயம் வெறுமனே நம்பிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்ட வாழ்வியல் முறை அல்ல. அது அறிவியல் சார்ந்த வாழ்வியல் முறையைக் கொண்டமைந்தது என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மருத்துநீர் விளங்குகிறது.</description>
இந்து வாழ்வியலில் பருவகால மாற்றமும் ஆரோக்கியப் பகிர்வும்: இளவேனிற்கால சித்திரைக்கஞ்சியை அடிப்படையாகக் கொண்டது
      <description>Title: இந்து வாழ்வியலில் பருவகால மாற்றமும் ஆரோக்கியப் பகிர்வும்: இளவேனிற்கால சித்திரைக்கஞ்சியை அடிப்படையாகக் கொண்டது
Authors: Arivazhagan, N.; Rishikanthi, P.; Subaskar, M.; Sathiyaseelan, V.
Abstract: இந்து வாழ்வியல் என்பது வெறும் சடங்குகளின் தொகுப்பல்ல. அது இயற்கை மாற்றங்களோடும் மனித உடலியங்கியலோடும் இணைந்த அறிவியல் பூர்வமான வாழ்க்கை முறையாகும். தமிழ் ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதம் இளவேனிற்காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இக்காலத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் மனித உடலில் பித்தம் (அழல்) உயரும் இதனால் வாதம் மற்றும் கபம் ஆகியவற்றின் சமநிலை பாதிக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தின் 'அண்டத்தில் உள்ளதே பிண்டம்' என்ற கோட்பாட்டின்படி, புறச்சூழல் மாற்றங்கள் உடலின் உள் நிலைகளிலும் பிரதிபலிக்கின்றன. இந்நிலையை சமநிலைப் படுத்துவதற்காக உருவான பாரம்பரிய நடைமுறையாக 'சித்திரைக்கஞ்சி' அல்லது ‘குளிர்த்திக் கஞ்சி' வழங்கும் வழக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆய்வு, இளவேனிற்கால வெப்பத்தால் ஏற்படும் உடலியல் மாற்றங்களை சமநிலைப் படுத்துவதில் சித்திரைக்கஞ்சியின் பங்கை ஆராய்வதையும், ஆலய மற்றும் கிராமிய சூழலில் இது சமூக நல்லிணக்கத்தை எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கட்டுரை மானுடவியல் மற்றும் சித்த மருத்துவ இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்ட தொகுப்பாய்வாகும். குறிப்பாக, மாரியம்மன் ஆலயங்களில் கடைப்பிடிக்கப்படும் குளிர்த்திச் சடங்குகள் மற்றும் கஞ்சி தயாரிப்பு முறைகள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. சித்திரைக்கஞ்சியில் பயன்படுத்தப்படும் சிவப்புப் பச்சையரிசி (ழசலணய ளயவiஎய), மோர், இளநீர், சின்ன வெங்காயம் (யுடடரைஅ உநிய), கத்தரிப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, உள்ளி, இஞ்சி, சீரகம், மேலும் யாழ்ப்பாண மரபில் அரிசி, பாசிப்பயறு, தேங்காய்ப்பால் மற்றும் கருப்பட்டி போன்ற பொருட்கள் சேர்ந்து உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சத்தான மற்றும் எளிதில் செரிமானமாகும் மருந்துணவாக அமைகின்றன. இவை தாதுச்சத்து, ஆற்றல் மற்றும் நீர்ச்சத்து சமநிலையைப் பேணுவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, இலகுவில் சமிபாடடைந்து விரைவில் அகத்துறிஞ்சப்படுவதாகவும் மற்றும் தடுப்பு மருத்துவப் பண்புகளால் கோடைகாலத் தொற்றுநோய்கள் மற்றும் வெப்பத் தாக்கங்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. அதேவேளை, ஆலயங்களிலும் கிராமியச் சூழல்களிலும் சாதி, மத, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒன்றுகூடி இக்கஞ்சியைத் தயாரித்து பகிர்ந்து உட்கொள்வது தர்மம் மற்றும் பகிர்வு போன்ற சமூகக் கோட்பாடுகளை மதித்து, சமூக நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துகிறது. இதனால், சித்திரைக்கஞ்சி வழக்கம் பாரம்பரிய அறிவும் சமூக சுகாதாரக் கருத்துக்களும் ஒருங்கிணைந்த வாழ்வியல் நடைமுறையாக விளங்குகிறது. இன்றைய நவீன சூழலில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வாழ்க்கை முறையியல் நோய்களை எதிர்கொள்ள, இத்தகைய பாரம்பரிய மருந்துணவு முறைகள், பிரதானமாக கஞ்சி வகைகள் நிலையான அணுகு முறையாகப் பயன்படுகின்றன. எனவே, சித்திரைக்கஞ்சி என்பது வெறும் உணவுப் பழக்கமாக அல்லாமல், இயற்கையோடு இணைந்த மருந்துணவு மற்றும் சமூக தடுப்பு மருத்துவ முறையாக கருதப்பட வேண்டும். இத்தகைய மரபுகளை பாதுகாத்து பரப்புவது, எதிர்கால சமூக நலனுக்குத் தேவையான ஒரு முக்கிய வழிமுறையாகும்.</description>