DSpace Collection:
நிரந்தரமற்றவற்றை நிரந்தரமாக்கல் : யாழ்ப்பாணத்துக் கோயில் முகமண்டபங்களின் கோல, நிலை மாற்றங்கள்
    <description>Title: நிரந்தரமற்றவற்றை நிரந்தரமாக்கல் : யாழ்ப்பாணத்துக் கோயில் முகமண்டபங்களின் கோல, நிலை மாற்றங்கள்
Authors: Sanathanan, T.
Abstract: யாழ்ப்பாணத்துக் கோயில் கட்டடக்கலை பற்றிய வெகுசன நம்பிக்கைக்கும், நடை முறைக்குமிடையிலுள்ள முரண்பாட்டைக் கட்டுடைப்பதனூடாக யாழ்ப்பாணத்து கோயில் கட்டடக் கலையின் தனித்துவத்தையும், இயங்கியலையும் நிறுவ முயல்கிறது இக்கட்டுரை. முகமண்டபங்களை மையமாகக் கொண்ட இந்த வாசிப்பு அண்மைக் காலமாக பிரபல்யமடைந்து வரும் வில்லுமண்டபங்களை அவற்றின் பண்பாட்டு அசை வியக்கத்தில் சூழமைக்க முயல்கிறது. இந்த முகமண்டபங்களை விழாத் தேவைகளுக்காக அமைக்கப்படும் தற்காலிக பந்தல் அமைப்புகளின் அழகியலின் நிரந்தர ஊடகங்களிலான நிலை மாற்றமாக இக்கட்டுரை வாதிக்கிறது. அத்துடன் இக்கோல நிலை மாற்றத்தைத் தீர்மானிக்கும் மரபு. வெளிச்செல்வாக்கு, பொருளாதாரம், போஷகரின் நிலை, கலைஞர்களின் நிலவரம், ஊடக சாத்தியப்பாடு மற்றும் கருத்து நிலை என்பனவற்றை திரை விலக்குகின்றது.</description>
தொல்காப்பியத்தில் இசைச் செய்திகள்
    <description>Title: தொல்காப்பியத்தில் இசைச் செய்திகள்
Authors: Karuna, K.
Abstract: சிறப்பு மிகு கலைகளுள் ஒன்றான இசைக்கலை பற்றிய பல செய்திகள் பழந்தமிழர் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இத்தகைய கலைகளின் வரிசையில் தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலில் உள்ள இசை பற்றிய பல செய்திகள் இசையின் பழமையையும் முக்கியத்துவத்தினையும் விளக்குவதாக அமைகின்றன. அவ்வகையில், இவை யாவும் இவ்வாய்வுக் கட்டுரையில் இசையின் ஒழுங்குமுறை. நிலங்களுக்குரிய பண்வகைகள். வண்ணங்களின் வகைகள். யாப்பு வகைகளுக்குரிய ஓசைகள் முதலான பதினான்கு இசைத்தலைப்புகளின் வழியாக விரிவாக நோக்கப்படுகின்றன.</description>
பண்பாடும் கல்வியும்
    <description>Title: பண்பாடும் கல்வியும்
Authors: Rasanayagam, J.
Abstract: கல்வி முறைகள் நாட்டினுடைய பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து உருவாக்கப்படுவது போலப் பண்பாடும் நாட்டின் கல்வி முறையோடு தொடர்பு பட்டு வளர்ந்து வந்துள்ளது. பண்பாட்டிற்கும் கல்விக்கும் இடையில் உள்ள தொடர்பு மிகப்பழமையானது என்பதற்குப் பல ஆதாரங்கள் உண்டு. நவீன கல்விச்சிந்தனைகளும் பண்பாட்டுக் கல்வியை வலியுறுத்துகின்றன. கல்வியின் மூலம் அறிவினை மட்டும் வளர்ப்பதை நோக்கமாகக் கொள்ளாது ஒருவனுடைய மானுடப் பண்பும் மேலோங்கிச் செல்ல வேண்டுமென்பதை இவ் ஆய்வு எடுத்துக்காட்டுகின்றது.</description>
தென்னிந்திய சாஸ்திரிய இசையின் ஆரம்பப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமான இராகத்தைக் கண்டறிவதற்கான செயல்நிலை ஆய்வு
    <description>Title: தென்னிந்திய சாஸ்திரிய இசையின் ஆரம்பப் பயிற்சிக்கு மிகவும் பொருத்தமான இராகத்தைக் கண்டறிவதற்கான செயல்நிலை ஆய்வு
Authors: Tharshanan, S.
Abstract: தென்னிந்திய சாஸ்திரீய இசையின் ஆரம்பப் பயிற்சிக்கு உபயோகிக்கப்பட்டுவரும் மாயாமாளவகெளளை இராகத்தின் பொருத்தப்பாட்டையும், இந்த இராகத்தைவிட மிகவும் பொருத்தமானதாக வேறொரு இராகம் அமைய முடியுமா என்பதையும் ஆராயும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை மாணவரிடையே நடத்தப்பட்ட செயல்நிலை ஆய்வே இதுவாகும். ஆய்வின் முடிவுகள் ஹரிகாம்போதி இராகமே மிகவும் பொருத்தமானது என்பதைக் காட்டி நிற்கின்றன.</description>