2004 JULY ISSUE 2 Vol XIV
தந்திரோபாய உருவாக்கற் செய்முறையில் வெளிச்சூழல்
Thevarasa, K.
உலக மயமாக்கலினால் மாறிவரும் வணிகத்தில் தோன்றிய போட்டிச் சூழல் நிறுவனங்களுக்கான தந்திரோபாய முகாமைத்துவத்தை விலியுறுத்தி வருகின்றது போட்டிச் சூழலானது நிறுவனங்களின் கட்டுபாட்டுக்கு உட்பட்ட அகச்சூழல் காரணிகளையும், நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட புறச்சூழல் காரணிகளையும் அடக்கியுள்ளது இவற்றில் நிறுவனங்களின் வெற்றிக்கான புறச்சூழல் காரணிகளை இனங்காண எவ்வாறு தந்திரோபாயச் செய்முறைகளை மாற்றியமைக்கலாம் என்பது பற்றிய ஆய்வினை இக்கட்டுரை முன்வைக்கின்றது.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் இலக்கணச் சுருக்கம் - ஓர் அறிமுகம்
Senkathirchselvan, P.
தமிழிலே பழந்தமிழிலக்கண நூல்கள் பல கிடைக்கின்றன. அவற்றுட் பலவற்றின் மொழிநடை பிற்காலத்தவர்களுக்குக் கடினமாக அமைகின்றது. அந்த வகையிலே தொல்காப்பியம், நன்னூல் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது காலத்துக்கு வேண்டிய புதிய விடயங்களைச் சேர்த்தும் தேவையற்ற விடயங்களை நீக்கியும் எளிமையான மொழிநடையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் எழுதிய இலக்கணச்சுருக்கத்திலுள்ள புதுமையான விடயங்களை அறிமுகப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இந்துமக்களின் பரம்பல் கலாசார குடிப்புள்ளியியல் நோக்கு
Kugabalan, K.
குடித்தொகைக் கல்வியானது மக்களது வாழ்வியல் பண்புகளோடு பின்னிப்பிணைந்துள்ளது. இனம், மதம், மொழி, பண்பாடு போன்றன குடித்தொகைக் கூட்டுப்பகுதிக்குள்ளடக்கப்படுகின்றன. இந்த வகையில் மதம் பற்றிக் கல்வி குடித்தொகைக் கல்வியுடன் நெருங்கிய தொடர்புடையது. இவ்வாய்வானது உலகில் வாழும் மக்களில் ஒரு பகுதியினரால் உள்வாங்கப்பட்டு பின்பற்றிவரும் இந்துமதத்தின் தோற்றம், அம்மதத்தைப் பின்பற்றுபவர்களின் உலகளாவிய பரம்பல் போக்கு மற்றும் இம்மதம் எதிர்நோக்கும் சவால்கள் போன்றன பற்றி விளக்கிச் செல்கிறது.
இலங்கையிற் கிடைத்த பார்வதி வெண்கலச் சிலைகள்
Krishnarasa, S.
இலங்கையின் வெண்கலப்படி மக்கலை வரலாற்றில் மத்திய காலமான பொலன்னறுவைக்காலம் மிகவும் தனித்துவமான பங்களிப்பினை வழங்கியிருப்பதனைக் காண்கின்றோம். பௌத்த - இந்து வெண்கலப்படிமங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்ட காலம் இக்காலமாகும். இலங்கையின் சுதேச மரபுகளும், விதேச மரபுகளான தென்னிந்தியக்கலைமரபுகளும் கலந்த வகையில் பஞ்சலோக கலை மரபுகளும், கற்சிற்பக்கலை மரபுகளும் பொலன்னறுவைக்காலக் கலைக்கூடங்களை அணி செய்த கலை வரலாற்றை சிவன், நடராசர், விஷ்ணு மற்றும் பார்வதி வெண்கலப்படிமங்களிலிருந்து கண்டு கொள்ளலாம். இவ்வாய்வுக்கட்டுரையின்கண் பொலன்னறுவையில் இருந்து கிடைத்த பார்வதி வெண்கலப்படிமங்கள் பற்றி ஆராயப்படுகிறது.