Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9570
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorPoongulaly, S.-
dc.date.accessioned2023-06-23T03:35:34Z-
dc.date.available2023-06-23T03:35:34Z-
dc.date.issued2022-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9570-
dc.description.abstractதொழில்நுட்ப வளர்ச்சியினைத் தொடர்ந்து மக்கள் ஊடகத்தினை நுகர்வதென்பது இன்றியமையாததொன்றாகக் காணப்படுகின்றது. மக்கள் தமது அறிவுத் தேவையை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு அச்சு, இலத்திரனியல், புதிய மற்றும் சமூக ஊடகங்கள் என அனைத்தினையும் நுகர்ந்து கொள்வதனை அவதானிக்க முடியும். இந்நிலையில், கொரோனா பெருந்தொற்றுக் காலங்களில் வழமைக்கு மாறாக உலகளாவிய ரீதியிலும் நாடளாவிய ரீதியிலும் முடக்கங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து மக்கள் மற்றைய ஊடகங்களை விடவும் சமூக ஊடகங்களை மட்டுமே முற்றுமுழுதாக நம்பியிருந்த நிலையினையும் அவதானிக்க முடியும். எனவே, இவ்வாறான காலப்பகுதியில் சமூக ஊடகங்களை நுகருகின்ற யாழ்ப்பாண சமூக மக்கள் மத்தியில் ஊடக விளங்கறிவு போதுமானதளவில் காணப்படுகின்றதா என்பதனைக் கண்டறிவதே இவ் ஆய்வின் பிரதானமான நோக்கமாகக் காணப்படுகின்றது. ஆய்விற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட காலப்பகுதியாக 2020ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் தொடக்கம் டிசெம்பர் மாதம் வரையிலான ஒரு வருடமும் மற்றும் 2021ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஜுன் மாதம் வரையான ஆறு மாதங்கள் என பதினெட்டு மாதங்கள் வரையறைக்குட்படுத்தப்பட்டு, ஆய்வுக்கான கருவியாக அவதானிப்பு பயன்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில் யாழ்ப்பாண மாவட்டத்து மக்கள் மத்தியில் கொரோனா பெருந்தொற்றுத் தொடர்பான அறிமுகம், தொற்று ஏற்படும் விதம், தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க கையாள வேண்டிய வழிமுறைகள், தொற்றுக்காக வழங்கப்படும் தடுப்பூசி பற்றிய விபரங்கள், பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான மக்களின் தகவலறிவை அறியும் பொருட்டு, நுகரப்பட்ட சமூக ஊடகங்களான முகநூல் (குயஉநடிழழம), புலனம் (றூயவளயுpp), வைபர் (ஏiடிநச) மற்றும் வலையொளி (லுழரவுரடிந), வலைப்பூ (டீடழப)இ கீச்சகம் (வுறவைவநச) வழியாகப் பெறப்பட்ட தரவுகள் ஆய்வாளரால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. ஆய்வுக்கான கருத்தியலின் அடிப்படையில் ஊடகப் பெறுநர்கள் - ஆதிக்கப் பெறுநர்கள் (னுழஅiயெவெ சுநயனநசள), பேச்சுவார்த்தைக்குட்பட்ட பெறுநர்கள் (நேபழவயைவநன சுநயனநசள), எதிர்ப்புப் பெறுநர்கள் (ழுppழளவைழையெட சுநயனநசள) என்ற வகைப்பாட்டின் கீழ் வகைக்குட்படுத்தப்பட்டனர்.en_US
dc.language.isootheren_US
dc.subjectசமூக ஊடகங்கள்en_US
dc.subjectபோலிச் செய்திகள்en_US
dc.subjectஊடக விளங்கறிவுen_US
dc.subjectயாழ்ப்பாணத்துச் சமூக மக்கள்en_US
dc.subjectகொரோனா இடர்காலம்en_US
dc.subjectபெறுநர் கோட்பாடுen_US
dc.titleயாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஊடக விளங்கறிவு: கொரோனா காலத்தில் போலிச்செய்திகள் நுகர்வை அடிப்படையாக கொண்ட அவதானிப்புen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Media Studies



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.