Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9511
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorStrella Nancy, S.-
dc.contributor.authorPaul Rohan, J.C.-
dc.date.accessioned2023-06-05T06:15:18Z-
dc.date.available2023-06-05T06:15:18Z-
dc.date.issued2022-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/9511-
dc.description.abstractஇவ் ஆய்வானது இலங்கையின் பதுளைப் பிரதேசத்தில் டீன்ஸ்லான்ட் கிராமத்தில் காணப்படும் கருங்கல் அகழ்வு முயற்சிகளை சுற்றுச் சூழல் இறையியல் பின்னணியில் ஆராய்ந்து, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் செயற்பாட்டிற்கு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இவ் ஆய்வின் ஊடாக படைப்புக்களின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகின்றன. டீன்ஸ்லான்ட் கிராமத்தின் கருங்கல் அகழ்வு செயற்பாடுகள் இறைத்திட்டத்திற்கு ஏற்றதா? அல்லது முரணானதா? என்பதை தேடிக் கண்டறியும் முயற்சியே இவ் ஆய்வாகும். இறைவனின் படைப்பும் மனிதனின் அதீத நுகர்வும் சுற்றுச் சூழல் இறையியல் பின்னணியில் ஆராயப்படுகிறது. திருவிவிலியம், திரு அவைத் தந்தையர்களின் படிப்பினைகள், சுற்றுமடல்கள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகள் ஊடாக சுற்றுச் சூழல் இறையியல் தொடர்பான விடயங்களை பெறுவதற்கு தொகுத்தறிவு முறையியல் (ஐனெரஉவiஎந ஆநவாழன) கையாளப்படுகின்றது. இம்முறையின் மூலமாக இறைவனின் படைப்பு மற்றும் மனிதனின் அதீத நுகர்வுக் கலாசாரம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு இலகுவாக முன்வைக்கப்படுகிறது. டீன்ஸ்லான்ட் கிராமத்தின் கருங்கல் அகழ்வு செயற்பாடுகளின் தோற்றம், நடைமுறை விடயங்கள் பற்றிய எடுத்துரைப்பை மையப்படுத்தி கள ஆய்வு, நேர்காணல், வினாக்கொத்து ஆகிய ஆய்வுக் கருவிகள் ஊடாக முதலாம் நிலைத் தரவுகள் பயன்படுத்தப்படுவதோடு, அவதானிப்பு முறையை (ழுடிளநசஎயவழசல ஆநவாழன) அடிப்படையாக இவ் இயல் கொண்டுள்ளது. டீன்ஸ்லான்ட் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கருங்கல் அகழ்வு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் என்போரிடம் வினாக்;கொத்து, நேர்காணல் மூலமாக தகவல் திரட்டப்பட்டு, கருங்கல் முயற்சிகள் தொடர்பான பல்பரிமாண நிலையில் ஆராயப்பட்டு சுற்றுச் சூழல் பார்வையிலும் கிறிஸ்தவ இறையியல் நோக்கிலும் திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. கருங்கல் அகழ்வு பின்னணியும் படைப்புப் பற்றிய இறைத்திட்டமும், சுற்றுச் சூழல் இறையியல் பின்னணி உய்த்துணர் முறையை (னுநனரஉவiஎந ஆநவாழன) அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இதன் மூலம் படைப்பை பாதிப்படையச் செய்யும் மனித அறியாமை, ஆதிக்க மனப்பான்மை என்பவற்றை களையச் சுற்றுச் சூழல் இறையியல் அழைப்பு விடுக்கின்றது. ஆய்வில் இரு கருதுகோள்கள் முன்வைக்கப்படவுள்ளன. சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு சுற்றுச் சூழல் இறையியல் பெரும் பங்காற்ற முடியும் என்ற கருதுகோளும், இறைத்திட்டத்திற்கு முரணான டீன்ஸ்லான்ட் கருங்கல் அகழ்வுச் செயற்பாடுகள் மாறாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்ற கருதுகோளும் நிறுவப்பட்டுள்ளன. கருங்கல் அகழ்வு நடவடிக்கையானது இறைத் திட்டத்திற்கு முரணானது என்ற உண்மை ஆய்வின் மூலம் கண்டறியப்படவுள்ளது. இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இந்த தொழில் தொடர்பாக எதிரிடையான மனநிலையையே கொண்டு காணப்படுகின்றனர் என்பது இனங்காணப்பட்டது. இக்கருங்கல் அகழ்வினால் ஏற்படும் பாதிப்புக்களாக இயந்திரமயமாதல், சூழல் மாசடைதல், தொழிலாளர்களின் ஊதியப்பிரச்சனை, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் உயிரினங்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் போன்றன கண்டறியப்பட்டன. எனவே இத்தகைய இறைத்திட்டத்திற்கு முரணான கருங்கல் அகழ்வு முயற்சிகள் மாறாவிட்டால் அங்குள்ள படைப்புகளின் நிலையும், மனிதர்களின் நிலையும் கேள்விக்குள்ளாக்கப்படும் என்பது இனங்காணப்பட்டது. ஆய்வின் ஆலோசனைகளாக இறைவனுக்கும், படைப்புக்கும் இடையிலான உறவை நினைவூட்டல், மனிதனுக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான உறவை நினைவூட்டல், சுற்றுச் சூழலியல் மனமாற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தல் போன்றவை முன்வைக்கப்பட்டுள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectபடைப்புen_US
dc.subjectநுகர்வுக் கலாசாரம்en_US
dc.subjectகருங்கல் அகழ்வுen_US
dc.subjectசுற்றுச் சூழல்en_US
dc.subjectஇறையியல்en_US
dc.subjectஇறைத்திட்டம்en_US
dc.titleஅதீத மனித நுகர்வும் இயற்கை வளங்களும்: டின்ஸ்லாண்ட் கிராமத்தின் கருங்கல் அகழ்வும் சுற்றுச் சூழல் இறையியலுமen_US
dc.typeArticleen_US
Appears in Collections:Christian & Islamic Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.