Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8758
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorGnakumaran, N.-
dc.date.accessioned2022-12-08T04:43:37Z-
dc.date.available2022-12-08T04:43:37Z-
dc.date.issued1993-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8758-
dc.description.abstractமனிதனானவன் தன்னைப்பற்றி அல் லது தான் வாழும் உலகினைப் பற்றி ஏதும் எடுகோள்களினை உருவாக்காது வாழவோ அன்றிச் சிந்திக்கவோ முடிவதில்லை. இவ்வெடுகோளினைப் பின்னணியாகக் கொண்டே இராதாகிருஷ்ணனும் மெய்யி யலானது நாம் வாழும் உலகினைப் பற்றி விபரிக்க முயலுகின்றதெனச் சுட்டுகின் றார். 1. மெய்யியலானது இவ்வுலகின் விடயங்கள் பற்றி ஆராய்வதில்லை. இந்நிலை விஞ்ஞானங்களுக்கே உரியதா கும். ஆனால் மெய்யியலானது வாழ் வின் நோக்கம், பயன்பாடு, பிரபஞ்சம், இருப்பு பற்றிய ஒரு காட்சியினை அளிக் கின்றது. சங்கரரின் உலகு பற்றிய நோக்கானது சங்கரரின் அத்வைத வேதாந்தத்தினை அடி நிலையாகக் கொண்டு விளக்க முற்படுகின் றது. சங்கரர் போல சாங்கியர், துவைதி கள், விசிட்டாத்துவைதிகள், சைவசித்தாந் திகள், சமணர் போன்ற பல தத்துவவாதி களும் பல்வேறான வகையில் உலகு பற்றிய எடுகோளினைக் கொண்டிருந்தனர். ரர் வேத உபநிடதங்களினை ஏற்று வைதீக மரபுக்குரியவராக இருந்த நிலையில் அவரது சிந்தனைகள் வேத உபநிடத மரபுகள் என்ற எல்லைக் கோட்டுக்குள் அடங்கிய ஓர் எடு கோளாகவும் அமையவேண்டுமென்பது அடிப் படையானதாயிற்று. எனவே வேத உப நிடதம் கூறும் கருத்துக்களுக்கு முற்றும் முரணாகாத வகையிலும், பொதுமைச் சிந் தனைக்கும் குறிப்பாகத் தர்க்கச் சிந்தனைக் கும் பொருந்துவதான முறையிலும் சங்கர ரது கருத்தளிப்பானது அமைய வேண்டிய தாயிற்று. எனவே சங்கரர் சுட்டிய உலகு பற்றிய கருத்தினைத் தர்க்க ரீதியில் நோக்குகையில் அவர் நின்ற வட்டத்தின் பின்ன ணியையும் மனத்திடைக் கொண்டு நோக்கு வது பயன் பயப்பதாகும். பெரும்பாலான இந்திய தரிசனங்கள் உலகு, உயிர், இறைவன் என்னும் மூன்று அம்சங்கள் பற்றிய கருத்துக்களினை எடுத் தாராய முயல்கின்றன. இவ் விளக்கங்க ளின் அடிப்படையிலேயே இவற்றிடையே நிலவும் வேறுபாடான தத்துவ நிலைப்பாடு களினை இலகுவில் இனங்கண்டு கொள்ள லாம். சங்கர வேதாந்தமும் இதற்கு விதி விலக்கல்ல. இம் மூன்றில் உயிரும், இறை யும் நேரடியாகப் பிரத்தியட்சப் பிரமாணத் திற்குட்படாதன. அதாவது காணப்படமுடி யாதவை. இவற்றைச் சிலர் ஏற்று நிற்பர். சிலர் மறுத்துரைப்பர். உலகத்தினை எல் லோரும் பொதுவாக ஏற்று நிற்பர். நேரடி யாக நாம் உலகினைக் காண்கின்றோம்; அனுபவிக்கின்றோம். பலர் இதன் உண் மைத் தன்மை ஆதாரப்படுத்தப்பட்டதாக ஏற்கின்றனர். சங்கரரும் உலகு, உயிர், இறை ஆகிய மூன்று அம்சங்களையும் ஆராயும்போது சில வாக்குகளினை ஏற்கின்றார். அதே வேளை நியாயத்தின் மூலம் உட் பொருள் ஒன்றே என்பதனை நிலை நாட்ட முயல்கின்றார். வாக்கினை ஏற் கும் நிலையில் நியாயம், அனுபவம் ஆகிய வற்றையும் இணைத்து நோக்கும் சங்கர ரின் தன்மையானது பிரகதாரணிய உப நிடதம் சுட்டும் கருத்திற்கு அண்டிச் செல் கின்றது.4 சங்கரர் நோக்கில் பிரமம், அதாவது இறை ஒன்றே உள்பொருளாகும்; உண்மைப்பொருளுமாகும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleசங்கரரின் உலகு பற்றிய நோக்குen_US
dc.typeArticleen_US
Appears in Collections:1993 MARCH, JULY ISSUE 1,2 Vol V

Files in This Item:
File Description SizeFormat 
சங்கரரின் உலகு பற்றிய நோக்கு.pdf13.53 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.