Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8487
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSuseendrarasa, S.-
dc.date.accessioned2022-11-11T05:10:41Z-
dc.date.available2022-11-11T05:10:41Z-
dc.date.issued1984-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8487-
dc.description.abstractமொழியில் ஓர் எளிமையான அடிச்சொல் அல்லது ஆக்கம் பெற்ற அடிச்சொல் மேலும் ஆக்க ஒட்டு (derivational affix)1 ஏற்பதன் மூலமோ சொல்லில் உள்ள உயிர் அல்லது மெய்யொலியில் மாற்றம் பெறுவதன் மூலமோ சொற்பெருக்கத்திற்கு இடமளிக்கிறது. எடுத்துக்காட்டாகத் தமிழில் கல் என்னும் வினையடி - வி என்னும் ஆக்க ஒட்டு (விகுதி) பெற்று கல்வி என அமைகிறது. கெடு என்னும் வினையடியில் உள்ள முதற்குறில் நெடிலாக மாறுவதால் கேடு என்னும் சொல்லைப் பெறுகின்றோம். இவ் வாறு மொழியில் அடிச்சொற்கள் ஆக்கம் பெற்றுப் பெருகும் முறை ஒரு நியதிக்குட்பட்டதாகவே உள்ளது. ஒருசொல் மொழியில் உள்ள எந்த ஒரு ஒட்டையும் ஏற்கும் என்றோ அல்லது எந்த ஒலி மாற்றத்தையும் அடை யும் என்றோ கூறிவிட முடியாது. அடிச்சொல்லும் ஆக்கச்சொல்லும் ஒரே இலக்கண வகையைச் சேர்ந் தனவாகவோ வெவ்வேறு வகையைச் சேர்ந்தனவாகவோ இருக்கக்கூடும். சில ஆக்க ஒட்டுக்கள் அடிச்சொல்லின் இலக்கண வகையை மாற்றிவிடும்; சில மாற்றுவதில்லை. மேலே காட்டிய வினையடிகள் முறையே ஆக்க ஒட்டு ஏற்று, ஒலி மாற்றம் பெற்றுப் பெயர்ச் சொற்கள் ஆக அமைந்துள்ளன. ஆங்கிலத்தில் ஆக்க ஒட்டுகள் மூலம் பெயரில் இருந்து பெயரடை அமை கிறது; வினையில் இருந்து பெயர் அமைகிறது; பெயரில் இருந்து வினை அமைகிறது; வினையில் இருந்து பெயரடை அமைகிறது. எடுத்துக்காட்டு GOT ( LumCow Season-seasonal, sing-singer, prison-imprison, acceptacceptable. இவை அனைத்தும் வகை மாறும் ஆக்கங்கள். ஆயின் ஆங்கி லத்தில் hood என்னும் ஒட்டு அடிச்சொல்லின் இலக்கண வகையை மாற்றுவ தில்லை. man, manhood ஆகிய இரண்டும் பெயரே. ஆக்க ஒட்டுகள் மூலம் மேலும் மேலும் வகை மாறும் ஆக்கங்களும் உண்டு. manliness, modernisation ஆகிய சொற்களைப் பிரித்துக் காண்க. முறையே man பெயர்; manly பெயரடை; manliness பெயர் எனவும் modern பெயரடை; modernise வினை; modernisation பெயர் எனவும் காணலாம். குறித்த ஓர் ஒட்டைச் சில சொற்கள் மட்டும் ஏற்பதுண்டு. மற்றும் ஓர் ஒட்டைப் பல சொற்கள் ஏற்பதும் உண்டு. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் - ho.od என்னும் ஒட்டு manhood, nationhood, christhood எனச் சில சொற்க ளோடுமட்டுமே வரக் காண்கிறோம். தமிழில் - த்தை என்னும் ஒட்டு நட போன்ற ஒரு சில சொற்களோடுமட்டும் வருகிறது. ஆயின் தமி மில் - இ என்னும் விகுதி செயல் முதல் பொருளில் மிகப் பல சொற்க ளோடு வரக் காண்கிறோம். எடுத்துக்காட்டுகளை கீழே (2.3) காண்க. குறித்த ஆக்க ஒட்டு ஒன்றினை ஏற்று அமையும் நூற்றுக்கணக்கான புதிய சொற்கள் நீண்டகாலம் வாழாமல் வழக்கிறந்து போவதும் உண்டு.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleயாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் ஆக்கப் பெயர்கள்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:1984 JULY ISSUE 2 Vol II



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.