Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8457
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorNuhuman, M.A.-
dc.date.accessioned2022-11-10T04:17:45Z-
dc.date.available2022-11-10T04:17:45Z-
dc.date.issued1983-07-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/8457-
dc.description.abstractதாய்மொழி கற்பித்தல் பிறமொழி கற்பித்தலில் இருந்து சிலவகை களில் வேறுபடுகின்றது. பிறமொழி கற்கும் ஒரு மாணவனுக்கு அம் மொழி முற்றிலும் புதியதேயாகும். ஆனால் தாய்மொழி கற்பவனுக்கு அது அவ்வாறல்ல. ஐந்து வயது முடிந்த பிறகுதான் ஒரு குழந்தை பாடசாலைக்குச் செல்கின்றது. அந்த வயதில் தன் சொந்த மொழியில் தனது தேவைகள் அனைத்தையும், தனது எண்ணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய மொழியறிவு அக்குழந்தைக்கு இருக்கும். ஒரு குழந்தை பாடசாலைக்கு வர முன் தன் தாய்மொழியை தான் வாழும் சமூகச் சூழலில் இருந்து பெற் றோர், சகோதரர், விளையாட்டுத் தோழர், உறவினர், அயலவர் முதலி யோரின் தொடர்புகள் மூலம் - நன்கு பேசக் கற்றுக்கொள்கின்றது. குழந்தை தன் மொழியை நன்கு பேசக் கற்றுக்கொண்டது என்னும் போது தன் மொழியின் அடிப்படை அமைப்புக்களில் நன்கு தேர்ச்சி பெற்றுக்கொண்டது என்பதே பொருளாகும். அதாவது அம் மொழியின் இலக்கணத்தை அது தன்வயப்படுத்திக்கொள்கின்றது. இதுதொடர்பாக அமெரிக்க மொழியியல் அறிஞரான ஹொக்கற் என்பவரின் கூற்றும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. ''நான்கில் இருந்து ஆறுவயது வரையுள்ள ஒரு இயல்பான குழந்தை மொழியியல் அடிப்படையில் ஒரு வளர்ந்தோனே யாவான். ஏதாவது சில புற நடைகளைத் தவிர அம் மொழியின் ஒலியின் அமைப்பை (Phonemic system) அவன் தன்வயப்படுத்துகின்றான்; அடிப்படை இலக்கணத்தை அவன் முயற்சியில்லாமல் கையாளுகின்றான்; அம் மொழி யின் அடிப்படைச் சொற்றொகுதியை அவன் தெரிந்திருக்கிறான்; அதைப் பயன்படுத்துகின்றான்.' '1 ஹொக்கற்றின் இக் கூற்று முக்கியமானது. பாட சாலைக்குச் செல்லமுன் உள்ள குழந்தையின் மொழிநிலையை இது நன்கு புலப்படுத்துகின்றது. 'மிகவும் சிக்கலான வாக்கியக்கோலங்களைப் பொறுத்த வரை ஹொக்கற்றின் கூற்று சிலவேளை மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.titleஆரம்ப வகுப்புகளில் தமிழ்மொழி கற்பித்தல்: சில அடிப்படைப் பிரச்சினைகள்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:1983 JULY ISSUE 2 Vol I



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.