Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6293
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorIqbal,S.-
dc.date.accessioned2022-09-23T07:29:05Z-
dc.date.available2022-09-23T07:29:05Z-
dc.date.issued2022-
dc.identifier.isbn9786246150075-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/6293-
dc.description.abstractஇன்றைய காலகட்டதில் நூலகங்களைப் பொறுத்தவரையில் சிறந்த நூற்சேகரிப்பு வளங்களுடன் அறிவார்ந்த தகவல்களை வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் நூலக நூற்சேகரிப்பு மேம்பாடுகள் சார்ந்து வடமாகாணத்திலுள்ள மூன்று பொது நூலகங்களை மையப்படுத்தி முதற்கட்டமாக நூற்சேகரிப்பு அபிவிருத்தி தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் வட மாகாணத்திலுள்ள பத்து பாடசாலை நூலகங்கள், பத்து பிரதேச நூலகங்கள், மூன்று வைத்தியசாலை நூலகங்கள், மூன்று நீதிமன்ற நூலகங்கள், ஓர் எண்ணிம நூ லகம் என்றவாறாக முப்பது நூலகங்களில் மாதிரி எடுப்பு மூலம் தேர்தெடுக்கப்பட்ட நூலகங்கள் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் மதிப்பிடப்பட்டது. பின்னர் நூலகர்கள், வாசகர்கள், நூலக பொறுப்பாளர்கள் மற்றும் நூலகம் சார்ந்த நூற்சேகரிப்பு குழவினருடன் நேர்காணல் ஊடாக தரவுகள் பெறப்பட்டன. ஆய்வு முடிவுகளிலின் மூலமாக ஐம்பத்தேழு வீதம் (57மூ) நூலகங்களில் நூலக நூற்சேகரிப்பு அபிவிருத்தி மற்றும் நூலகங்களின் தகவல் வளங்களை மேம்படுத்துவதின் தேவைப்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. மேலும ; நூலக நூற்சேகரிப்பைப் பொறுத்தவரையில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப அவற்றின் தெரிவுகளும், அதனை எவ்வாறு வினைத்திறனாகப் பயன்படுத்துவது என்பது பற்றிய முழுமையான மேம்பாட்டின் தேவை, தகுதிவாய்ந்த மனித வளங்களின் தேவைப்பாடு, சேகரிப்பு ஆவணங்களில் விகிதாசார மாற்றங்கள், சமூகத்தின் அதாவது வாசகர்களின் பங்களிப்பு போன்ற தேவைப்பாடுகளும் இனங்காணப்பட்டன. எனவே நூலக நூற்சேகரிப்பு அபிவிருத்தி செய்யும் போது முக்கியமாக நான்கு விடயங்கள் கவனத்திற கொள்ளப்படுதல் அவசியமாகின்றது. திட்டமிடல் அதாவது நூலக வளங்களை கொள்வனவு செய்வதற்கும், அதனை மேம்படுத்துவதற்கும் இன்றைய நவீன காலகட்டத்திற்கேற்ப தகவல் வளங்களை பெறுதலும், நூலக சேவைகளை வழங்குவதற்கும் பொருத்தமான திட்டமிடல்கள் அமைதல் வேண்டும். குறிப்பாக அவை எதிர்கால திட்டங்களை மையப்படுத்தி சேகர வளங்கள் கொள்வனவு செய்வதற்கான திட்டவரையறை மற்றும் நிதி சார் விடயங்களுடன ; முன்மொழியப்படுதல் அவசியம். அத்துடன் ஏற்கனவே உள்ள தகவல் வளங்கள் பற்றிய நூலக முகாமைத்துவம் சார்ந்த மதிப்பீடும், வாசகர் தேவை மதிப்பீட்டையும் கருத்திற் கொண்டு திட்டமிடப்படுதல் வேண்டும். திட்டமிட்ட வள சேகரிப்புக்களை மேற்கொள்ள முடியாதவிடத்து அதற்கான இடர்முகாமைத்துவம் மற்றும் மாற்றுத்திட்டங்களை உள்ளடக்கியதாக திட்டமிடல் அமைதலும், அதனை உரிய காலப்பகுதியில் செயற்படுத்துதலும் அவசியமாகும். இரண்டாவது, நூலக வளங்களை தெரிவு செய்தல் ஏற்கனவே உள்ள வளங்களை மதிப்பிடுதல், வாசகர்களின் தேவைப்பட்டியலை மீளாய்வு செய்தல், இலத்திரனியல் தொழிநுட்ப வளங்களை இனங்கண்டு சேகரித்தல், வளத்தெரிவு தொடர்பான குழுமையக் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல் மற்றும் நூ ற்பட்டியல் மதிப்பாய்வு ஆகியவற்றிற் கூடாகத் தற்கால தேவைப்பாட்டிற்கமைவாக வளத்தெரிவை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மூன்றாவது, நூலகங்களுடனான கூட்டிணை அதாவது சேகர அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக தேசிய நூ லகங்களுடன் தொடர்புகளைப் பேணுதல், ஏனைய நூலகங்களுடன ; வளங்களை பரிமாற்றிக்கொள்ளுதல், நூலகங்களுக்கிடையிலான இரவல் பரிமாற்றத் திட்டங்களை மேம்படுத்துதல், தகவல்வள சேகரிப்புகளுக்கான நிதிவளங்களைத் திரட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கூடாக சேகரஅபிவிருத்தியை மேம்படுத்த முடியும். நான்காவதாக, ஆலோசனை மற்றும்நூல்வள ஆய்வாளர்களை இணைத்தல் அதாவது தேசிய நூலகசேகரிப்பு தொடர்பான நூலகர்கள், ஆய்வாளர்கள ; உட்பட்ட குழு ஒன்றினை அமைப்பதனூடாக தகவல வளச்சேகரிப்புத் தொடர்பில் உடனுக்குடனான கலந்துரையாடல்கள் மற்றும் தேவைப்பாடுகளை கண்டடைதல், ஆவணச் சேகரிப்பு பற்றிய அவர்களது எண்ணக்கருக்கள், தற்போதைய தேவைப்பாடுகளைப் பெறுவதனூ டாக வாசகர்களது தேவை உணரப்படும். இதனூடாக சேகரிப்புக்களை அபிவிருத்தி செய்ய முடியும். இவ்வாறான திட்டங்கள் வடிவமைக்கப்படினும,; அதன் நடைமுறை சார்ந்த சாத்தியப்பாடுகள் தாமதம் அடைதல் வினைத்திறனான தகவல் மற்றும் சேகரவள அபிவிருத்தியைப் பாதிக்கும். அதற்கான செயற்பாடுகளை முன்கூட்டியே ஆயத்தப்படுத்துதலும் இன்றியமையாத ஒன்றாகும். மேலும ; தகவல் சேகரிப்பு மற்றும் பரிமாற்றத்தினை மேம்படுத்துவதில் வெளியீடுகளை பட்டியலாக்கம் செய்தல் அதற்கூடான சேகரிப்பை மேம்படுத்துதல், மீள் திருத்தம் செய்ய முடியாத ஆவணங்கள், மேலதிக பிரதிகளை அகற்றல், நூற்பாதுகாப்பு முறைமைகளைப் பேணுதல் போன்ற விடயங்களும ; முக்கியமாகின்றன. இவையனைத்தும் ஒழுங்கமைப்படுவதனூடாக சிறப்பான தகவல் வளச்சேவைகளை நூலகங்களில் வழங்கமுடியும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectநூற்சேகரிப்பு அபிவிருத்திen_US
dc.subjectதகவல் பரிமாற்ற முறைமைen_US
dc.subjectநூல் இரவல் வழங்கல்en_US
dc.titleநூலக நூற்சேகரிப்பு அபிவிருத்தி மற்றும் தகவல் பரிமாற்றம் : நூலகங்களின் தகவல் வளங்களை மேம்படுத்துவதன் தேவைப்பாடுகள் - ஓர் ஆய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:ETAKAM 2022



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.