Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5582
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorPoologanathan, P.
dc.date.accessioned2022-03-10T06:04:11Z
dc.date.accessioned2022-06-29T06:55:22Z-
dc.date.available2022-03-10T06:04:11Z
dc.date.available2022-06-29T06:55:22Z-
dc.date.issued2014
dc.identifier.issn2279-1922
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5582-
dc.description.abstractஉலக மக்கள் அனைவரினதும் வாழ்வில் அறம் இன்றியமையாத இடத்தினைப் பெறுகிறது. அறவியல் என்பது நன்மை-தீமை, சரி-பிழை, பற்றிய பகுப்பாய்வு செய்ய உதவும் அறிவியல் துறையாக விளங்குகின்றது. ஒழுக்கம், தர்மம், உண்மை, நல்லது, சரி போன்ற பதங்கள் யாவும் இவ் அறிவியலுடன் தொடர்புடையதாகும். இந்து சமயம் அனைத்திற்கும் அடிப்படையான அறவியல் பற்றி குறிப்பிடுகின்ற நூல்களில் ஒன்றாக விளங்குவது உபநிடதம். உபநிஷத் என்பது அருகில் அமர்வது என்றுபொருள். குருவின் அருகில் அமர்வது என்று பொருள். குருவின் அருகில்அமர்ந்து சீடனால் கேட்கப்பட்ட அரிய பெரிய தத்துவங்கள் அடங்கியதே உபநிடதம் எனப்படும். உhநிடதங்கள் 108 அவற்றுள் 10 உபநிடதங்கள் முக்கியமானவை. உபநிடதங்களில் பிரமம், ஆன்மா, உலகு, கன்மம் மறுபிறப்பு, முத்தி, இறைவனுக்கும்-ஆன்மாவுக்குமான தொடர்பு, என்பனவற்றோடு ஒழுக்கம் முக்கிய உபதேசமாக வலியுறுத்தப்பட்டது. உபநிடதங்கள் உலகியல் வாழ்க்கையை மறுப்பதாக இருந்தாலும் அது தர்மத்திற்கு மாறானதாகவோ, ஒழுக்கத்திற்கு எதிராகவோ இருக்கவில்லை. 'தீய ஒழுக்கத்தை கைவிடாதவன் ஒரு போதும் பிரமத்தை அடையமாட்டான்' என உபநிடதங்கள் வலியுறுத்துகின்றன். இவ் உபநிடதங்களில் ஒன்றான ஈசாவாசிய உபநிடதத்தில் உயர்ந்த அறிவியற் சிந்தனைகள் எடுத்தாளப்படுகின்றன. இவ் உபநிடதத்தில் குறிப்பிடப்படும் 18 மந்திரங்களும் பகவத்கீதையின் பதினெட்டு அத்தியாயங்களின் சாரமான 'கடமையைச் செய் பலனை எதிர்பாரததே' எனும் தர்மநெறியை எடுத்துக்கூறுகிறது. இவ் உபநிடதம் ' பற்றற்ற கடமை' எனும் அறவியற் சிந்தனையை வலியுறுத்துகிறது. இத்தகைய ஒழுக்க சிந்தனையே 19ம் நூற்றாண்டு ஜேர்மனிய மெய்யியலாளரான இமானுவேல் கான்டினது செயல்நிலை நியாயித்தலின் விமர்சனம் (Critique of practical Reason) எனும் நூலில் விளக்கப்படுகிறது. இங்கு 'கடமை' என்பதன் அடிப்படையில் அமைந்த ஓர் ஒழுக்கவியற் கோட்பாடாக இவரது (Deontological Ethical Theory) விளங்குகின்றது. பயன்கருதாமல் கடமையின் பொருட்டு செய்யப்படும் செயல்களே ஒழுக்கச் செயல்கள் என இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஒரு செயல் எந்த ஒன்றையும் சாராது கடமையின் பொருட்டு ஆற்றப்படுமாயின் அச்செயல் ஒழுக்கவியலின் தரத்தைப் பெறும் என்பதே இவரது சார்பற்ற கடப்பாடு ( Categorical Imperative) ஈசாவாஸ்ய உபநிஷதத்திலும், கான்டினது கோட்பாட்டிலும் காணப்படும் ஒத்த அறவியற்கருத்தாக்கங்களை வெளிப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வு இடம்பெறுகிறது. இவ்வாய்வினைச் சரியான முறையில் மேற்கொள்ளுவதற்கு பல்வேறுபட்ட ஆய்வுமுறையியல்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இரு கோட்பாடுகளுக்கிடையேயுமான ஒற்றுமைகளை விளக்குவதற்கு ஒப்பியல் ஆய்வுமுறை, விபரண முறையியல் என்பன பயன்படுத்தப்படுவதோடு இவ்வாய்வுக்குரிய தரவுகளாக, உபநிடத கான்டிய ஒழுக்கவியலை அறிய உதவும் மூல நூல்கள், உரைநூல்கள், விளக்க நூல்கள், ஒழுக்கம் தொடர்பில் விவாதிக்கும் ஆய்வுக் கட்டுரைகள், சஞ்சிகைகள், இணையத்தளத் தகவல்கள் என்பனவற்றிலிருந்து பெறப்பட்டு இவ்வாய்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectசார்பற்ற கடப்பாடுen_US
dc.subjectஒழுக்கம்en_US
dc.subjectகடமைen_US
dc.subjectஆன்மாen_US
dc.subjectபிரம்மம்en_US
dc.titleஒப்பாய்வு நோக்கில் ஈசாவாஸ்ய உபநிஷத - இமானுவெல் கான்டினுடைய அறவியற் சிந்தனைகள்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Research Publication - Library



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.