Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5297Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.author | Srikanthan, S. | - |
| dc.date.accessioned | 2022-02-02T07:04:52Z | - |
| dc.date.accessioned | 2022-06-27T09:10:17Z | - |
| dc.date.available | 2022-02-02T07:04:52Z | - |
| dc.date.available | 2022-06-27T09:10:17Z | - |
| dc.date.issued | 2010 | - |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5297 | - |
| dc.description.abstract | எந்தவொரு பண்பாட்டினரும் தத்தமது பண்பாட்டுத் தனித்துத்தினை பேணிப்பாதுகாப்பதில் ஆர்வமானவுள்ளனர். இந்நிலையில் இலங்கையின் போரிற்கு பின்னரான சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிலையில் தமிழர் பண்பாட்டுத் தனித்துவங்களை ஆய்வு செய்வதன் வழியே தமிழர் பண்பாட்டின் தொன்மையினையும் தனித்துவத்தினையும் பாதுகாத்தல் காலத்தில் தேவையாகும். அந்தவகையில் தமிழர் பண்பாட்டில் தாய்வழி மரபின் தொன்மையும் தொடர்ச்சியும் பற்றிய ஒரு மானிடவியல் ஆய்வாக இம்முயற்சி அமைகின்றது. உலகப் பண்பாடுகள் அனைத்திலும் குடும்பம் என்ற அமைப்பின் தோற்றத்தினைத் தொடர்ந்து தாய்வழி மற்றும் தந்தைவழி மரபு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தமிழர் பண்பாட்டில் புராதன காலம் தொடக்கம் தாய்வழி மரபு இருந்துள்ளமையினை தொல்லியல் மற்றும் இலக்கிய ஆதாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன.கர்ப்பம் தரித்தல் என்பது மனிதர்கள் மத்தியில் இவை பண்பாட்டு நம்பிக்கைகளின் வழியே கட்டியெழுப்பட்டுள்ளது. அந்தவகையில் ஆய்வின் செம்மைத்தன்மை கருதி யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் கர்ப்பம் தரித்தலுடன் தொடர்புபட்ட பண்பாட்டு பயில்வுகளை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது.அந்தவகையில் தாய்வழி மரபானது பண்டைய தமிழகமாக கேரளா மாநிலப்பகுதிகளில் இருந்துள்ளமையினை ஆய்வுகள் வெளிப்படுத்தும் அதேவேளை இலங்கையின் மட்டக்களப்பு தமிழர் பண்பாட்டிலும் நிலவிவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வானது யாழ்ப்பாணத்தில் மரபார்ந்த பண்பாட்டு பராம்பரியத்தினைக் கொண்ட யாழ்ப்பாணத்தின் வண்ணார்பண்ணைப் பகுதியினை ஆய்வுப்பிரதேசமாகக் கொண்டுள்ளது. மேலும் இவ்வாய்வானது மானிடவியல் ஆய்வு அணுகுமுறையில் மிகவும் முக்கியத்துவமான இனக்குழுமவியல் ஆய்வு முறையியலின் வழியே மேற்கொள்ளப்படுகின்றது. இத்துடன் தரவு சேகரிக்கும் நுட்பமாக நேர்காணல், பங்குபற்றும் அவதானம், விடயக்கள ஆய்வு, வினாக் கொத்து மற்றும் காட்சிசார் மானிடவியல் பதிவுகள் போன்றன முக்கியம் பெறுகின்றது. கர்ப்பம் தரித்தலுடன் தொடர்புபட்ட வேறுபட்ட பயில்வுகளின் மத்தியில் ஆழமாக தமிழர் பண்பாட்டின் தாய்வழிமரபின் எஞ்சி நிலைத்த கூறுகள் காணப்படுகின்றமையினை இவ்வாய்வு வெளிக் கொணர்கின்றது. போரிற்குப் பின்னரான சமூக மேம்பாட்டில் பண்பாட்டுத்தனித்துவம் தொடர்பான தேடல் இன்றியமையாதனவாகவுள்ளன. இவ்வகையான ஆய்வுகள் பண்பாட்டின் நிலைபேற்றுத் தன்மைக்கும் நீடிப்புத்தன்மைக்கும் மட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட இனத்தின் தொன்மையினை பாதுகாக்கவும் அவசியமானதாகும். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.subject | :பண்பாடு | en_US |
| dc.subject | மரபு | en_US |
| dc.subject | பாரம்பரியம் | en_US |
| dc.title | யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் தாய்வழி மரபின் தொன்மையும் தொடர்ச்சியும்: கர்ப்பம் தரித்தலுடன் தொடர்புடைய பண்பாட்டு பயில்வுகளை அடிப்படையாகக் கொண்ட மானிடவியல் ஆய்வு. | en_US |
| dc.type | Article | en_US |
| Appears in Collections: | Sociology | |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.