Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5004Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.author | Mary Winifreeda, S. | - |
| dc.date.accessioned | 2022-01-11T07:38:27Z | - |
| dc.date.accessioned | 2022-06-27T05:08:56Z | - |
| dc.date.available | 2022-01-11T07:38:27Z | - |
| dc.date.available | 2022-06-27T05:08:56Z | - |
| dc.date.issued | 2015 | - |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/5004 | - |
| dc.description.abstract | திருவிவிலியமானது தூய ஆவியின் தூண்டுதலுடன் மனித ஆசிரியரால் எழுதப்பட்டு, திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற புனித நூல். இது இறைவெளிப்பாட்டின் பதிவேடு என்றழைக்கப்படுவதுடன், பல்வேறு இலக்கிய வடிவங்களைக் கொண்டமைந்த ஒரு நூற் களஞ்சியமாகத் திகழ்கின்றது. இன்று ஆசியா, ஆபிரிக்கா , தென் அமெரிக்கா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் திருவிவிலியம் சமூகவியல் நோக்கின் அடிப்படையில் உளவியல் கண்ணோட்டம், பெண்ணியப் பார்வை, விடுதலை நோக்கு போன்ற பல மனிதவியல் ஆராய்ச்சிகள் தோன்றியுள்ளன. இப்புனித நூல் இறையியல் கண்ணோட்டத்துடன் மட்டுமல்லாது, இன்றைய சூழலில் பன்முக வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்னும் எண்ணக்கருவை மையமாகக் கொண்டு பெண்ணியக் கண்ணோட்டத்தில் இவ் ஆய்வு மேற்கௌ;ளப்பட்டுள்ளது. ஆய்வானது பின்வரும் நோக்கங்களைக் கருத்திற் கொண்டு மேற்கௌ;ளப்பட்டுள்ளது. திருவிவிலியத்தில் புதிய ஏற்பாட்டில் வரும் நான்கு நற்செய்திகளும் பெண்ணியக் கண்ணோட்டத்தில் பல சிறப்புக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்;பதை ஆய்வு செய்து வெளிக்கொண்டு வருவதுடன், இயேசுவின் காலத்திலும், பலஸ்தீனாவின் சமூகப் பின்னணியிலும் பெண்கள் வகித்த இடத்தை ஆய்வு செய்து, ஆண், பெண் இருபாலாருக்குமான இயேசுவின் போதனையின் பொதுத் தன்மையையும், விடுதலைக் கண்ணோட்டத்துடன் இயேசு பெண்களை நோக்கும் முறையையும் ஆய்வு செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட விடயத்தை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தும் நோக்கில், பழைய ஏற்பாட்டுப் பின்னணியில் பாலஸ்தீனாவில் யூத சமுகத்தில் பெண்களும், புதிய ஏற்பாட்டில் நான்கு நற்செய்திகளின் பின்னணியில் இயேசுவின் பார்வையில் பெண்களும் என்னும் விடயங்கள் ஒப்பீட்டு அடிப்படையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்> மூல நூலான திருவிவிலியத்தில் இருந்தும், துணை நூல்களிலிருந்தும் பெறப்பட்ட கருத்துக்கள் விபரண, பகுப்பாய்வு என்னும் முறையில்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இவ் ஆய்வினூடாக திருவிவிலியம் இறையியல் சார் கருத்துக்களுக்கு மட்டுமல்ல சமுகவியல் சார் எண்ணகருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதையும்> நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் இயேசுவின் போதனைகள்> செயற்பாடுகள் சமுக விடுதலைக் கண்ணோட்டத்தில் காணப்பட்டது. குறிப்பாக விடுதலைக் கண்ணோட்டத்துடன் பெண்கள் நோக்கப்பட்டார்கள் என்னும் விடயமும்> யூத சமுகத்தில் சட்டங்களுக்கு முக்கியதுவம் கொடுத்து பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான பெண்கள் இயேசுவின் காலத்தில் சமுக அந்தஸ்தைப் பெறுகின்றார்கள்> இயேசு புரட்சிகரமான முறையில் யூத பாரம்பரியத்தை மீறி பெண்கள் விடுதலைக் கண்ணோட்டத்தில் பல முற்போக்கான கருத்துக்களை முன்வைத்துள்ளார் என்னும் விடயங்களும் ஆய்வின் முடிவுகளாக முன்வைக்கப்படுகின்றன. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | Jaffna Science Association | en_US |
| dc.subject | விடுதலை | en_US |
| dc.subject | பெண்ணியம் | en_US |
| dc.subject | திருவிவிலியம் | en_US |
| dc.title | நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் பெண்ணியம்- ஓர் ஆய்வு | en_US |
| dc.type | Article | en_US |
| Appears in Collections: | Christian & Islamic Civilization | |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| நான்கு நற்செய்திகளின் அடிப்படையில் பெண்ணியம்- ஓர் ஆய்வு.pdf | 1.33 MB | Adobe PDF | ![]() View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.
