Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4955
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Subajini, U. | - |
dc.date.accessioned | 2022-01-10T08:11:11Z | - |
dc.date.accessioned | 2022-06-27T07:02:54Z | - |
dc.date.available | 2022-01-10T08:11:11Z | - |
dc.date.available | 2022-06-27T07:02:54Z | - |
dc.date.issued | 2015 | - |
dc.identifier.issn | 1391-6815 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4955 | - |
dc.description.abstract | வாழ்வாதாரம் என்பது வாழ்க்கைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு மூலமாகும். நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வாதாரமானது தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அடிப்படையாக அமையும் இயற்கை, சமூக, பௌதிக, மானிட மற்றும் நிதி மூலதனம் ஆகிய ஐந்து சொத்துக்களில் தங்கியுள்ளது. (Kristjanson, et al., 2005) நிலைத்து நிற்கக் கூடிய வாழ்வாதார உத்திகளும், சொத்துக்களும் வறுமையான மக்களின் வாழ்வாதாரத்தில் சுற்றுச்சூழல் வளங்களின் பங்கினை மிகவும் ஆழமாக ஆராய்வதற்கான ஒரு வழியை வழங்குகின்றது. இலங்கையில் குறிப்பாக வடக்குகிழக்கு மக்களின் வாழ்வாதாரமானது மீள்குடியேற்றத்தின் பின்னர் பல்வேறு சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் உள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பிரதேசசெயலர் பிரிவாகிய ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள 27 கிராம மக்களும் 2009ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிக்கட்ட யுத்தத்தினால் முழுமையாக தமது உடமைகளை இழந்து இடம்பெயர்ந்து நலம்புரிமுகாம்களில் வசித்துவந்தார்கள். இவர்கள் மீளவும் 2010ஆம் ஆண்டு தமது சொந்தப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். அவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக மிகவும் துன்பப்பட்டார்கள். இந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் அவற்றிற்கான காரணங்களையும் கண்டறிவதோடு அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்தலே இவ் ஆய்வின் நோக்கமாகும். இங்கு 5585 குடும்பங்களில் 3175 குடும்பங்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றார்கள். இவர்களில் 960 குடும்பங்கள் எல்லா கிராமசேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் எழுமாற்றாக தெரிவு செய்யப்பட்டு வினாக்கொத்துகள் வழங்கப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்துடன் நேரடி அவதானம், பேட்டி காணல், குழுநிலை விவாதங்கள் கலந்துரையாடல்கள் போன்ற முறைகள் மூலமும் தரவுகள் சேகரிக்கப்பட்டன. இத்துடன் இரண்டாம் நிலைத்தரவுகளும் சேகரிக்கப்பட்டு பெறப்பட்ட தரவுகளானது கணினி மூலம் குறிப்பாக Excel Package மூலமும், எளியபுள்ளிவிபரவியல் முறை மூலமும் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின்படி மூலதனப்பற்றாக்குறை, வீட்டுவசதி போதியளவின்மை, மலசலகூட வசதிகள்யின்மை, சுயதொழில் வாய்ப்புக்களுக்கான ஊக்குவிப்புவசதிகள் குறைவாக உள்ளமை, சேமிப்புப்பழக்கம்யின்மை, கடன்வசதிகள்குறைவு போன்றன முக்கிய பிரச்சனைகளாக அடையாளம் காணப்படடுள்ளன. இவற்றிற்கான தீர்வுகளாக அரசும், அரசசார்பற்ற நிறுவனங்களும் இப்பிரதேச மக்களுக்கு வீட்டு வசதிகளையும், மலசலகூட வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதோடு ஏற்கனவே உள்ள முயற்சிகளுக்கு ஊக்குவிப்புக்களை செய்தல் வேண்டும். குறைந்த வட்டிவீதத்தலான கடன்வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து இலகுவான தவணை முறைகளில் அவற்றினை மீளசெலுத்த வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிலமற்றவர்களுக்கு சொந்தமாக நிலம் கிடைக்க ஆவண செய்தல் வேண்டும். இவ்வாறு செயற்படுத்துவதன் மூலம் ஆய்வுப்பிரதேச பிரச்சனைகளுக்கு ஓரளவேனும் தீர்வினை பெறமுடியும் என்ற நிலையினை இவ் ஆய்வு வெளிக்கொணர்கிறது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | வாழ்வாதாரம் | en_US |
dc.subject | மீள்குடியேற்றம் | en_US |
dc.subject | பிரதேச செயலர்பிரிவு | en_US |
dc.subject | கிராம சேவகர்பிரிவு | en_US |
dc.subject | வறுமைக்கோடு | en_US |
dc.title | மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சனைகள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவினை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | Geography |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
மீள்குடியேற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள வாழ்வாதாரப் பிரச்சனைகள்.pdf | 5.8 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.