Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4939
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSubajini, U.-
dc.date.accessioned2022-01-10T05:27:24Z-
dc.date.accessioned2022-06-27T07:02:53Z-
dc.date.available2022-01-10T05:27:24Z-
dc.date.available2022-06-27T07:02:53Z-
dc.date.issued2014-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4939-
dc.description.abstractஇலங்கையின் ஐந்து நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முறையே 1984, 1979ஆம் ஆண்டுகளில் புதிய மாவட்டங்களாக பிரகடனப்படுத்தப்பட்டன. இவ்விரு மாவட்டங்களும் பாரிய விவசாயப் பிரதேசங்களாகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு அண்ணளவாக 26,406 சதுர கிலோமீற்றர்களாகும். பின்தங்கிய மாவட்டங்களாகவும் வரண்ட வலய மாவட்டங்களாகவும் இவை உள்ளன. கடந்த முப்பது வருடங்களாக குறிப்பாக 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட யுத்தத்தினால் முழுமையாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக இவை காணப்படுகின்றன. இங்குள்ள விவசாயப்பிரதேசங்களும், விவசாயத்திற்கு ஆதாரமான நீரினை வழங்கும் ஆறுகளும், அவற்றின் வடிநிலங்களும் சிதைவடைந்து காணப்படுகின்றன. இதுமட்டுமன்றி இயற்கை அனர்த்தங்களாலும் விவசாயப்பிரதேசங்கள் பாதிக்கப்பட்டும், அழிவடைந்தும் காணப்படுகின்றன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெரும்போகம், சிறுபோகங்களில் ஏற்பட்ட பயிர் அழிவுப் போக்கினையும், அவற்றின் இடம்சார் பாங்கினையும் பயிர் அழிவுச்சுட்டெண்களுக்கு ஊடாக மதிப்பிடுதலே இவ் ஆய்வின் நோக்கமாகும். ஆய்வுப்பிரதேச ஒன்பது பிரதேச செயலர் பிரிவுகளிலுமுள்ள பதினெட்டு கமநலசேவைத் திணைக்கள பிரிவிலும் பிரதான (Major) நெற்செய்கை, சிறிதளவு (minor) நெற்செய்கை, மழையை நம்பிய (Rain fed) நெற்செய்கைத் தரவுகள் இரண்டு பருவங்களுக்கும் பெறப்பட்டுள்ளன. பல்வேறு அறிக்கைகளிலிருந்தும் அதிகாரிகளை பேட்டி காண்பதன் மூலமும், பொது மக்களிடம் கலந்துரையாடுவதன் மூலமும், தேசப்பட நூல்களிலிருந்தும் (Atlas) தரவுகள் பெறப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட தரவுகள் கணினி மூலம் குறிப்பாக (Excel package) மூலமும், புவியியல் அளவைசார் நுட்ப முறை மூலமும், (quantitative Techniques in Geography) எளிய புள்ளிவிபர முறை மூலமும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெறப்பட்ட தரவுகளிலிருந்து பயிரழிவுச் சுட்டெண் கணித்தறியப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்குப் பெறப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளின் படி நெல் விதைக்கப்பட்ட முழுப்பரப்பும் அறுவடை செய்யப்படவில்லை. இந்நிலைமை பெரும்போக சிறுநீர்ப்பாசனப் பகுதியை விட பெரும்போக நீர்ப்பாசனப்பகுதிகளில் அதிகமாக உள்ளதை பயிரழிவுச் சுட்டெண் கணிப்பீட்டின் மூலம் கண்டுகொள்ள முடிந்துள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் நெற்செய்கையின் அழிவிற்கு பிரதான காரணியாக அமைவது வெள்ளப்பெருக்காகும். 2010ம் ஆண்டு வரட்சி பல்வேறு நோய்த் தாக்கம் விவசாயிகளின் வறுமை, அரச ஆதரவு இன்மை போன்ற காரணங்களாலும் பயிரழிவு அதிகமாகக் காணப்படுகின்றது. இவற்றிற்கான தீர்வுகளாக இப்பாரம்பரிய விவசாய பிரதேச விளைச்சல் முழுவதையும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இங்குள்ள பெரிய, சிறிய நீர்ப்பாசனக் குளங்கள் யாவும் புனரமைக்கப்பட வேண்டும். வெள்ளம் வரும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectநியம விலகல்en_US
dc.subjectபெரும்போகம்en_US
dc.subjectசிறுபோகம்en_US
dc.subjectபயிரழிவுச் சுட்டெண்en_US
dc.subjectநிர்வாக மாவட்டம்en_US
dc.titleகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பயிர் அழிவுப் போக்கும், பாங்குகளும்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Geography



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.