Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4890
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorசெல்வமனோகரன், தி.
dc.date.accessioned2022-01-07T08:29:04Z
dc.date.accessioned2022-06-28T03:24:47Z-
dc.date.available2022-01-07T08:29:04Z
dc.date.available2022-06-28T03:24:47Z-
dc.date.issued2016
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4890-
dc.description.abstractபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட நவீன கல்விவிருத்தி, ஆங்கில அறிவு என்பவற்றின் வழி உருவான புதிய அறிவார்ந்த ஈழத்துத் தமிழ்ச் சமூகம் தன்னடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது. அச்செயற்பாடுகளில் ஒன்றாக நூற்பதிப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பழைய ஏடுகளில் இருந்த இலக்கியங்களை அச்சியந்திரத்தினூடாக நூற்பதிப்புச் செய்யப்பட்டது. பல்வேறு ஏடுகளை ஒப்பு நோக்கிப் பதிப்பிக்க வேண்டிய - பாடபேதங்களை அறிந்து செம்பதிப்பை மேற்கொள்ள வேண்டிய சூழலே அதிகம் இருந்தது. காலவோட்டத்தில் அச்சூழ்நிலை மாறி மீள்பதிப்பு செய்தல், பதிய நூல்களை எழுதிப் பதிப்பித்தல், தொகுப்பு நூல்களைப் பதிப்பித்தல், உரை எழுதிப் பதிப்பித்தல் என நூற்பதிப்பு விரிந்த தளத்தை நோக்கி நகரத் தொடங்கியது. இவை செய்யுள்களாகவும் உரைநடை நூல்களாகவும் அமைந்தன. பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களும் பதிப்பிக்கப்பட்டன. சைவசமயம் சார்ந்த சமஸ்கிருத குறிப்பாக கிரந்த நூல்கள் - மூலநூல்கள், கருவி நூல்கள், பாடநூல்கள் என்பனவும் பதிப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பத்திரிகைகளின் உருவாக்கம் பதிப்பு வரலாற்றில் முக்கியமானது. 19ஆம் நூற்றாண்டில் உதயதாரகை, பாதுகாவலன், இந்துசாதனம் போன்றன முதன்மையுற 20ஆம் நாற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் பல பத்திரிகைகள் தோற்றம் பெற்றன. இவை சமயச்சார்புடையனவாகவும் சமயச்சார்பற்ற பொதுத்தன்மை வாய்ந்தவையாகவும் அமைந்தன. மேலும் தினசரிப்பத்திரிகைகள், வாராந்தப்பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றின் வரவும் பதிப்புத்துறையை ஆழ அகலப்படுத்தின. இவற்றின் - வழி மரபிலக்கியங்களும் புத்திலக்கியங்களும் உருவாக்கம் பெற்று மக்கள் மயப்படுத்தப்பட்டன. அதேவேளை நவீன இலக்கிய நூல்களும் உருவாக்கம் பெற்று பதிப்பிக்கப்பட்டன. கூத்துக்கள், புராணங்கள், பிரபந்தங்கள், இலக்கணநூல்கள், புனைகதைகள், கட்டுரைகள், நாடகங்கள், கவிதைகள், ஆய்வுநூல்கள், நாட்டார் இலக்கியங்கள் போன்றன பதிப்பின் வழி நூல் நிலைப்படுத்தப்பட்டன. இவ்வாறான பதிப்புத்துறை சார்ந்த வளர்ச்சி, தேவை போன்றன பல பதிப்பகங்களைத் தோற்றுவித்தன. கிறிஸ்தவ மிஷனரிகள், சைவபரிபாலனசபை, விவேகா னர் தர்சபை, இராமகிருஷ்ணமிஷன் போன்ற சமயம் சார்ந்த நிறுவனங்கள் தத்தம் கபம் சார்ந்த பதிப்புக்களை வெளியிட்டன. கலை இலக்கியம் சார்ந்தும் தொழில் துறை சார்ந்தும் பல்வேறு பதிப்பகங்கள் தோற்றம் பெற்றன. அவற்றின் வழி இலக்கண நூல்களும் நவீன இலக்கியங்களும் பதிப்பிக்கப்பட்டன. இவ்வாறான பதிப்பு நடவடிக்கைகளை கவனத்தில் எடுத்து சமகாலத்தில் இப்பதிப்புப் பணியின் | லை தொடர்பாகவும் இவ்வாய்வு அமைகிறது.en_US
dc.language.isootheren_US
dc.subjectதன்னடையாளங்கள்en_US
dc.subjectபாடபேதங்கள்en_US
dc.subjectசெய்யுள்கள்en_US
dc.subjectகிரந்த நூல்கள்en_US
dc.titleஈழத்து தமிழ் நூற்பதிப்பு முயற்சிகள்en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Saiva Siddhantha



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.