Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4772
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | Arunthavarajah, K. | - |
dc.date.accessioned | 2022-01-03T03:44:27Z | - |
dc.date.accessioned | 2022-06-27T07:09:03Z | - |
dc.date.available | 2022-01-03T03:44:27Z | - |
dc.date.available | 2022-06-27T07:09:03Z | - |
dc.date.issued | 2012 | - |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4772 | - |
dc.description.abstract | கீழைத்தேய நாடுகளுக்கு வருவதற்கான கடல்மார்;க்கப் பாதையினை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற போர்த்துக்கேயர்கள் முதன்முதலாக 1498இல் வாஸ்கொடகாமாவின் தலைமையில் இந்தியாவின் கள்ளிக்கோட்டையினை வந்ததடைந்தனர். தொடர்ந்து கோவாவினைத் தங்களது கீழைத்தேய ஆதிக்க நடவடிக்கைகளுக்கு தலைமையகமாக மாற்றிக் கொண்ட அவர்கள் அதற்கான நடவடிக்கைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் ஒரு கட்டமாகவே 1505இல் இலங்கையின் கரையோரங்களிலும், எதிர்பாராதவிதமாக காலடி பதித்த போர்த்துக்கேயர்கள் தொடர்ந்து 1658வரை அப்பகுதியில் அவர்களது செல்வாக்கினை நிலைநாட்டிக் கொண்டனர். அவர்கள் இலங்கை வந்த காலப்பகுதியில் இலங்கையானது மூன்று பெரும் பிரிவுகளாகக் கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் என பிரிக்கப்பட்டுக் காணப்பட்டதுடன் இவற்றுக்கிடையிலே முரண்பாடுகளும் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தன. எனவேதான் போர்த்துக்கேயர்களின் நடவடிக்கைகள் இலங்கையில் விரிவுபடுத்தட்டமைக்கு வெறுமனே பொருளாதார மற்றும் மதம் பரப்புகின்ற காரணிகள் மட்டுமன்றி அரசியல் சார்ந்த காரணிகளும் ஏராளமாக நிறைந்திருந்தன எனக்கூறுகின்றார் (செ.கிருஷ்ணராஐh செ.2000,130) எவ்வாறாயினும் இலங்கையின் இத்தகைய குழப்பமான அரசியல் நிலையினைத் தங்களது ஆதிக்க விஸ்தரிப்புக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்ட போர்த்துக்கேயர்கள் படிப்படியாக இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றி இறுதியாக யாழ்ப்பாணத்தினையும் 1619இல் தங்களது கடடுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணம் வந்த சமயத்தில் யாழ்ப்பாண அரசானது இலங்கையின் வடபகுதியில் தமிழ் மன்னர்களின் ஆதிக்கத்தின் கீழ் அதிகளவான தமிழர்களை உள்வாங்கிய நிலையில் சைவமரபுகளுடன் இணைந்த வகையிலே செல்வாக்கு பெற்றுக்காணப்பட்டது. இது யாழ்ப்பாண குடாநாடு, அயலில் காணப்பட்ட தீவுகள், மன்னார் தொடக்கம் முல்லைத்தீவு வரையிலான பகுதிகள் ஆகியவற்றினையும் உள்ளடக்கியதாக காணப்பட்டதென்பது போர்த்துக்கேயர்களது ஆட்சிக்காலத்தின் இறுதியில் இலங்கையில் மதகுருவாக பணியாற்றிய குவைறோஸ் சுவாமிகளின் கருத்தாக உள்ளது (முரநலசழண குநசயெழ னுநஇ1931இ51). பொதுவாக போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாண அரசினை முழுமையாக கைப்பற்றிக் கொள்ளும் வரை இலங்கையின் வடக்கு கிழக்கு வடமேற்கு பிரதேசங்கள் யாவும் யாழ்ப்பாண அரசர்களின் கடடுப்பாட்டின் கீழேயே காணப்பட்டு வந்தன. 13ஆம் நூற்றாண்டின் பின்னதாக இந்த அரசானது அதி உன்னதமான நிலையினையும் அதிகாரத்தினையும் பெற்றிருந்ததுடன் ஏனைய சிற்றரசுகளிடமிருந்து திறையினை பெற்றுக்கொள்கின்ற நிலையிலும் காணப்பட்டன. அத்துடன் அக்காலப்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியத்தினை ஆட்சி செய்த அரசர்களை ஆரியச்சக்கரவர்த்திகள் என்ற பெயர்களில் அழைத்துக் கொள்ளப்பட்டமையும் நோக்கத்தக்கது. போர்த்துக்கேயர்கள் இலங்கை வந்த காலப்பகுதியில் யாழ்ப்பாண இராச்சியமானது சுதந்திரமும் தன்னாதிக்கமும் கொண்ட அரசாசக் காணப்பட்டதுடன் நல்லூரினைத் தனது தலைநகரமாகக் கொண்டு விவசாயத்தினையும் மீனவத்தொழிலையும் தங்களது பகுதியின் பிரதான வருவாய் மூலகங்களாகப் பெற்றிருந்தது. இதனைவிட மன்னாருக்கும் திருகோணமலைக்கும் இடையிலே 18 குறிச்சிகளைக் கொண்ட பகுதியானது வன்னியர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் ஆட்சியாளர்கள் தன்னாதிக்கம் பெற்ற சுதந்திர ஆட்சியாளர்களாக யாழ்ப்பாண அரசின் கட்டுப்பாடுப்பாடுகளிலிருந்து விலகிய வகையில் தங்களது ஆட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனரென்பதும் அவதானிக்கத்தக்கது. 1619இல் முற்றும் முழுதாக யாழ்ப்பாணத்தினை தங்கள் வசமாக்கிக் கொண்ட போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தில் வணிகத்துடன் மதம் பரப்புகின்ற முயற்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு அவற்றில் வெற்றியும் கண்டனர். இதற்கு யாழ்ப்பாண அரசின் பலவீனமும், யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அக்கால சமூகத்தின் நடவடிக்ககைளும் போர்த்தக்கேயர்களுக்கு இதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏனைய ஐரோப்பியர்களைப் போலவே இவர்களும் குடியேற்ற நாடுகளின் வளங்களை முற்றுமுழுதாக சுரண்டுகின்ற முயற்சியில் யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கை முழுவதிலுமே ஈடுபட்டனர். தங்களது பொருளாதார நடவடிக்கையின் ஒரு பாகமாக இலங்கையின் தென்பகுதியில் கறுவா வர்த்தகத்தில் அதிகளவான ஈடுபாட்டினை காட்டிய போர்த்துக்கேயர்கள் பிற்பட்ட காலங்களில் தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்த இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் நிலவரி முறையினை விரிவுபடுத்தியும் யானை வர்த்தகம் மற்றும் முத்துக்குளித்தல் போன்றவற்றிலும் சில வகையான விவசாயப் பொருட்களின் உற்பத்தியிலும் அவற்றின் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வர்த்தக முற்சிகளிலும் இறங்கியதன் மூலமாக பெருமளவிலான இலாபத்தினைப் பெற்றுக் கொண்டனர் (பத்மநாதன்,சி,2021,49). தங்களது வருவாயினை பெருக்குவதனை இலக்காக மேற்கொண்டிருந்த இவர்கள் மக்களின் மீது பலவிதமான வரிகளை விதித்தனர். போரத்துக்கேயர்களது அரசியல், நிர்வாகச் செயற்பாடுகளும் அவர்களது பொருளாதார நடவடிக்கைகளும் இலங்கையில் ஒன்றுடனொன்று தொடர்புபட்ட வகையிலே தான் அமைந்திருந்தன. 1543இல் போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணத்தின் மீதான முதலாவது நேரடித் தொடர்புகளும் 1560களின் பின்னரான யாழ்ப்பாண அரசர்களிடமிருந்து திறை பெற்றுக்கொண்ட நிகழ்வுகளும் 1561இல் மன்னாரில் கோட்டையொன்றினை அமைத்துக் கொண்டதன் மூலமாக அப்பகுதிகளில் தங்களது மேலாண்மையினை நிலைநிறுத்திக் கொண்ட சம்பவங்களும் யாழ்ப்பாண இராச்சியத்துக்கு கிடைத்து வந்த வருமானத்தினை முக்கியமாக பாதித்த நிகழ்வுகளாகக் காணப்பட்டன. இதனால் குறிப்பாக யாழ்ப்பாணத்து அரசர்களுக்கு அதுவரை காலமும் கிடைத்து வந்த வருவாயில் பாரியதொரு வீழ்ச்சி ஏற்பட்டது (கிருஸ்ணராசா,செ,2000,130). மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து பெறப்பட்ட வருமாயின் மூலமாகவே அவர்களது அரச இயந்திரமானது இலங்கையில் பெருவளர்ச்சி கண்டதெனலாம். புடையினரகள்,; நிர்வாகப் பணியாளர்கள் மற்றும் கூலிப் படையினருக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து பெறப்பட்ட வருவாயில் சம்பளம் கொடுக்கப்பட்டது. மேலும் கோட்டைகள் கட்டுவதற்கும் மதப் பரப்புச் செயற்பாடுகளுக்கும் யாழ்ப்பாணத்திலிருந்து கிடைத்த வருவாயில் பெரும் பங்கு பயன்படுத்தப்பட்டதெனலாம். எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தினை திட்டமிட்டு சுரண்டுகின்ற இலக்குக் கொண்டவர்களாக காணப்பட்ட போர்த்துக்கேயர்களது செயற்பாடுகளினால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் மட்டுமன்றி முழு இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | 1st International Economic Research Conference | en_US |
dc.subject | பொருளாதார சுரண்டல் | en_US |
dc.subject | யானை வர்த்தகம் | en_US |
dc.subject | முத்துக்குளித்தல் | en_US |
dc.subject | நிலவரி | en_US |
dc.subject | தோம்பு | en_US |
dc.title | போர்த்துக்கேயர் கால யாழ்ப்பாணத்தின் பொருளாதார நடவடிக்கைகள்: ஒரு வரலாற்று பார்வை | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | History |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
போர்த்துக்கேயர் கால யாழ்ப்பாணத்தின் பொருளாதார நடவடிக்கைகள்.pdf | 295.33 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.