Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4542
Title: மறைமலையடிகளின் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும் அதன் ஆராய்ச்சியும் ஓர் விமர்சன ரீதியான நோக்கு
Authors: Pathmanaban, S.
Keywords: காளிதாசன்;நாடகம்;சாகுந்தலம்;அபிக்ஞான சாகுந்தலம்;த்ருஷ்ய காவியம்
Issue Date: 2019
Abstract: மகாகவி காளிதாசரின் சிறந்த இலக்கியப் படைப்புக்களுள் ஒன்று அபிக்ஞான சாகுந்தலம் எனும் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பூடாக உலகறியப்பட்டதாகும். தமிழ்மொழி மரபில் சம்ஸ்கிருத மொழியையும் தமிழ்மொழியையும் அறிஞர் உலகம் இரு கண்களாகப் போற்றினர். தமிழ்மொழியின் இலக்கியச் செழுமை தனித்துவமுடையது. நாடக மரபின் சிறப்புக்கள் சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களில் தனித்துவம் படைத்தவையாகும். அம்மரபில் சம்ஸ்கிருத இலக்கிய வடிவங்களை மொழிபெயர்ப்பினூடாக ஏனைய மொழி மரபிற்கு மாற்றம் செய்த சிறப்பு தனித்துவமுடையதாகும். இதனையடிப்படையாகக் கொண்டு சமஸ்கிருத நாடக மரபினை தமிழில் மொழி பெயர்தத் சிறப்பில் மறைமலையடிகளின் சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு தனித்து வமுடையதாகும். இத்துடன் நாடக இலக்கிய மரபினை தமிழ் மொழியின் நாடகவியல் மரபுடன் தொடர்புபடுத்தி இம்மரபுகள் எவ்விதம் சிறப்புடனும் குற்றங்களுடனும் காணப்படுகின்றன எனும் பரிந்துரைகளை ஒன்றுபடுத்தி இலக்கிய விவரண ஆய்வு முறையியல் மூலமும் ஒப்பியல் ஆய்வு மூலமும் சம்ஸ்கிருத மொழியில் அமைந்த அபிக்ஞான சாகுந்தலம் எனும் மூல நூலையும் மறைமலையடிகளது மொழிபெயர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகிறது. இதனூடாக தமிழ் நாடகவியல் மரபில் சாகுந்தல நாடகம் வெளிக்கொணரப்படும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4542
ISBN: 978-93-87354-23-4
Appears in Collections:Sanskrit



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.