Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4144
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorஜெயசீலன், எம்.எம்.
dc.date.accessioned2021-11-03T07:40:02Z
dc.date.accessioned2022-07-07T07:25:31Z-
dc.date.available2021-11-03T07:40:02Z
dc.date.available2022-07-07T07:25:31Z-
dc.date.issued2018
dc.identifier.isbn978-955-0585-11-3
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4144-
dc.description.abstractமலையகத் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தொழிற்சங்க அரசியலும் முக்கிய பேசுபொருளாக விளங்கிவருகின்றது. ஒவ்வொரு படைப்பாளியும் தமது கருத்துநிலை மற்றும் புரிதலுக்கு ஏற்ப தொழிற்சங்கச் செயற்பாடுகளை ஆதரித்தும் விமர்சித்தும் வருகின்றனர். அவர்களுள் மு.சிவலிங்கம் தனித்துச் சுட்டிக்காட்டத் தக்கவர். மலையகச் சிறுகதைப் பரப்பில் தொழிற்சங்கம் பற்றிய அதிகமான பதிவுகளைத் தந்தவராக அவரே விளங்குகின்றார். ஆரம்ப காலத்தில் அவர் தொழிற்சங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால் அந்நேரடி அனுபவம் அது பற்றிய அதிகமான பதிவுகளைத் தருவதற்கு காரணமெனலாம். மலையகத் சிறுகதைகள் குறித்தும் மு.சிவலிங்கத்தின் படைப்புக்கள் குறித்தும் இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுகள் தொழிற்சங்கச் செயற்பாடுகள் அவரது சிறுகதைகளில் வெளிப்படுமாற்றினைத் தனித்து விரிவாக ஆராயவில்லை. அதனால் இவ்ஆய்வானது மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளில் தொழிற்சங்கச் செயற்பாடுகள் பற்றி எவ்வாறான பதிவுகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மு.சிவலிங்கத்தின் சிறுகதைகளில் தொழிற்சங்கச் செயற்பாடுகள் குறித்த பதிவினைத் தரும் பன்றியோடு சேர்ந்த எருமை மாடுகளும், பிரிட்டிஸ் முகாம்கள் தகர்க்கப்படுகின்றன, ஒரு ரட்சகனின் புறப்பாடு, மார்கழிப் பூக்கள், சங்ககாலம், எங்க ஊர் தேர்தல், வடதிசைக் காற்று, மேற்கில் தோன்றிய உதயம் ஆகிய கதைகளை முதன்மை ஆதாரமாகக் கொண்டுள்ள இவ்ஆய்வு, உள்ளடக்க பகுப்பாய்வு முறையில் விளக்கமுறைத் செலுத்திவருகின்றன என்ற பதிவுகள் இடம்பெற்றுள்ளதோடு தற்போது இயங்குகின்ற தொழிற்சங்கங்களுக்கு மாறாக மாற்றுத் தொழிற்சங்கங்களை அமைத்தல், அவற்றின் தேவை குறித்த பதிவுகளும் அவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. தொழிலாளர்களின் எழுச்சிக்கும் விழிப்புணர்வுக்கும் தொழிற்சங்கச் செயற்பாடுகள் அடிப்படையாக அமைந்தன, தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட தொழிற்சங்கங்கள் களம் அமைத்துத்தந்தன, மலையகத் தமிழரின் அரசியல் அபிவிருத்தியில் தொழிற்சங்க அரசியலே முன்னிலை வகிக்கின்றது என்பன மலையகத் தமிழரின் மேல்நோக்கிய அசைவின் எழுச்சிக்கு தொழிற்சங்கங்கள் ஆற்றிய பங்களிப்பாகவும் தொழிற்சங்கங்களின் பெருக்கத்தினால் அவற்றுக்கு இடையே முரண்பாடுகள் பெருகி, தொழிலாளர் ஐக்கியத்தைச் சிதைந்தன. தொழிலாளர்களின் போராட்டங்களும் தியாகங்களும் சொற்ப விலைக்கு தொழிற்சங்கங்களாலே விற்கப்பட்டு வருகின்றன என்பன தொழிலாளரின் வீழ்ச்சிக்கான செயற்பாடுகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களின் இவ்வீழ்ச்சியான போக்குக்கு அத்தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ பின்புலத்தில் இயங்குவதே காரணமெனக் கூறும் மு.சிவலிங்கம், அப்பிற்போக்குத் தனங்களைக் களைந்து மாற்றுத் தொழிற்சங்கங்கள் அமைக்க வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியுள்ளார். அவை தொழிற்சங்கச் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்துவதாக அமைவதோடு தொழிற்சங்கங்கள் செயற்படவேண்டிய பாதைகளை இனங்காட்டுவனவாகவும் அமைந்துள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherUniversity of Jaffnaen_US
dc.subjectசமூக அசைவியக்கம்en_US
dc.subjectதொழிற்சங்கம்en_US
dc.subjectதொழிற்சங்க அரசியல்en_US
dc.subjectமலையகத் தமிழரen_US
dc.titleசிவலிங்கத்தின் சிறுகதைகளில் வெளிப்படும் மலையகத் தொழிற்சங்கச் செயற்பாடுகள் ஒரு பகுப்பாய்வுen_US
dc.typeArticleen_US
Appears in Collections:JUICE 2018



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.