Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4090
Full metadata record
DC Field | Value | Language |
---|---|---|
dc.contributor.author | அருண், அ. | |
dc.contributor.author | நிதூர்ஷ, ஜெ. | |
dc.contributor.author | கஜவிந்தன், க. | |
dc.date.accessioned | 2021-11-02T04:41:20Z | |
dc.date.accessioned | 2022-07-07T07:25:39Z | - |
dc.date.available | 2021-11-02T04:41:20Z | |
dc.date.available | 2022-07-07T07:25:39Z | - |
dc.date.issued | 2018 | |
dc.identifier.isbn | 978-955-0585-11-3 | |
dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/4090 | - |
dc.description.abstract | மன அழுத்தம் என்பது இன்றைய மனிதர்களிடம் அதிகம் காணப்படும் ஓர் உளப்பாதிப்பாக காணப்பகின்றது. ர்யளெ வயலடழச என்பவரது கருத்துப்படி 'மன அழுத்தம் என்பது உடலியல், உளவியல் தொழிற்பாட்டைப் பாதிக்கின்ற அல்லது பாதிப்பதாக அச்சுறுத்தும் நிகழ்வுகளுக்கு துலங்கும் செயன்முறையே ஆகும்' எனக் குறிப்பிடுகின்றார். இவ்வகையில் மன அழுத்தத்தின் தாக்கம் இன்று எல்லா இடங்களிலும் பரவிக் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. பாடசாலைகள், கல்வி நிலையங்கள், மற்றும் வேலைத்தளங்களில் மன அழுத்தத்தின் தாக்கம் பரவிக் காணப்படுவதனை பல்வேறு ஆய்வுகளில் இருந்து அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன்படி இவ்வாய்வானது பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் மன அழுத்தத்தினை ஆராய்வதாக அமைந்திருக்கின்றது. தொழில்சார் மன அழுத்தத்திற்கான காரணங்களை கண்டறிதல், அவற்றின் விளைவுகள் மற்றும் ஆண், பெண் பாலின வேறுபாடுகள் தொழில்சார் மன அழுத்தத்தில் செல்வாக்கு செலுத்தும் விதம் போன்றவற்றை கண்டறிவதனை இவ்வாய்வானது நோக்கமாக கொண்டுள்ளது.இவ்வாய்வுக்குரிய ஆய்வுப் பிரச்சினையாக பாடசாலை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் மன அழுத்தம் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், ஆய்வுப்பிரதேசமாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த மடு கல்வி வலயம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஆய்வு மாதிரிகளாக குறித்த ஆய்வுப்பிரதேச பாடசாலைகளில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள் ஆண், பெண் சம விகிதாசார அடிப்படையிலும், திருமண நிலையை அடிப்படையாக கொண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளிடமிருந்து றுழசம Pடயஉந ளுவசநளள ளுரசஎநல ஞரநளவழைnயெசைந ஊடாக பெறப்பட்ட தகவல்கள் விபரணப் பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆய்வு முடிவானது பெறப்பட்டது. மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் பார்க்கின்றபோது 60 வீதமான ஆசிரியர்கள் மிதமான தொழில்சார் மன அழுத்தத்திற்கும் 40 வீதமானவர்கள் மிகையான மன அழுத்தத்திற்கும் உள்ளாகின்றமை கண்டறியப்பட்டது. மேலும் ஆண்களை விட பெண்கள் அதிகளவு தொழில்சார் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றமையும், திருமணமானவர்களைவிட திருமணமாகாதவர்கள் குறைந்தளவே தொழில்சார் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றமையும் ஆய்வு முடிவுகளாக கண்டறியப்பட்டன.குறித்த ஆய்வின்படி தொழில்சார் மன அழுத்தத்திற்கான காரணங்கள் என்று பார்க்கும்போது நேர முகாமைத்துவ சிக்கல்கல், வேலைப்பழு, வேலைத்தளத்தின் அமைவிடம், மற்றும் தனியாள் வேறுபாடுகள் என்பன கண்டறியப்பட்டதோடு அவற்றை தீர்ப்பதற்கான சாந்த வழிமுறைகள், நேரமுகாமைத்துவத்தின் அவசியப்பாடு, மனப்பாங்கு மாற்றங்கள் என்பவையும் குறித்த ஆய்வின் ஊடாக சிபாரிசு செய்யப்பட்டள்ளன. மேலும் ஆசிரியர்களுடைய தொழில்சார் மன அழுத்தத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில்சார் மன அழுத்தம், அதன் தாக்கம், அவற்றை தீர்ப்பதற்கான முறைகள், போன்றவற்றை உள்ளடக்கியதாக இவ்வாய்வானது அமைந்திருக்கின்றது. | en_US |
dc.language.iso | other | en_US |
dc.publisher | University of Jaffna | en_US |
dc.subject | ஆசிரியர்கள் | en_US |
dc.subject | மன அழுத்தம் | en_US |
dc.subject | தொழில்சார் மன அழுத்தம | en_US |
dc.title | பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் மன அழுத்தம் ஓர் ஆய்வு (மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்தை அடிப்படையாக கொண்டது) | en_US |
dc.type | Article | en_US |
Appears in Collections: | JUICE 2018 |
Files in This Item:
File | Description | Size | Format | |
---|---|---|---|---|
பாடசாலை ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தொழில்சார் மன அழுத்தம் ஓர் ஆய்வு.pdf | 1.22 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.