Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2552
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorPoologanathan, P.
dc.date.accessioned2021-04-20T06:15:49Z
dc.date.accessioned2022-06-29T06:55:19Z-
dc.date.available2021-04-20T06:15:49Z
dc.date.available2022-06-29T06:55:19Z-
dc.date.issued2015
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/2552-
dc.description.abstractஇவ்வாய்வுக் கட்டுரையானது ஈழத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்தில் நிலவும் கண்ணகி வழிபாடு பற்றியும் அவ்வழிபாட்டில் இடம்பெறும் சடங்கு முறைகளையும் சிறப்பாக ஆராய்வதாக அமைகிறது. இந்தியாவின் சோழ நாட்டிலே பிறந்து பாண்டி நாட்டிலே பாராளு மன்னனை தன் கணவனுக்காக பழிதீர்த்து சேர நாட்டிலே சேரன் செங்குட்டுவனால் பத்தினி என்று விழா எடுக்கப்பெற்ற கண்ணகி கடல்சூழ் இலங்கை நாட்டில் நிலைபெற்றிருப்பதை நாம் கண்ணகி வரலாறுகளில் காண்கிறோம். இற்றைக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்பே ஈழநாட்டில் வழிபடும் தெய்வமாகிவிட்ட கண்ணகி அம்மன் வழிபாடு வடக்கு, கிழக்கு மட்டுமன்றி பெரும்பான்மை இன மக்கள் வாழும் பிரதேசங்களிலும் வழிபாட்டுக்குரிய தெய்வமாக விளங்குகின்றது. அன்று தொட்டு இன்று வரை தமிழர் பிரதேசமெங்கும் வழிபடும் தெய்வமாக கண்ணகி போற்றப்பட்டாலும் ஈழத்தின் கிழக்குப் பகுதியிலே அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு பிரதேசத்திலேயே இவ்வழிபாடு இன்றும் சிறப்புற நடைபெறுகின்றது. இங்கு இவ்வழிபாடானது ஆகமம் சாராத முறையில் பல்வேறுபட்ட சடங்கு முறைகளுடன் இடம்பெறுகிறது. குறிப்பாக கதவு திறத்தல், மண்ணெடுத்தல், நெற்குத்துச்சடங்கு, கல்யாணக்கால் வெட்டுதல், பணிமாறல், கொம்பு விளையாட்டு, பள்ளயம், குளிர்த்தி, கதவடைப்பு என்றவாறான பல சடங்கு முறைகள் இன்றும் இப்பிரதேச கண்ணகி வழிபாட்டின் போது இடம் பெறுவதை காணக்கூடியதாகவுள்ளது. இங்கு இக்கட்டுரையானது இப்பிரதேசத்தில் இடம் பெறும் கண்ணகி வழிபாடு பற்றியும் அதுசார்ந்த சடங்கு முறைகளையும் விரிவாக ஆராய்வதாக அமைகிறது.
dc.language.isootheren_US
dc.publisherஅகில இலங்கை இந்து மாமன்றம்en_US
dc.titleகிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடும் அது சார்ந்த சடங்கு முறைகளும்.en_US
dc.typeArticleen_US
Appears in Collections:Research Publication - Library

Files in This Item:
File Description SizeFormat 
Hindu Oli.pdf4.26 MBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.