Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13203
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorMary Winifreeda, S.-
dc.date.accessioned2026-11-04T05:56:00Z-
dc.date.available2026-11-04T05:56:00Z-
dc.date.issued2026-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13203-
dc.description.abstractஉள்நாட்டுப் போருக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பில் பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிச் சிந்திப்பது அவசியமானதாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயமும் மீன்பிடியும் பொருளாதார வருவாய்க்கான வளங்களாகத் திகழ்கின்றன. ஆயினும் கலாசார மற்றும் சமயச் சுற்றுலாத்துறைகளுடன் தொடர்புடைய சேவைசார் பொருண்மிய இலக்குகளைக் கருத்திலெடுப்பதும் அவசியமானதாகின்றது. யாழ்ப்பாணத்தில் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கிறிஸ்தவ ஆலயங்கள், அங்குள்ள பழமையான சைவ ஆலயங்;களுடன் இணைந்து, இப்பிராந்தியத்தின் தனித்துவமான தமிழ்க் கலாசார அடையாளத்தின் ஒரு பகுதியாக அமைகின்றன. இப்பின்னணியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ளக் கலாசாரம் மற்றும் சமய மையங்களைப் பார்வையிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆயினும் யாழ்ப்பாணத்தின் பல கிறிஸ்தவ மரபுரிமைத் தலங்கள் பிரதான சுற்றுலா வரைபடத்தில் இன்னும் முழுமையாக உள்வாங்கப்படாமை, தங்குமிட வசதிகள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாத்தல விபரிப்புக்கள் என்பன மிகக் குறைவாகக் காணப்படுகின்றமை சுற்றுலா உள்கட்டமைப்பின் பின்தங்கிய நிலையை அடையாளப்படுத்துகிறது. ஆய்வில் வரலாற்று முக்கியத்துவம் பெறும் மரபுரிமை சமயத் தலங்களையும், குறிப்பாக மக்கள் அதிகம் பார்வையிட விரும்பும் சமயத்தலங்களையும், வடமாகாண சுற்றுலாத்துறையில் பதிவிடப்பட்டுள்ள பிரதான சுற்றுலா மையங்களையும் அளவுகோல்களாகக் கொண்டு, மண்ணித்தலை, பாலைதீவு, சாட்டி, மணற்காடு, வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம், சில்லாலை, மாதகல், பருத்தித்துறை, செம்பியன்பற்று, கிளாலி, புல்லாவெளி ஆகிய தலத் தெரிவுகள் இடம்பெற்றுள்ளது. ஆய்வானது குறித்த இடங்களில் காணப்படும் கிறிஸ்தவ மையங்களை காலாசார சுற்றுலா மையமான பொருளாதார முயற்சி மூலம் பேண்தகு அபிவிருத்திக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை முன்வைக்கிறது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தின் பிரதான கிறிஸ்தவ மையங்கள், அவற்றுக்கு அருகில் அமைந்துள்ள சைவ ஆலயங்கள், பிரபல்யமான சுற்றுலாத்தலங்கள் என்பவற்றை ஆவணப்படுத்தி, குறித்த தலங்களில் சுற்றுலாப் பயணிகளின் தேவை, உள்ளூர் சமூகங்களுக்குக் கிடைக்கும் பொருளாதார நலன்கள் என்பவற்றை மதிப்பீடு செய்து செய்யறிவு யுகத்தில் மரபுரிமை பாதுகாப்பிற்காக முன்வைக்கப்படும் பல்வேறு வழிமுறைகளையும் கலாசாரச் சுற்றுலாத் துறையில் பயன்படுத்தி, நாட்டின் பேண்தகு அபிவிருத்திக்கான பொருண்மிய முயற்சிகளைப் பரிந்துரைக்கும் நோக்குடன் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள கிறிஸ்தவ மையங்கள் பண்பாட்டு அடையாளத்திற்கும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் நாட்டின் பேண்தகு அபிவிருத்திக்கும் பங்களிக்கின்றன என்னும் கருதுகோளை ஆய்வு மையப்படுத்தியுள்ளது. ஆய்விற்காக சமய மையங்களின் நிர்வாகிகள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களுடனான நேர்காணல்கள் மூலம் முதன்மைத் தரவுகளும், நூல்கள், ஆய்வுச் சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் மூலம் இரண்டாம் நிலைத் தரவுகளும் சேகரிக்கப்பட்டன. சேகரிக்கப்பட்ட தரவுகள் தொகுத்துணர் மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறைகளில் எடுத்துரைக்கப்பட்டு, கோவா, வேளாங்கண்ணி போன்ற தெற்காசியாவின் சமயச் சுற்றுலா மாதிரிகளுடன் ஒப்பீட்டு அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளன. ஆய்வானது தங்குமிட வசதிகளைக் கருத்திற் கொண்டு யாழ்ப்பாண நகரத்தை மையப்படுத்தி, இரு நாட்களுக்கான சுற்றுலா மாதிரிப் பயணத்திட்டத்தைத் தரவு பகுப்பாய்வு அடிப்படையில் முன்வைக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இரண்டு நாட்களுக்கு தங்களது பார்வையிடங்களை தீர்மாணிக்கும் வகையில் குறித்த பயணத்திட்டமிடலில் இடங்களின் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி முதல் நாளில் 'சின்ன உரோம்' என்றழைக்கப்படும் சில்லாலை புனித யோசப்வாஸ் மரபுத்தலங்கள், பௌத்த, கத்தோலிக்க, சைவ சமயத் தலங்கள் அருகருகே அமைந்த மாதகல் முதல் கீரிமலை நகுலேஸ்வரன் ஆலயம் வரையிலான பகுதிகள், தொடர்ந்து பருத்தித்துறைத் திருத்தலங்கள், பவளக்கல்லால் நிர்மாணிக்கப்பட்ட மணற்காட்டின் ஒல்லாந்தர் கால கிறிஸ்தவ ஆலய இடிபாடுகள், கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயம், செம்பியன்பற்று புனித பிலிப்பு நேரியார் ஆலயம், சுண்டிக்குளம் தேசிய பூங்காவுடன் இணைந்த புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் வட இலங்கையின் பழமையான கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான கிளாலி புனித யாகப்பர் ஆலயம் என்பன உள்ளடங்கும். இரண்டாவது நாளில் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தெற்கே, பிரதான நிலப்பரப்பிலிருந்து கடலை நோக்கி நீண்டு செல்லும் ஒரு நீண்ட மணல் திட்டுப் பிரதேசமான மண்ணித்தயிலுள்ள புனித செபஸ்தியார் ஆலயம் மற்றும் 3500 ஆண்டுகள் பழமையான சோழர் காலக் கட்டடக் கலையின் பிரதிபலிப்பான ஆதி சிவன் கோயில், பாலைத்தீவு புனித அந்தோனியார் கடல் யாத்திரை மையம், நன்னீர்க் கிணறு கொண்ட சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயம், அங்கிருந்து யாழ்ப்பாணக் கோட்டை, பொது நூலகம், அடைக்கல மாதா ஆலயம், புனித மாட்டினார் குருமடம், உரோமையக் கட்டடக் கலையின் பிரதிபலிப்பான புனித யாகப்பர் ஆலயம், மரியன்னைப் பேராலயம், கொழும்புத்துறை பெரிய குருமடம், பாஷையூர் புனித அந்தோனியார் ஆலயம், நாவலர் வீதியில் அமைந்துள்ள தொல்லியல் அருங்காட்சியகம், நல்லூர் கந்தசுவாமி கோயில் அடங்கிய நகர்ப்புற மரபுரிமை நிலப்பரப்பு எனச் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு ஏற்ப பணய இடங்களின் மாதிரித் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு ஆண்டுதோறும் வருகை தரும் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை முறையாகக் கணக்கிடுவதற்கான துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல், வடமாகாண சுற்றுலாத்துறை அலகில் யாழ்ப்பாண கிறிஸ்தவ மரபுரிமைத் தலங்களும் முழுமையாக இணைக்கப்படுதல், உள்ளூர் ஆண், பெண் இருபாலாருக்கும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சிகள் வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மரபுரிமைச் சின்னங்கள் பாதுகாப்பு வலயங்களாக்கப் பேணப்படுதல், உணவகங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் மூலம் கிராமப்புற வாழ்வாதாரத்தை உயர்த்த உரிய நடைமுறைகளை முன்னெடுத்தல் என்பன ஆய்வின் பரிந்துரைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆய்வானது வரலாறு, பண்பாடு என்னும் அடிப்படையில் கிறிஸ்தவ சமயத் தலங்களை ஏனைய வரலாற்று மற்றும் இயற்கைச் சூழலுடன் ஒருங்கிணைத்து, வட இலங்கையின் பன்முகப் பண்பாட்டுத் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், சமய நல்லிணக்கத்தை வளர்க்கவும், பேண்தகு பொருண்மிய மேம்பாட்டிற்கு வழிகாட்டவும் உதவும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherFederation of Global Tamils, Canadaen_US
dc.subjectகலாசாரச் சுற்றுலாen_US
dc.subjectபேண்தகு அபிவிருத்திen_US
dc.subjectயாழ்ப்பாணக் குடாநாடுen_US
dc.subjectசமூக - பொருளாதார மேம்பாடுen_US
dc.subjectகிறிஸ்தவ மையங்கள்en_US
dc.titleயாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள கிறிஸ்தவ மையங்களும் கலாசாரச் சுற்றுலாவும்: பேண்தகுஅபிவிருத்திக்கான பொருண்மிய எதிர்நோக்குen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:Christian & Islamic Civilization



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.