Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13142| Title: | மேலைத்தேய அழகியல் மேலாதிக்கத்தை எதிர்கொள்ளல்: பின்காலனித்துவச் சூழலில் கற்பித்தலியலை உள்ளூர்மயமாக்கல் பற்றிய ஆய்வு |
| Authors: | Nidarshini, M. |
| Keywords: | காண்பியக் கலைகள்;ஆற்றுகைக்கலைகள்;காலனித்துவ பண்பாட்டுப் பொறுப்புடைமை;கலைக்கற்பித்தலியல்;மேலைத்தேய அழகியல் |
| Issue Date: | 2026 |
| Publisher: | Sir Ponnambalam Ramanathan Faculty of Visual and Performing Arts University of Jaffna |
| Abstract: | நவீன கலைக்கல்வி, கலைக் கோட்பாடுகள் ஆகியன பெருமளவில் மேலைத்தேய அழகியல், சிந்தனை முறைகளை மையமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், பாரம்பரிய, பிராந்தியக் கலைவடிவங்களான காண்பிய, ஆற்றுகைக்கலைகளின் தனித்துவங்கள் பெரும்பாலும் விளிம்புநிலைப்படுத்தப்படுகின்றன. கலைக்கற்பித்தலில் இன்னும் நீடித்திருக்கும் இந்த மேலைத்தேய மேலாதிக்கத்தை எதிர்கொள்வதற்கும், கலைக்கல்வியை உள்ளூர்மயப்படுத்துவதற்கும் காலனித்துவ நீக்கச் சிந்தனைகளும் பண்பாட்டுப் பொறுப்புடைமையான அணுகுமுறைகளும் இன்றியமையாத தேவையாக மாறியுள்ளன. இவ்வாய்வானது, காண்பிய மற்றும் ஆற்றுகைக்கலைகளின் தற்போதைய கற்பித்தல் முறைகளில் காலனித்துவ தாக்கங்கள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைக் கண்டறிவதையும் கலைக்கல்விப் பாடத்திட்டங்களில் பாரம்பரிய அழகியல் கோட்பாடுகளை இணைப்பதற்கான வழிகளை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பன்முகப் பண்பாட்டுப் பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு, பண்பாட்டுப் பொறுப்புடைமையுடன் கூடிய கலைக்கற்பித்தல் மாதிரிகளைப் பரிந்துரைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும். இவ்வாய்வு பண்புசார் முறையியலை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய கலைக் கல்விப் பாடத்திட்டங்கள், கற்பித்தல் வழிகாட்டிகள், கோட்பாட்டு நூல்கள் ஆகியவற்றின் மீதான உள்ளடக்கப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், கலைப் பேராசிரியர்கள், பாரம்பரியக் கலைஞர்கள், கலைத்துறை சார்ந்த கல்வியாளர்களுடனான நேர்காணல்கள், கலந்துரையாடல்கள் மூலமாக முதன்மைத் தரவுகள் திரட்டப்பட்டு, விமர்சனக் கோட்பாட்டு நோக்கில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. கலைக்கல்வி முறையியலில் மேலைத்தேய அழகியல் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு, உள்ளூர், பாரம்பரிய கலை மரபுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதன் முக்கியத்துவத்தை இவ்வாய்வு வெளிப்படுத்தும். கலைக் கற்பித்தலில் பண்பாட்டுப் பொறுப்புடைமையை நிலைநிறுத்துவதன் மூலம், பின்காலனித்துவ சமூகங்களில் மாணவர்களின் கலைசார் அடையாளமும் படைப்பாற்றலும் சுயாதீனமாக வளர வழிவகுக்கும். இறுதியாக, காலனித்துவ நீக்க சிந்தனையை உள்ளடக்கிய புதிய கலைக்கல்விப் பாடத்திட்ட மீள்வடிவமைப்பிற்கான ஒரு தத்துவார்த்த வழிகாட்டியாக இவ்வாய்வு அமைகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13142 |
| Appears in Collections: | IRCVPA 2026 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| மேலைத்தேய அழகியல் மேலாதிக்கத்தை எதிர்கொள்ளல்.pdf | 138.82 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.