Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13075
Title: உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளும் பிரஜைகளின் திருப்தி நிலையும்: வலி தெற்கு பிரதேச சபையை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு
Authors: Thanuja, M.
Vigneswaran, T.
Keywords: பிரதேச சபைகள்;சேவை வழங்கல்;உள்ளூராட்சி மன்றங்கள்;அதிகாரங்களும் பொறுப்புக்களும்;நலச்சேவைகள்
Issue Date: 2025
Publisher: University of Jaffna
Abstract: ஒரு நாட்டில் உள்ள அரசானது அந்நாட்டில் வாழுகின்ற மக்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களே உள்ளூராட்சி அரசாங்கங்களாகும். அதனடிப் படையில் இலங்கையில் மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேசசபைகள் என்ற மூன்று வகையான உள்ளூராட்சி கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் பிரதேசசபைக் கட்டமைப்பான வலி தெற்கு பிரதேச சபையானது இலங்கையில் உயர்தரத்திலான சேவைகளினையும் உட்கட்டமைப்பு வசதியினையும் கொண்ட உள்ளூராட்சி அமைப்பாக விளங்குதல் எனும் தூரநோக்கினைக் கொண்டு தமது சேவைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. வலி தெற்கு பிரதேசமானது யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் மத்திய பகுதியில் 30.01 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 51612 மக்கள் தொகையினையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. வலி தெற்கு பிரதேச சபையானது எவ்வகையான சேவைகளினை வழங்குகின்றது என்பதனை இணங்கண்டு அந்த சேவைகளை வலி தெற்கு பிரதேச சபை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்குகின்ற சவால்கள் மற்றும் தடைகளினையும் ஆராய்வதாகவும் வலி தெற்கு பிரதேச சபையினால் இச் சேவைகளை நடைமுறைப்படுத்தும் போது அச்சேவைகள் தொடர்பாக மக்களின் மனோநிலை எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பாகவும் இவ்வாய்வானது ஆராய்கின்றது. மேலும் இவ் ஆய்வானது பண்புசார், அளவுசார் தரவுகள், தகவல்களினைக் கொண்டு புள்ளிவிபரவியல் விபரணப் பகுப்பாய்வு முறையினைப் பயன்படுத்தி ஆராயப்பட்டுள்ளது. அதாவது வலி தெற்கு பிரதேச மக்களுக்கு வலி தெற்கு பிரதேச சபையானது எவ்வாறான சேவைகளை வழங்குகின்றது அந்த சேவைகள் தொடர்பாக மக்கள் எவ்வாறான திருப்தி மட்டத்தில் உள்ளார்கள் என்பதனை அறிந்து கொள்வதாக முதலாம் நிலை தரவுகளான வினாக்கொத்து, குழுக்கலந்துரையாடல், நேர்காணல் முறைகளின் ஊடாக தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்விற்குத் தேவையான தரவுகளை ஆய்வுக்கட்டுரைகள், இணையதளங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள், பிரதேச சபை ஆவணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றம் தொடர்பான பாராளுமன்றச் சட்டங்கள் என இரண்டாம் நிலை தரவுகளின் மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் பரிந்துரையும் முடிவுரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே இவ் ஆய்வின்படி வலி தெற்கு பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்த பிரதேச மக்களுக்கு போதுமானவையாகவும் அவர்களை திருப்திப்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் இவ் ஆய்வின் பிரகாரம் வலி தெற்கு பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள் குறித்த பிரதேச மக்களுக்கு போதுமானவையாகவும் அவர்களினை திருப்திப்படுத்த கூடியதாகவும் அமைய வில்லை என்ற ஆய்வு முடிவானது ஆதாரங்களின் மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13075
Appears in Collections:Cintanai 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.