Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13073| Title: | கலைப்பிரிவு மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச்செயற்பாடுகள் : ஹட்டன் கல்வி வலய (1C) பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மருத்துவ சமூகவியல் ஆய்வு |
| Authors: | Shriyani, S. Sivakanthan, S. |
| Keywords: | தனியாள் சுகாதாரம்;தீட்டு;பண்பாடு;பேட்;கழிவறை வசதிகள் |
| Issue Date: | 2025 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | மாதவிடாய் என்பது பெண்களின் இனப்பெருக்க வயதில் தோற்றம் பெறும் இயல்பான ஒரு உடலியல் செயன்முறை ஆகும். மாதவிடாய் சுகாதாரம் குறித்து பருவ வயதுப் பெண்களி டையே காணப்படும் குறைந்தளவான அறிவு, தவறான உளப்பாங்குகள் மற்றும் வழிகாட் டல்கள் மாதவிடாய் சுகாதார நடைமுறைகளைப் பாதிக்கின்றன. மேலும் ஹட்டன் கல்வி வலய 20 (1C) பாடசாலைகளில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவிகள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச் செயற்பாடுகளை மதிப்பிடுதல் ஆய்வின் பிரதான நோக்கமாகும். பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட குறித்த ஆய் வில் விபரணக் குறுக்குவெட்டு கலப்பு முறைகள் (Descriptive cross- sectional mixed methods) ஆய்வு வடிவத்தைப் பயன்படுத்தி, நுவரெலியா மாவட்டத்தின் ஹட்டன் கல்வி வலயத்தின் 20 (1C) பாடசாலைகளில் 428 கலைப்பிரிவு மாணவிகள் அடுக்கமைக்கப்பட்ட எழுமாற்று மாதிரி நுட்பத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுயமாக நிர்வகிக்கும் வினாக்கொத்து, நேர்காணல், விடய ஆய்வு மற்றும் குவிமையக் குழுக்கலந்துரையாடல் போன்றன மூலம் முதலாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஆய்வு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. கணியம்சார் தரவுகள் SPSS (verson - 22): உதவியுடன் விபரணப் புள்ளிவிபரவியல் பகுப் பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. பண்புசார்தரவுகள் கருப்பொருள் பகுப்பாய்விற்கும் உட்படுத் தப்பட்டது. ஆய்வின் முடிவுகளின்படி பெருந் தோட்டத்துறைப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு மாணவிகள் மத்தியிலான மாதவிடாய் சுகாதாரம் குறித்த சிறந்த அறிவு (21.5%) ஆக உள்ளது, திருப்திகரமான அறிவு (43.2%) ஆகவும், குறைந்த அளவி லான அறிவினை (35.3%) ஆனோரும் கொண்டுள்ளனர். மாதவிடாய் சுகாதாரம் குறித்த உளப் பாங்கு பற்றிய முடிவுகளில், மாதவிடாய் என்பது ஆண்களுக்குக் கூற விரும்பாத விடயமாக வும், மாதவிடாய்க் காலங்களில் எரிச்சலாகவும், பதட்டமாகவும், உற்சாகமற்ற பொழுது களாகவும் உணர்வதாகவும் வெளிப்படுத்தி உள்ளனர். மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான நடைமுறைச் செயற்பாட்டில் (86%) ஆனோர் பேட் (Pad) பயன்பாட்டினையும், (14%) ஆனோர் தனித் துணிப்பாவனையையும் மட்டும் பயன்பாட்டில் கொண்டுள்ளனர். மேலும் (77%) ஆனோர் மாதவிடாய்க் காலங்களில் கற்றல் செயல்பாடுகள் தடையாக உள்ளதாகக் குறிப்பிட் டனர். துணி அல்லது பேட்களை (60%) ஆனோர் ஒரு நாளில் நான்கு தடவைகள் மாற்றுகின்றனர். மாணவிகள் மத்தியில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவு, மனப்பாங்கு, நடைமுறைச் செயற்பாடுகளில் தீட்டு அல்லது துடக்கு போன்ற கலாசார நம்பிக்கைகளின் செல்வாக்கு அவர்களின் மாதவிடாய் சுகாதார முகாமைத்துவத்திற்குப் பாரிய சவாலாக உள்ளது. பாட சாலைகளில் மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான உரிய சுகாதாரக்கல்வியினை வழங்குவதன் மூலம் மாதவிடாய் சுகாதாரம் குறித்த அறிவு, உளப்பாங்கு மற்றும் நடைமுறைச் செயற்பாடு களில் முன்னேற்றத்தினை ஏற்படுத்த முடியும். |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13073 |
| Appears in Collections: | Cintanai 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| கலைப்பிரிவு மாணவிகளின் மாதவிடாய் சுகாதாரம்.pdf | 3.26 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.