Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13070Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.author | Kularajasingam, P. | - |
| dc.date.accessioned | 2026-09-16T06:58:12Z | - |
| dc.date.available | 2026-09-16T06:58:12Z | - |
| dc.date.issued | 2025 | - |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13070 | - |
| dc.description.abstract | சங்க இலக்கியங்கள் தொன்மையானவை. சங்ககாலத்து தமிழர்களின் உணவுகளையும் சமையல் முறைகளையும் விருந்தோம்பல்களையும் உணவுப்பரிமாற்றங்களையும் கண்டறி தலே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். சங்ககால மக்களின் உணவு முறை மற்றும் சமையல் முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஐவகை நில அமைப்புக்களுக்கேற்ப அங்கு விளையும் உணவுகளை இயற்கையோடு கூடிய முறையில் சுவையாகப் பக்குவப்படுத்தி தங்களுடைய பசியை போக்கி வந்துள்ளமை கண்டறியப்படுகின்றது. உணவுகள் நிலத் துக்கு நிலம் வேறுபட்டிருப்பதையும் பண்டமாற்று முறையில் உணவுகளைப் பரிமாறிக் கொண்டதையும் மிக அழகாகப் புலவர்கள் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். சங்க இலக்கியங்களில் உள்ள அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு போன்ற நூல்களிலும் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம், புறநானூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற புறவாழ்வு பற்றிக்கூறும் நூல்களில் பழந்தமிழர்களின் உணவு பற்றிய கருத்துக்களைத் திரட்டி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு விபரண, சமூக விஞ்ஞான ஆய்வாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுகள் சங்க இலக்கியங்களில் இருந்து பெற்ற ஆய்வுக் கோவைகளிலும் கட்டுரைகளிலும் இருந்து பெறப்பட்டன. திட ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உணவுகளை எவ்வாறு தேடி கண்டுபிடித்து அதனை காலநிலைக்கேற்ப பக்குவப்படுத்தி, செய்யும் தொழிலுக்கேற்பவும் உணவு வேளைக்கேற்பவும் பிரித்து அக்கால மக்கள் உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள் சங்ககால உணவு முறைமைகள், உடல், உள ஆரோக்கியத்திற்கு உதவியமையை இந்த ஆய்வினூடு வெளிக்கொணர்ந்துள்ளோம். | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.subject | சங்ககால இலக்கியம் | en_US |
| dc.subject | தமிழர் உணவு | en_US |
| dc.subject | சமையல் முறை | en_US |
| dc.subject | விருந்தோம்பல் | en_US |
| dc.subject | உணவு வேளை | en_US |
| dc.subject | ஆரோக்கியம் | en_US |
| dc.title | சங்ககால தமிழர் உணவுகள் | en_US |
| dc.type | Journal full text | en_US |
| Appears in Collections: | Cintanai 2025 | |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| சங்ககால தமிழர் உணவுகள்.pdf | 1.89 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.