Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13060
Title: பண்டைத்தமிழ்ச் சமூகத்தில் வேளாண்மை
Authors: Seranjan, S.
Keywords: வேளாண்மை;உற்பத்திகள்;உருமாற்றம்;நாடோடி
Issue Date: 2026
Publisher: Akhil Publications
Abstract: சங்க காலம் ஒரு நிலைமாறு காலகட்டமாகும். இனக்குழுவாக இருந்த சமூகம் நிலவுடமையாக மாறிய காலமாகும். இனக்குழுச்சமூகத்தில் உணவுக்காக அலைந்து திரிந்த மனிதன் நிலவுடமைச்சமூகத்தில் உணவை உற்பத்தி செய்யத் தொடங்கினான். இயற்கையுடன் இயைந்து வாழ்ந்த சங்ககால மக்கள் நிலவியல் பின்புலத்தில் தங்களது உற்பத்தி முறைகளை உருவாக்கியிருந்தனர். குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் வலுவிழந்து மருத நிலங்களாக உருமாற்றம் கொள்ளத் தொடங்கிய போது இந்நில மக்களின் வாழ்வியலானது பயிர்ச்செய்கையை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மைத் தொழிலிலேயே தங்கியிருந்தது. இந்த வேளாண்மைத் தொழிலானது மனித வலுவை மூலதனமாகவும் நிலத்தை அடிப்படையாகவும் கொண்டு மேற்கொள்ளப் படுவதாகும். சங்க சமூகத்தில் உழவு முக்கியமான பொருளாதாரச் செயலாகவும் சமூகத்தின் அடித்தளமாகவும் விளங்கியிருந்தது. பொருளாதாரச் செயற்பாட்டில் வேளாண்மைத் தொழிலின் முக்கியத்துவத்தையும் அத்தொழிலில் கையாளப்பட்ட தொழில் நுட்பங்களையும் இவ்வாறான தொழில் நுட்பங்களின் வளர்ச்சி பயிர்ச்செய்கை நடவடிக்கையிலும் சமூகத்திலும் ஏற்படுத்திய மாற்றங்களையும் வெளிக்கொண்டு வருவதே இந்த ஆய்வினது நோக்கமாக அமையப் பெற்றுள்ளது. விபரண மற்றும் பகுப்பாய்வு முறைகள் இந்த ஆய்வின் அணுகுமுறைகளாக அமையப் பெற்றுள்ளன.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/13060
Appears in Collections:Tamil



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.