Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12965| Title: | பட்டினப்பாலை - மீள்வாசிப்பு |
| Authors: | Sivasubramaniam, S. |
| Keywords: | பட்டினம்;பாலை;காவிரி;கரிகாலன்;பிரிதல்;போர் |
| Issue Date: | 2021 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | பட்டினம்+பாலை என்பதே பட்டினப்பாலை எனப்பட்டது. பட்டினம் என்பது காவிரிப்பூம் பட்டினம் என்பதைக் குறிக்கும். முற்காலச் சோழநாட்டின் தலைநகரமாக இது விளங்கியது. இது கடற்கரை நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது. பாலை என்பது பிரிதலும் பிரிதல் நிமித்தத்தையும் உரிப்பொருளாகக் கொண்ட ஒழுக்கத்தை அடையாளப்படுத்துகிறது. துறையாக செலவு அழுங்குதல் (தலைவியைப் பிரிந்து செல்லுதலைக் கைவிடுதல்) அமைகின்றது. ஆய்வு நோக்கம்:- பட்டினப்பாலை அகத்திணை பேசும் நூலாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது புறத்திணை இயலையும் பேசுகின்றது என்பதனை ஆய்விற்கு உட்படுத்துதல் இதில் சுட்டப்படும் மன்னர் பெயர் (கரிகாலன்- திருமாவளவன்) ஒன்றா வேறா என்ற சர்ச்சையை ஆய்விற்கு உட்படுத்தல். ஆய்வின் கருதுகோள்:- அகப்புற இலக்கியமே பட்டினப்பாலை எனப் பகுப்பாய்வு செய்து காட்டப்படும். கரிகாலனே திருமாவளவன் என நிறுவப்படுகிறது. ஆய்வு முறையியல்:- விபரண ஆய்வு, பகுப்பாய்வு முறை, விமர்சன ஆய்வு முறை என்ற முறையியல்களை அடிப்படைகளாகக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்படுகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12965 |
| Appears in Collections: | Tamil |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| பட்டினப்பாலை.pdf | 2.65 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.