Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12964| Title: | புறநானூற்றில் இயல்பும் உயர்வும்: இயன்மொழித் துறைப் பாடல்களின் வழியான கண்டடைதலும் மறுவாசிப்பும் |
| Authors: | Ajanthakumar, T. |
| Keywords: | இயன்மொழி;பண்பாடு;மறுவாசிப்பு;வரலாறு |
| Issue Date: | 2021 |
| Publisher: | University of Jaffna |
| Abstract: | பண்டைத் தமிழர்களின் வரலாற்றை அறிவதற்கான கருவியாய். சங்கத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூறும் விளங்குகின்றது. புறநானூற்றில் 63 துறைகளில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துறைகளில் ஒன்றாக விளங்குவதே இயன்மொழி ஆகும். அதிக பாடல்களைக் கொண்ட இத்துறைப்பாடல்களின் ஊடாக இயல்பை வெளிக்கொணர்வதில் புறநானூற்றின் வகிபாகத்தை மதிப்பீடு செய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை ஆகிய வற்றின் விளக்கத்திற்கு அமைவானதாகவும் தற்காலப் பார்வைக்கு ஏற்றவாறும் எவ் வாறு இயன்மொழித் துறைப்பாடல்கள் அமைகின்றன என்ற கேள்விக்கான ஆராய்வே இக்கட்டுரை ஆகும். இயன்மொழி என்ற பெயரைத்தாண்டி மிகையுணர்ச்சி கள் வெளிப்பட்டு நின்றாலும் அவற்றில் இயல்பும், வரலாறும், தொடர்ச்சியும், பண் பாட்டுப்பதிவும் திரண்டிருப்பதற்கான சான்றுகளை எளிமையாக இனங்காணமுடி கின்றது. ஏனைய தொகை நூல்களின் செய்திகளுடன் ஒத்துப்போவதையும், ஏனைய துறைப் பாடல்களுடன் ஒத்துப்போவதையும் காணும் போது இவ்விலக்கியத்தின் நம் பகத்தன்மையை உறுதிசெய்யமுடிகின்றது. இவ்ஆய்வானது விவரண ஆய்வாகவும், பகுப்பாய்வாகவும் அமைகின்றது |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12964 |
| Appears in Collections: | Tamil |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| புறநானூற்றில் இயல்பும் உயர்வும்.pdf | 2.65 MB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.