Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12710Full metadata record
| DC Field | Value | Language |
|---|---|---|
| dc.contributor.author | Arulsteepan, M. | - |
| dc.contributor.author | Mary Winifreeda, S. | - |
| dc.date.accessioned | 2026-06-09T05:29:33Z | - |
| dc.date.available | 2026-06-09T05:29:33Z | - |
| dc.date.issued | 2024-07 | - |
| dc.identifier.uri | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12710 | - |
| dc.description.abstract | சமயங்கள் மனிதனுடைய அன்றாட வாழ்வியலுடன் இரண்டறக் கலந்துவிட்டதாகக் காணப்படுகின்றன. நாடோடிகளாக அலைந்து திரிந்த மனிதர்களை ஒன்றிணைத்து சமூகமாக உருவாக்குவதில் சமயங்களும் சமயத் தளங்களான ஆலயங்களும் பிரதான பங்கினை வகித்து வருகின்றன. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னரான காலப்பகுதிகளில் இருந்து பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திற்குட்பட்ட கிளாலிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட புனித யாகப்பர் ஆலயத்தினை மையப்படுத்தி கிறிஸ்தவ சமூக உருவாக்கம் நடைபெற்றுள்ளது. சமூக உருவாக்கமானது குறிப்பாக வழிபாடுகள், கிறிஸ்தவக் கலைகள், கிறிஸ்தவ சடங்குகள், கலாசார அம்சங்கள் என்பவற்றின் மூலம் இடம்பெற்றுள்ளது. ஆய்வானது கிளாலி புனித யாகப்பர் ஆலயம் போர்த்துக்கேயர் காலந்தொடக்கம் இன்று வரை கிறிஸ்தவ சமூக உருவாக்கப் பாரம்பரியத்தில் எவ்வாறான பங்களிப்பினை வழங்கி வருகின்றது என்பதை வெளிக்கொணருதல் என்னும் பிரதான நோக்கத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கிளாலியில் வாழ்ந்த மக்களுடைய விசுவாசம், ஆலயத்தினை மையப்படுத்தி நடைபெற்ற தேர்ப் பவனி மற்றும் ஏழு கூட்டுப் பவனி, திறமையான கலைஞர்கள், மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமை என்பன சமூக உருவாக்கத்திற்கு வளமூட்டிய விடயங்களாக அமைகின்றன. எனினும் அண்மைக் காலங்களில் சமூக உருவாக்கங்கள் வலுவிழந்து செல்கின்றமையினை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இக் கிராமத்தில் இடம்பெற்ற நீண்டகால இடப்பெயர்வு, மக்களுடைய விசுவாச வாழ்வில் ஏற்பட்ட தளர்ச்சி, ஆலயத்தினை மையப்படுத்தி நடைபெற்ற சடங்குகள் நடைபெறாமை, இளைஞர்களின் பங்களிப்புக்கள் குறைந்தமை போன்றவை சமூக உருவாக்கங்களின் வலுவிழப்பிற்குக் காரணிகளாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நேர்காணல், களஆய்வு என்பவற்றின் மூலம் அவதானிப்பு முறையும், நூல்கள், ஆய்வேடுகள், சஞ்சிகைகளில் பெறப்பட்ட தரவுகள் தொகுத்தறிவு முறையி னூடகவும் பெறப்பட்ட தரவுகள் ஒப்பிட்டாய்வு மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. எனவே இவ் ஆய்வுப் பிரச்சனைக்குப் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதன் மூலம் வலுவிழந்து செல்லும் சமூக உருவாக்கங்களை மீளுருவாக்கம் செய்யவும் அதன் நீடித்த நிலைத்திருப்பிற்கும் உதவவும் முடியும் என்பதை ஆய்வு எடுத்துரைக்கின்றது. | en_US |
| dc.language.iso | other | en_US |
| dc.publisher | University of Jaffna | en_US |
| dc.subject | கிளாலி | en_US |
| dc.subject | சமூக உருவாக்கம் | en_US |
| dc.subject | கிறிஸ்தவம் | en_US |
| dc.subject | யாகப்பர் ஆலயம் | en_US |
| dc.subject | சடங்குகள் | en_US |
| dc.title | கிளாலி புனித யாகப்பர் ஆலயம்: கிறிஸ்தவ சமூக உருவாக்கப் பாரம்பரியம் பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை | en_US |
| dc.type | Article | en_US |
| Appears in Collections: | Cintanai 2024 | |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| கிளாலி புனித யாகப்பர் ஆலயம்.pdf | 623.01 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.