Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12437
Title: பாலர் மூளைவாத நோயில் நாள் நட்சத்திரங்களின் செல்வாக்கு
Authors: Miraaj, R.
Sivashanmugarajah, S.
Keywords: பாலாரிட்டம்;பாலர் மூளைவாதம்;நாள்;நட்சத்திரம்;சோதிடம்
Issue Date: 2018
Publisher: Unit of Siddha Medicine, University of Jaffna
Abstract: பாலருக்கு ஏற்படும் மூளைவாதமானது பெரும்பாலும் பிறப்பிலிருந்தே ஏற்படுகிறது. குழந்தை பிறக்கும் போது ஏற்படும் மூச்சுத்திணறல் அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதன் விளைவாக குழந்தை பிறந்தவுடன் அல்லது சில நாட்களுக்குள் இறக்கவும் நேரிடுகிறது. அவ்விதம் இறக்காவிடின் உடல், உள விருத்திக் குறைபாடுகளுடன் குழந்தை சில காலமோ அன்றில் பல காலமோ வாழக்கூடும். குழந்தை பிறந்தவுடன் இறத்தல் சொற்ப காலத்தில் இறத்தல் அல்லது நோயினால் துன்பப்படுதல் போன்ற விடயங்களை பாலாரிட்டம் என்று சோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. சோதிட ரீதியாக நோக்குமிடத்து நோய்களை ஏற்படுத்துவதில் ஒருவர் பிறந்த நட்சத்திரம், பிறந்தகிழமை(நாளி) இதிதி, கிரக அமைப்பு போன்ற பல்வேறு விடயங்கள் சம்பந்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வானது பாலருக்கு மூளைவாத நோய் ஏற்படுவதற்கும் அவர்களின் பிறந்த நட்சத்திரம், பிறந்த கிழமை (நாள்) என்பவற்றுக்கும் இடையிலான தொடர்புபற்றி அறிந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்காக கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் 24.08.2017 தொடக்கம் 26.11.2017 வரை உள்ளகப்பிரிவில் மூளைவாத சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 07 குழந்தைகளின் தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி குழந்தைகள் பிறந்த நேரம் பெறப்பட்டு திருக்கணித பஞ்சாங்கங்களுடன் ஒப்புநோக்கப்பட்டு அவர்களின் பிறந்த நட்சத்திரம் பிறந்தகிழமை(நாள்) திதி என்பன அட்டவணைப்படுத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகள் 14%, திங்கட்கிமை 29%(2), செவ்வாய்க்கிழமை14%(0,புதன்கிழமை 29%(2), சனிக்கிழமை14%(ஆகவும், மிருகசீரிடம் 14%(0), அவிட்டம் 44%(3), அத்தம்14%0, உத்தரட்டாதி 14%0 ஆகவும், பௌர்ணமியில் 29%2 வளர்பிறை29%(2) தேய்பிறை43% (3), ஆகவும் காணப்பட்டனர். ஜோதிட நூல்களுடன் ஒப்புநோக்கி ஆராய்ந்தபோது புதன்கிழமை அவிட்ட நட்சத்திரதிதில் பிறக்கும் குழந்தை நோயால் மிகவும் துன்பப்படும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 2 குழந்தைகள் (29%) அவ்விதம் பிறந்துள்ளன. மேலும் பௌர்ணமியில் பிறந்த இரு குழந்தைகளும் (29% கண்டாந்தத்தில் (திதியந்தமி)பிறந்துள்ளன. கண்டாந்தத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அரிட்டம் உண்டாகும் என்பது சோதிடவிதி. எனவே பாலாரிட்டம் என்று சோதிடநூல்கள் கூறுவதற்கும் பாலர் பக்கவாதத்துக்கும் இடையில் தொடர்புகள் இருப்பது உறுதியாகின்றது. இந்த ஆய்வானது பிறந்த நட்சத்திரம் பிறந்தகிழமை(நாள்) திதி என்பனவற்றை அடிப்படையாக கொண்டதாக அமைந்துள்ள போதிலும் குழந்தையின் ஜாதக கிரக அமைப்பை நன்கு ஆராய்வதன் மூலம் மூளைவாத நோய்க்கு சோதிட ரீதியான காரணங்களைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள முடியும்.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12437
Appears in Collections:Siddha Medicine



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.