Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12363
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorDilakshana, J.-
dc.contributor.authorGenesalingam, K.T.-
dc.date.accessioned2026-03-12T06:10:58Z-
dc.date.available2026-03-12T06:10:58Z-
dc.date.issued2025-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12363-
dc.description.abstractஅமெரிக்க – சீன உறவு என்பது 1949ம் ஆண்டு மாவோ சேதுங் ஆட்சியினைத் தொடர்ந்து விரிசல் அடைந்தாலும் இரண்டாம் உலகப் போரில் இரு நாடுகளும் நட்பு நாடுகளாக இருந்தன. இருப்பினும், கொரியப் போர் மற்றும் வியட்நாம் போரின் போது சீனா அமெரிக்காவை எதிர்த்தது. சீன உள்நாட்டுப் போரில் கோமின்டாங் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 1972 வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அமெரிக்க - சீன உறவுகளை மீட்டெடுத்தவர் அப்போதைய அமெரிக்க வெளியுறவுச் செயலாளராக இருந்த ஹென்றி கிஸ்ஸிங்கர் ஆவார். 1972இல் கிஸ்ஸிங்கரின் சீனாவிற்கான இரகசிய பயணத்தின் பின்னர், ஜனாதிபதி நிக்சனும் பெய்ஜிங்கிற்கு பயணம் செய்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் தொடக்கத்தைக் குறிப்பதாகவுள்ளது. இந்தக் காலகட்டத்தில், டெங்சியோ பிங்கின் நடவடிக்கைகள் சீனாவிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தன. புதிய மிலேனியத்தில் உலக வர்த்தக அமைப்பில் சீனாவின் உறுப்பினரானமை அமெரிக்காவின் உதவியுடன் மட்டுமே சாத்தியமானது. இந்த சூழலில் ஹென்றி கிஸ்ஸிங்கரினால் ஏற்படுத்தப்பட்ட இரு நாட்டு உறவின் மீதான தாக்கம் முக்கியமானது. கிஸ்ஸிங்கரால் நிறுவப்பட்ட இருதரப்பு உறவு இரு நாடுகளுக்கும் பயனளிப்பது மட்டுமல்லாமல் உலக ஒழுங்கையும் மாற்றத்திற்கு உட்படுத்தியள்ளது. இந்த ஆய்வு, அமெரிக்கா-சீன உறவுகளில் கிஸ்ஸிங்கரினால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தினை ஆய்வுப் பிரச்சினையாகப் புரிந்துகொள்ளும் நோக்கத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் நோக்கம், அமெரிக்கா-சீன உறவில் ஹென்றி கிஸ்ஸிங்கரின் பங்கை அடையாளம் காண்பதாகும். மேலும் இந்த ஆய்வுக்கு, அகநிலைவாதம் மற்றும் விமர்சன யதார்த்தவாதம் ஆகியவை ஆய்வு முறையியல்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அகநிலைவாதம், கிஸ்ஸிங்கர் தனது உத்தி மூலம் இருதரப்பு உறவை எவ்வாறு உருவாக்க முயற்சித்தார் என்பதையும், உலகைப் புரிந்துகொள்வது மனித மனதின் மூலம் என்பதையும் காட்டியுள்ளார். இருதரப்பு உறவை உருவாக்க கிஸ்ஸிங்கர் தனது சிந்தனையையும் செயல்களையும் எவ்வாறு வடிவமைத்தார் என்பதை விமர்சன யதார்த்தவாதம் விமர்சன ரீதியாக விவாதிக்கிறது. கம்யூனிசத்திற்கு எதிரான போரில் சோவியத் ஒன்றியத்துடன் கூட்டணி வைத்த நாடுகளை முதலாளித்துவத்தின் பக்கம் அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தின் அடிப்படையில் அமெரிக்கா மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் மாற்றத்திற்கான தேவை சீனாவின் உற்பத்தித் தேவையுடன் தொடர்புடையது என்றாலும் உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவை அடைய முடியாது என்பதை உணர்ந்ததால், சீனாவின் சந்தை வாய்ப்பும் உற்பத்தியும் சுருங்கிக்கொண்டிருந்தன. அமெரிக்கா இதை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உருவானது. சீனாவிற்கு உலக சந்தை வாய்ப்பைத் திறந்து விடுவதற்கும், போதுமான முதலீடுகளைச் செய்வதற்கும், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீனப் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கும் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் தேவையைப் பூர்த்தி செய்யமுடிந்தாலும், சோவியத் ஒன்றியத்திற்கு முன் சீனாவின் தேவையைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதே கிஸ்ஸிங்கரின் அரசியல் ஞானமாக இருந்தது. சீனாவிற்கு உலக சந்தை வாய்ப்பைத் திறப்பதன் மூலம், அமெரிக்காவை நோக்கி சீனாவின் நிபந்தனையற்ற நகர்வு கம்யூனிஸ்டுகளின் இருப்பில் சரிவை ஏற்படுத்தும் என்பது கிஸ்ஸிங்கரின் கருத்தாகும். சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு கிஸ்ஸிங்கரின் மறைமுக பங்களிப்பும் மிக முக்கியமானது. உலக வரலாற்றைப் பற்றிய அவரது ஆழமான புரிதலின் அடிப்படையில் சர்வதேச உறவுகளின் விதிகளை துல்லியமாகப் பயன்படுத்துவதன் மூலம் கிஸ்ஸிங்கரின் உளவுத்துறை உருவாக்கப்பட்டது. இவ்வாய்விற்காக, ஹென்றி ஹிஸ்ஸிங்கரினது இராஜதந்திரம் (Diplomacy), சீனாவில் (On China) உலக ஒழுங்கு (World Order), தலைமைத்துவம்:உலக மூலோபாயத்தில் ஆறு கற்கைகள் (Leadership:Six studies in world strategy) போன்ற நூல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 1972ல் இடம்பெற்ற ஹிஸ்ஸிங்கரின் சீனாவிற்கான பயணம் பற்றியும் அதில் இடம்பெற்ற சீனத் தலைவர்களுடனான சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை முயற்சிகள் என்பனவும் “Kissinger On China” என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காசீனா உறவுகளைப் பொறுத்தவரை, சுமார் 23 ஆண்டுகளாக இருந்த முரண்பட்ட உறவை சரிசெய்து, சீனாவுடன் நட்புறவை கையாள்வதன் மூலம் கம்யூனிச சகாப்தத்தில் அமெரிக்காவை ஆதிக்கம் செலுத்தச் செய்யவும் சரியான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி இராஜதந்திர உத்திகளை வகுத்த கிஸ்ஸிங்கரின் தலைமை அமெரிக்காவிற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectவெளியுறவுக் கொள்கைen_US
dc.subjectதலைமைத்துவம்en_US
dc.subjectஉலக ஒழுங்குen_US
dc.subjectதேசிய நலன்en_US
dc.subjectதேசிய பாதுகாப்புen_US
dc.titleஅமெரிக்க - சீன உறவினைக் கட்டமைப்பதில் ஹென்றி ஆல்ஃபிரட் கிஸ்ஸிங்கரின் வகிபாகம்: ஓர் ஆய்வுen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.