Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12361| Title: | இலங்கையில் அதிகரிக்கும் இணையவழிக் குற்றங்கள்: நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மையப்படுத்திய ஆய்வு |
| Authors: | Divya, M. Vigneswaran, T. |
| Keywords: | சட்ட அமுலாக்கம்;அடிப்படை உரிமைகள்;விழிப்புணர்வு;மனித உரிமைகள் |
| Issue Date: | 2025 |
| Publisher: | Faculty of Arts University of Jaffna, Sri Lanka |
| Abstract: | இலங்கையில் இணையப் பயன்பாடு அதிகரித்து வருவதால் இணையவழி குற்றங்களும் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன. இது தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது. இந்த ஆய்வானது, இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களின் சிக்கலான தன்மையை ஆராய்வதையும், தற்போதுள்ள சட்ட கட்டமைப்பான நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் செயல்திறனை மதிப்பிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஆய்வு இணையவழி குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்களை, நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் மூலம் பலம் மற்றும் பலவீனங்கள் நிவர்த்தி செய்ய முடியுமா? என்பதையும் இந்தச் சட்டம் குறித்து பொதுமக்களின் புரிதல் ஆகிய முக்கிய அம்சங்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டது. நிகழ் நிலை காப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் இணையவழி குற்றங்களைக் கையாள்வதில் அதன் செயல்திறன் ஆகியவை மதிப்பீடு செய்யப்பட வேண்டியதாகும். இந்தச் சட்டம் சில குறிப்பிட்டு இணையவழி குற்றங்களை வரையறுத்து அதற்கான தண்டனைகளை வழங்கச் சட்டம் திட்டமிட்டாலும் நடைமுறை அமுலாக்கத்தில் உள்ள சவால்கள், சட்டத்தின் தெளிவின்மை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப புதுப்பிக்கப்படாமை போன்ற அம்சங்கள் ஆராயப்படுகின்றன. குறிப்பாக வேகமாக வளர்ந்து வரும் புதிய வகையான இணையவழிக் குற்றங்களை கையாள்வதில் இந்தச் சட்டம் போதுமானதாக அமைந்துள்ளதா, இல்லையா என்பதையும் இச் சட்டம் அடிப்படை உரிமைகளை மட்டப்படுத்துகிறதா என்பதையும் ஆய்வின் மூலம் தெரிந்துக்கொள்ள முயலுகிறது. சட்டத்தின் தெளிவின்மையை நீக்குதல், தண்டனைகளை கடுமையாக்குதல், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சரத்துக்களை வலுப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப சட்டத்தைப் புதுப்பித்தல் போன்ற திருத்தங்கள் மற்றங்களினை உள்வாங்கக்கூடிய பரிந்துரைகளை முன்வைக்க திட்டமிடுகிறது. மேலும் நாடு முழுவதும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான விரிவான கல்வி மற்றும் பயிற்சி திட்டங்களின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இறுதியாக இணையவழி குற்றங்கள் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பல்வேறு உத்திகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாய்வு முதலாம் நிலை மற்று இரண்டாம் நிலைத்தரவுகளினை அடிப்படையாகக் கொண்டு விமர்சனப்பகுப்பாய்வு முறையினுடாக முன்னேடுக்கப்படுகின்றது. இந்த ஆய்வு இலங்கையில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்தச் சிக்கலை திறம்படு கையாள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை நிகழ்நிலை காப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் சாத்தியப்படுத்த முயலுகிறது. டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் இலங்கையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கமுடியும். இந்த ஆய்வு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆய்வுகளுக்கு ஓர் அடித்தளமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12361 |
| Appears in Collections: | URSA 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| இலங்கையில் அதிகரிக்கும் இணையவழிக் குற்றங்கள்.pdf | 180.51 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.