Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12296
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorSathana, M.-
dc.contributor.authorSelva Ambigai, N.-
dc.date.accessioned2026-03-04T03:35:47Z-
dc.date.available2026-03-04T03:35:47Z-
dc.date.issued2025-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12296-
dc.description.abstractபாமர மக்களினால் காலம் காலமாகப் பேணப்பட்டு வந்த நாட்டார் கலைகள் இன்றைய காலத்திலே நிலைத்திருப்பது என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. நாட்டார் கலைகளின் வாயிலாகவே கிராமிய மக்களின் வாழ்வியல் அம்சங்களை புரிந்துகொள்ள முடிகின்றது. நாட்டார் கலைகளில் நிகழ்த்து கலைகள் என்பது மிக முக்கியமானதாகவே அமைகின்றது. அந்தவகையில் நிகழ்த்துக்கலைகளிலே முதன்மையான கூத்துக்கலை தம்பாட்டி பிரதேச மக்களால் 80 வருட காலங்களாகப் பேணப்பட்டு வந்துள்ளது. ஆனால் இக்கலைகளை இன்றைய கால சந்ததியினருக்கு கையளிப்பு செய்வது என்பது சவாலாகவே உள்ளது. ஏனெனில் இன்றைய சமுதாயத்தினர்களால் கலைகளினுடைய தேவை உணரப்படுகின்றதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அந்த வகையில் நாட்டார் நிகழ்த்து கலைகளும் கையளிப்பும் தம்பாட்டி பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்விலே தம்பாட்டி பிரதேசத்திலே மக்களால் பேணப்பட்டு வந்த கலைகள் எவை? அக்கலைகள் அனைத்தினதும் தோற்றம் அத்தகைய நிகழ்த்துக்கலைகளை எவ்வாறு கையளிப்பு செய்தனர், கையளிப்பு செய்வதிலே தாக்கம் செலுத்திய காரணிகள் தொடர்பாக ஆராய்வது இதனுடைய நோக்கமாகும். இதன் அடிப்படையில் தம்பாட்டி பிரதேசத்தின் அறிமுகம் தம்பாட்டி பிரதேசத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்ட நிகழ்த்து கலைகள் எவை? கலைகளின் போது பின்பற்றப்படுகின்ற சடங்குகள், பழக்கவழக்கங்கள், கலைகளின் பங்களிப்பு முறைகள், கலைகளினை கையளிப்பு செய்வதில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற காரணிகள், கலைஞர்களுடைய வாழ்வியல் நிலை என்பவற்றை இந்த ஆய்வினுடைய கருப்பொருள்களாகக் கொண்டு நாட்டார் நிகழ்த்து கலைகளும் கையளிப்பும் தம்பாட்டி பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வினுடைய உத்தேச முடிவாக பாரம்பரியத்தை பாதுகாக்கின்ற வகையில் தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்டு வந்த நாட்டார் நிகழ்த்துக்கலைகளுக்கு முன்னைய காலத்திலே காணப்பட்ட வரவேற்பு மற்றும் மதிப்பு இன்றைய சூழலில் குறைவாக காணப்படுகின்றமை, மேலும் இத்தகைய கலைகளை தொழிநுட்பவளர்ச்சி, நவநாகரீக மோகம் முதலான பல காரணங்களினால் இனிவருகின்ற சந்ததியினருக்கு கடத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாகக் காணப்படுகின்றமை என்பன அமைகின்றன. இந்த ஆய்விற்கான தரவுகள் பிரதான மூலங்கள், துணை மூலங்கள் என இரண்டு அடிப்படையில் திரட்டப்பட்டுள்ளன. இதனடிப்படையில ஆய்வினுடைய பிரதான மூலங்களாக களஆய்வின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அதாவது நேர்காணல்கள் மற்றும் அவதானிப்புக்கள் மூலமாக பெறப்பட்ட தகவல்களும்,துணை மூலங்களாக நாட்டார் கலைகள் தொடர்பாக வெளிவந்த நூல்கள், மற்றும் கட்டுரைகள் என்பனவும் பயன்படுகின்றன. ஆய்வு முறையில்களை நோக்குகின்ற போது வரலாற்று ஆய்வு முறையியல் தம்பாட்டி பிரதேசத்தில் கலைகளின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை தொடர்பாக அறிந்து கொள்ளவும். கலைகள் தொடர்பாக விளக்குகின்ற பொழுதுவிபரண முறையிலயலும் ஆய்வு பிரதேசத்திற்கு சென்று அங்கு நேரடியாக தரவுகளைச் சேகரித்து பதிவு செய்ததன் வாயிலாக களஆய்வு முறையியலும் இந்த ஆய்வினை மேற்கொண்டு செல்ல வழிகோலியுள்ளன.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectநாட்டார் நிகழ்த்துகலைen_US
dc.subjectகூத்துen_US
dc.subjectகையளிப்புen_US
dc.subjectகலைஞர்கள்en_US
dc.subjectவாழ்வியல்en_US
dc.titleநாட்டார் நிகழ்த்து கலைகளும் கையளிப்பும்:தம்பாட்டிப் பிரதேசத்தை அடிப்படையாகக்கொண்ட ஆய்வுen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.