Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12293
Title: பிரயோக அரங்க முறையும் முறையியலும்: யாழ்ப்பாண அரங்கப்பயில்வுகளை அடிப்படையாகக்கொண்ட ஆய்வு
Authors: Sutharsini, M.
Navatharshani, K.
Keywords: பிரயோக அரங்கு;மரநிழல் அரங்கு;மக்கள் அரங்கு;அரங்க வடிவங்கள்
Issue Date: 2025
Publisher: Faculty of Arts University of Jaffna, Sri Lanka
Abstract: இந்த ஆய்வானது, யாழ்ப்பாணத்தில் நிலவுகின்ற பிரயோக அரங்க நெறிமுறைகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் பிரயோக அரங்குகள் மேற்கொள்கின்ற அரங்கக் குழுக்கள் சிலவற்றின் செயற்பாடுகளை பரிசீலித்து பிரயோக அரங்க நெறிமுறைகள் தொடர்பாக ஆராய்வதாக அமைகின்றது. யாழ்ப்பாணத்தில் 30 வருட யுத்தத்தின் பின்னர் சமூகம் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியதால் சமூக மாற்றத்திற்கான ஒரு சில பிரயோக அரங்குகள் தேவைப்படுகின்றன. ஆனால் தற்பொழுது பயில்நிலையில் உள்ள பிரயோக அரங்கின் செயற்பாடுகளில் அவை நிகழ்த்தப்படும் முறைமைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதாவது யாழ்ப்பாணத்தில் பிரயோக அரங்கை மேற்கொள்ளும் கலைஞர்கள் பிரயோக அரங்கத்துறையில் முறைப்படி பயிற்சி பெறாதவர்களாகக் காணப்படுகின்றனர். பிரயோக அரங்கு தொடர்பான ஒழுங்கு விதிமுறைகள் தொடர்பான தெளிவின்மையும் அறிவின்மையும் ஒகஸ்தாப்போலின் அரங்கின் உடைய வெவ்வேறான வியாக்கியானங்கள், துறை சார்ந்த நிபுணத்துவமின்மை போன்ற பல காரணங்கள் ஆய்வுப் பிரச்சினையாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் பிரயோக அரங்கினை மேற்கொள்கின்ற அரங்கக்குழுக்களின் முறையும் முறையியலும் தொடர்பாக ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது. யாழ்ப்பாணத்தில் பிரயோக அரங்கை மேற்கொள்கின்ற கலைஞர்களின் பயிற்சி முறையினை அறிந்து கொள்ளுதலும், பிரயோக அரங்கிற்கான ஒழுங்கு விதிமுறைகளை பின்பற்றும் முறை தொடர்பாக அறிதலும், மற்றும் கலைஞர்கள் சமூகப் பிரச்சினைகளை அணுகும் திறன்களை தெரிந்து கொள்ளல், பிரயோக அரங்கச் செயற்பாடுகளின் வடிவங்களை அறிந்து கொள்ளுதல், யாழ்ப்பாணத்தில் பிரயோக அரங்க வியாக்கியானங்களை தெரிந்துகொள்ளல் போன்றன உப நோக்கங்களாகக் காணப்படுகின்றன. இவ் ஆய்வானது பண்புசார் அணுகு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரயோக அரங்கின் தோற்றம் வளர்ச்சி பின்னணி முறைகள் முறையில் தொடர்பாக தெளிவாக ஆராய்ந்து அவ்வாறான விடயங்களில் யாழ்ப்பாண பிரயோக அரங்கங்கள் பின்பற்றுகின்ற முறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. எவ்வாறு சமூகப் பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு எவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டு விழிப்புணர்வினை நடத்துகிறார்கள்? பங்குகொள்பார்வையாளர்களின் எதிர்வினைகள் எவ்வாறு அமைந்தன என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
URI: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12293
Appears in Collections:URSA 2025



Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.