Please use this identifier to cite or link to this item:
http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12291| Title: | “காமன் கூத்து” எனும் நிகழ்த்து கலையின் தற்காலப் பயில்வு |
| Authors: | Hashani, R. Selvamanoharan, T. |
| Keywords: | கலை;தற்காலம்;மலையகம்;கூத்து;பயில்நிலை |
| Issue Date: | 2025 |
| Publisher: | Faculty of Arts University of Jaffna, Sri Lanka |
| Abstract: | கூத்துக்கள் ஒரு இனத்தின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு என்பவற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகவே காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி கூத்துக்கள் பல வரலாற்றுச் செய்திகளைத் தெரிவிப்பதாகவும் காணப்படுகின்றன. இவ்வாறாக பாரம்பரிய பண்பாட்டு கலாசாரங்களை பறைசாற்றுகின்ற கூத்துக்கள் இன்றளவும் மக்களால் ஆடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. ஆரம்ப பாரம்பரியக் கூத்துக்கள் இதிகாச, புராண காவியங்களின் கதைகளை மாத்திரம் வெளிப்படுத்தின. இம்மலையகக் கூத்துக்கள் பிற்காலத்தில் அறிவியல் சிந்தனைகளின் நிமித்தம் பல்வேறு பரிணாமங்களைக் கண்டு வளர்ச்சியடைந்தது. மலையக பண்பாடு நவீன கல்வி, நவீன வாழ்வியல் என்று நவீனத்துவத்தின் அடிப்படையில் சென்று கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் தற்கால மாற்றங்களிற்கு மட்டுமே முதன்மை அளிக்கின்ற மனோநிலை மலையக மக்களிடம் ஏற்பட்டிருப்பதினை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் காமன் கூத்தின் தற்கால நிலையை அறிவதே ஆய்வின் நோக்கமாகும். காமன் கூத்து என்பது தமிழ் பாரம்பரியத்தை பிரதிபலித்து வருகின்ற ஒரு கலை வடிவமாகும். அதில் கூத்துகளில் முதன்மைப் பெறுகின்ற ஒரு கூத்து மரபாக இருந்து வந்திருக்கின்றது. அது தமிழர்களின் சமயத்தொன்மம் மற்றும் மொழி, பண்பாட்டியல் போன்ற பல்வேறு தொன்மங்களினை உள்ளடக்கிய ஒன்றாகக் காணப்படுகின்றது. இதன் பின்னணியில் நிகழ்த்து கலையின் தாற்பரியம் அதன் பல்வகைமைத் தன்மை, மெய்யியல் தொடர்பு என்பவற்றோடு அதன் தற்கால இயங்கு நிலை எவ்வண்ணம் உள்ளது என்பதே இங்கு ஆய்வு பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இங்கு ஆய்வு எல்லையாக தமிழ் சூழலில் பொதுவாக கூத்தினை பற்றிப் பார்த்தாலும் மலையகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வு நகர்த்தப்படுகின்றது. இங்கு களஆய்வு, விபரணஆய்வு, அவதானிப்பு ஆய்வு என்பனவும் அடிப்படையாக கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இவற்றில் காமன் கூத்தின் கதை மரபு மற்றும் காமன் கூத்தின் தற்கால பயில்நிலைப் பற்றி அறியக் கூடியதாகக் காணப்படும் அத்துடன் ஆய்வின் மூலமாக கூத்துக்கலை பற்றிய அறிமுகம், காமன் கூத்து பெறும் முக்கியத்துவம், இந்திய சமயங்களில் காமன் கூத்தின் வகிபாகம் மற்றும் கலைக்கும் தத்துவத்திறகும் இடையிலான உறவு என்பனவற்றினூடாகக் காமன் கூத்தினைப் பார்த்தல் அதனுடன் தற்காலத்தில் கூத்துக்கலையின் கற்றல், கற்ப்பித்தல் முறைகள் என்பனவற்றை ஆராய்வதாகவும் இந்த ஆய்வு காணப்படுகின்றது. |
| URI: | http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12291 |
| Appears in Collections: | URSA 2025 |
Files in This Item:
| File | Description | Size | Format | |
|---|---|---|---|---|
| காமன் கூத்து எனும் நிகழ்த்து கலையின் தற்காலப் பயில்வு.pdf | 178.36 kB | Adobe PDF | View/Open |
Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.