Please use this identifier to cite or link to this item: http://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12278
Full metadata record
DC FieldValueLanguage
dc.contributor.authorRanjithamalar, N.-
dc.contributor.authorChandni, A.-
dc.date.accessioned2026-02-27T06:37:45Z-
dc.date.available2026-02-27T06:37:45Z-
dc.date.issued2025-
dc.identifier.urihttp://repo.lib.jfn.ac.lk/ujrr/handle/123456789/12278-
dc.description.abstractஇலங்கையின் பல்கலாசாரத் தன்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் சமன் தெய்வ வழிபாட்டிற்கு முக்கியமான இடம் உண்டு. இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள சமன் தேவாலயமானது சர்வமத பண்பாட்டினைக்கொண்ட வழிபாட்டுத்தலமாகவும் இலங்கையின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் காணப்படுகிறது. இச் சமன் தெய்வ ஆலயம் தற்காலத்தில் பௌத்த வழிபாடுகளைக் கொண்ட இடமாகக் காணப்படுகின்ற போதிலும் இது கௌதம புத்தரது வழிபாட்டுத்தலம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக சிவனொளிபாதமலையின் முதன்மைக் காவல் தெய்வமான சுமண சமன் தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட சன்னதி ஆகும். சமன் கடவுள் இலங்கையின் பாதுகாவல் தெய்வமாகவும் புத்த சாசனத்தின் பாதுகாவலராகவும் பௌத்தர்களால் வழிபடப்படுகிறார். எனினும்; சமன் தெய்வ வழிபாட்டில் ஏனைய மதங்களது செல்வாக்கு எத்தகையது என்பதே இங்கு ஆய்வுப் பிரச்சினையாக இணங்காணப்படுகிறது. ஆகவே இவ்வாய்வானது இரத்தினபுரி சமன் கோயிலை அடிப்படையாகக்கொண்டு இலங்கையில் சமன் தெய்வத்தின் வழிபாட்டு வரலாற்றை ஆய்வு செய்வதாக அமைந்துள்ளது. இதன்மூலம் இரத்தினபுரி சமன் தெய்வத்தின் வழிபாட்டு முறை பௌத்த, இந்து மதச் செல்வாக்கினை ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தன்னகத்தே கொண்டிருந்தமையை வெளிக்கொணருவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். வரலாற்றியல் ஆய்வு அணுகுமுறையைப் பயன்படுத்தப்படும் பண்புசார் ஆய்வாக இவ்வாய்வு அமைகிறது. சமன் தெய்வ வழிபாடு தொடர்பான முதல்நிலைத் தரவுகள் நேர்காணல் மற்றும் அவதானம் என்பவற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்கு முதலாம் நிலை தரவுகளாக களஆய்வு, நேர்காணல், அவதானிப்பு என்பனவும் இரண்டாம் நிலைத்தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள், இணையவழித் தரவுகள் ஆகியனவும் அமைந்துள்ளன. ஆய்வுப் பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளும், கலையம்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன. தற்காலத்தில் சமன் தெய்வ வழிபாட்டு முறை பௌத்த மதத்தின் செல்வாக்கைப் பெற்றுள்ளதன் பின்னணி என்ன என்பது தொடர்பாக ஆராய்வதோடு ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா அல்லது புராதன வழிபாடுகள் அவ்வாறே பின்பற்றப்படுகின்றனவா என்பதும் இங்கு நோக்கப்படுகின்றன. சமன் தெய்வத்தின் வழிபாட்டில் செல்வாக்குச் செலுத்தியுள்ள இந்து மற்றும் பௌத்த சமய அடையாளங்களை இணங்காணும் வகையில் இலங்கையின் சமன் தெய்வ வழிபாட்டு மரபு தெடர்பான ஒரு மீள்வாசிப்பாக இவ்வாய்வு அமையும்.en_US
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts University of Jaffna, Sri Lankaen_US
dc.subjectஇந்துen_US
dc.subjectஇரத்தினபுரிen_US
dc.subjectசமன் தெய்வம்en_US
dc.subjectபண்பாடுen_US
dc.subjectபௌத்தம்en_US
dc.titleஇலங்கையில் சமன் தெய்வம்: இரத்தினபுரி சமன் கோயிலை அடிப்படையாகக்கொண்ட வரலாற்று ஆய்வுen_US
dc.typeConference paperen_US
Appears in Collections:URSA 2025

Files in This Item:
File Description SizeFormat 
இலங்கையில் சமன் தெய்வம்.pdf178.46 kBAdobe PDFView/Open


Items in DSpace are protected by copyright, with all rights reserved, unless otherwise indicated.